Meenaakshi Ramasamy Polytechnic College

Meenaakshi Ramasamy Polytechnic College Meenaakshi Ramasamy Polytechnic College is located at thathanur, Udayarpalayam Taluk, Ariyalur Dt.

M.R.Rahunaathan., Correspondent
N.R.Karthikeyan., Managing Director
S.SivaSankar., Principal

செய்தி வெளியீடு *உலக சதுரங்க நாளை முன்னிட்டு மீனாட்சி இராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் சதுரங்கப் போட்டி* உலக சதுரங்க நா...
20/07/2026

செய்தி வெளியீடு
*உலக சதுரங்க நாளை முன்னிட்டு மீனாட்சி இராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் சதுரங்கப் போட்டி*

உலக சதுரங்க நாளை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம், தத்தனூரில் அமைந்துள்ள மீனாட்சி இராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களிடையே சதுரங்கப் போட்டி உற்சாகமாக நடைபெற்றது.
இப்போட்டியில் பல்வேறு துறைகளைச் சார்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, தங்களது சிந்தனைத் திறன், திட்டமிடல் மற்றும் முடிவெடுக்கும் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டி முழுவதும் மாணவர்கள் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையுடன் விளையாடினர்.
மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் பகுப்பாய்வு சிந்தனையை வளர்க்கும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெற்ற B.பரணிதரன் II YEAR EEE ,இரண்டாம் பரிசு பெற்ற V.பர்வீந்தர் II YEAR MECHANICAL , மூன்றாம் பரிசு பெற்ற A.திவ்யந்த் III YEAR EEE ஆகிய lமாணவர்களுக்கு
எம் .ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர்
எம் ஆர் ரகுநாதன், இயக்குனர் ஆர் இராஜமாணிக்கம்,
எம் .ஆர் பாலிடெக்னிக் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் என்.ஆர் கார்த்திகேயன் மற்றும் முதல்வர் ச.சிவசங்கர் பாராட்டுகளைத் தெரிவித்தது வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினர் . இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் G. குணா சிறப்பாக செய்திருந்தார்.

#மீனாட்சிஇராமசாமிகல்விநிறுவனங்கள்




#மீனாட்சிஇராமசாமிபாலிடெக்னிக்கல்லூரி


#அரியலூர்மாவட்டம்

*தத்தனூர் M.R. பாலிடெக்னிக் கல்லூரியில் உலக இளைஞர்கள் தினம் கருத்தரங்கம்* அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத...
14/07/2026

*தத்தனூர் M.R. பாலிடெக்னிக் கல்லூரியில் உலக இளைஞர்கள் தினம் கருத்தரங்கம்*

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் உலக இளைஞர்கள் தினம் கருத்தரங்கம் கல்லூரி கலையரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இக்கருத்தரங்கத்தில் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் தலைவர் வழக்கறிஞர் எம் ஆர். ரகுநாதன் இயக்குனர் முனைவர் ஆர் ராஜமாணிக்கம் நிர்வாக இயக்குனர்
என் ஆர் கார்த்திகேயன் முதல்வர் ச.சிவசங்கர் துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

கருத்தரங்கத்திற்கு மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்
பா.பழனிவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இளைஞர்கள் வாழ்வில் முன்னேற முயற்சி, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் ஓலையூர் என்ற கிராமத்தில் பிறந்து தனது சுயமுயற்சி, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று எத்தியோப்பியா நாட்டிலுள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக ஏழு வருடங்கள் பணியாற்றி தற்போது மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரியின் முதல்வராக பணியாற்றிக் கொண்டிருப்பதாக பெருமையுடன் கூறினார்.
ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த தன்னால் எப்படி கல்வியால் இன்று உயர்ந்த நிலைக்கு வர முடிந்ததோ அது போல் மாணவர்களாகிய உங்கள் அனைவராலும் நிச்சயமாக கல்வியால் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து பேசினார்.

மாணவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் படிக்கும் துறை சார்ந்த அன்றாட தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து இணையதளங்கள் வழியாக தெரிந்து கொண்டு தங்களது அறிவுத்திறனை ஒவ்வொரு நாளும் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். மாணவர்களாகிய உங்களின் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் மட்டுமே ஒரு அறிவார்ந்த இளைஞர்கள் சமுதாயத்தை உருவாக்க முடியும் என மாணவர்களுக்கு மிகவும் ஊக்கம் அளிக்கும் வகையில் பல கருத்துக்களை பேசினார்.
இக்கருத்தரங்க நிகழ்வின் நிறைவாக பேராசிரியர் தி ஆகாஷ் நன்றியுரையாற்றினார்.

#மீனாட்சிஇராமசாமிகல்விநிறுவனங்கள்




#மீனாட்சிஇராமசாமிபாலிடெக்னிக்கல்லூரி


#அரியலூர்மாவட்டம்

*தத்தனூர் மீனாட்சி இராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் உலக யோகா தின விழா சிறப்பாக நடைபெற்றது* அரியலூர் மாவட்டம் உடையார்பாள...
23/06/2026

*தத்தனூர் மீனாட்சி இராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் உலக யோகா தின விழா சிறப்பாக நடைபெற்றது*

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி இராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் உலக யோகா தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனங்களை மேற்கொண்டனர்.

இந்நிகழ்விற்கு மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் சேர்மன் வழக்கறிஞர் எம் ஆர் இரகுநாதன் வாழ்த்துக்களை தெரிவித்து யோகா மனிதனின் உடல்நலம் மனநலம் மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்தும் சிறந்த பயிற்சியாக விளங்குகிறது என குறிப்பிட்டார்.

மேலும் ஜெயங்கொண்டம் மனவளக்கலை மன்றம் அறிவுத் திருக்கோவில் அமைப்பைச் சார்ந்த பேராசிரியர் எஸ்.ஞானசௌந்தரி பேராசிரியர் ஜெ.கௌசல்யா, துணைப் பேராசிரியர் ஜெ.மேரி மற்றும் துணைப் பேராசிரியர் எ.பழனிராஜ் ஆகியோரால் மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் பலன்கள் செய்முறை பயிற்சி கண் பயிற்சி காயகல்ப பயிற்சி மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சி ஆகியவை குறித்து விளக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கப்பட்டது.

மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் என் ஆர் கார்த்திகேயன் யோகாவின் முக்கியத்துவத்தையும் அதன் பலன்களையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். முதல்வர் ச சிவசங்கர் அவர்கள் மாணவர்கள் யோகாவை முறையாக கற்றுக் கொண்டு தங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்தி படிப்பில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியை இயந்திரவியல் பயிற்றுநர் எஸ். வீரபாண்டியன் அவர்கள் ஒருங்கிணைத்தார் . இயந்திரவியல் பேராசிரியர் டி. ஆகாஷ் அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று யோகாசனங்கள் தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சிகளை சிறப்பாக மேற்கொண்டனர். இதன் மூலம் உடல்நலம் மனநலம் மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதன் மூலம் உலக யோகா தின விழா அனைவருக்கும் பயனுள்ள ஆக்கப்பூர்வமான மற்றும் ஆரோக்கியத்தை வளர்க்கும் நிகழ்ச்சியாக அமைந்தது.

#மீனாட்சிஇராமசாமிகல்விநிறுவனங்கள்




#மீனாட்சிஇராமசாமிபாலிடெக்னிக்கல்லூரி


#அரியலூர்மாவட்டம்

10ம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லையா கவலை வேண்டாம்!!!1முதல் 3 மாத  வரையான சிறப்புவகுப்பு (அரசு சான்றிதழுடன்) நமது மீனாட்சி ...
21/05/2026

10ம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லையா கவலை வேண்டாம்!!!

1முதல் 3 மாத வரையான சிறப்புவகுப்பு (அரசு சான்றிதழுடன்) நமது மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் தொடர்புக்கு :

7639593666,

9865314402

https://wa.me/p/30215261721392373/917639593666

மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரிபத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம்.DME, DEEE, DECE, DCSE, DCIVILஇலவச ...
20/05/2026

மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரி

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம்.

DME, DEEE, DECE, DCSE, DCIVIL

இலவச பேருந்து வசதி
இலவச புத்தகம் & சீருடை
இலவச விடுதி வசதி

முதல்தலைமுறை பட்டதாரிக்கு 50%கல்விகட்டணத்தில் சலுகை.

பத்தாம் வகுப்பு முடித்த பிறகு ஏதேனும் ஒரு டிகிரி படித்து முடிக்க 5 வருடங்கள் ஆகும். ஆனால் பாலிடெக்னிக்கில்
படித்து முடித்த மூன்று ஆண்டுகளில் 20-25ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் வேலை வாய்ப்பு.

இறுதியாண்டு மாணவர்களுக்கு கட்டணமில்லாத வளாக நேர்காணல் மூலம் பணி நியமனம்.

மேலும் தொடர்புக்கு:
9994713129
7639593666

https://www.facebook.com/share/1CLzioRyav/

https://www.instagram.com/meenaakshiramasamy_polytechnic?igsh=Y2xpbGxlcWM1amJ5

https://wa.me/c/917639593666

#மீனாட்சிஇராமசாமிகல்விநிறுவனங்கள்




#மீனாட்சிஇராமசாமிபாலிடெக்னிக்கல்லூரி


#அரியலூர்மாவட்டம்

மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரிhttps://wa.me/c/917639593666DME, DEEE, DECE,  DCSE, DCIVILhttps://www.facebook.com/...
09/05/2026

மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரி

https://wa.me/c/917639593666

DME, DEEE, DECE, DCSE, DCIVIL

https://www.facebook.com/share/1CLzioRyav/

முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு பாலிடெக்னிக்கில் 50% கல்வி கட்டணச்சலுகை

SC,ST மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் இலவசம்.

Management Quotaல் சேரும் மணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் சலுகை

இலவச நோட்,சீருடை
இலவசபேருந்து வசதி,
மற்றும் இலவச தங்கும் விடுதி.

சேர்க்கை நடைபெறுகிறது.
மேலும் தொடர்புக்கு:

9994713129,

7639593666

https://www.instagram.com/meenaakshiramasamy_polytechnic?igsh=Y2xpbGxlcWM1amJ5

#மீனாட்சிஇராமசாமிகல்விநிறுவனங்கள்




#மீனாட்சிஇராமசாமிபாலிடெக்னிக்கல்லூரி


#அரியலூர்மாவட்டம்

மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்கள், தத்தனூர், அரியலூர் மாவட்டம்.MEENAAKSHI RAMASAMY POLYTECHNIC COLLEGE.https://www.face...
08/05/2026

மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்கள், தத்தனூர்,
அரியலூர் மாவட்டம்.

MEENAAKSHI RAMASAMY POLYTECHNIC COLLEGE.

https://www.facebook.com/share/1CLzioRyav/

https://www.instagram.com/meenaakshiramasamy_polytechnic?igsh=Y2xpbGxlcWM1amJ5

https://wa.me/c/917639593666

More then details contacts in
9994713129
7639593666

#மீனாட்சிஇராமசாமிகல்விநிறுவனங்கள்




#மீனாட்சிஇராமசாமிபாலிடெக்னிக்கல்லூரி


#அரியலூர்மாவட்டம்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள  தத்தனூர் மீனாட்சி இராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் 2026 ஆம் ஆண்டின்  ஐந்தா...
11/03/2026

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி இராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் 2026 ஆம் ஆண்டின் ஐந்தாம் கட்டமாக வேலைவாய்ப்பு வளாக நேர்காணல் 09.03.2026 அன்று நடைபெற்றது.

வேலை வாய்ப்பு முகாமில் MECHANICAL, EEE ,ECE ,CSE துறைகளுக்கான வேலை வாய்ப்பு நேர்காணலில் YOROZU JBM AUTOMOTIVE TAMILNADU pvt LTD Chennai , மனித வள மேம்பாட்டு அலுவலர் திரு.மணிகண்டன் கலந்து கொண்டார்.வளாக நேர்காணலில் எம் ஆர் பாலிடெக்னிக் கல்லூரியைச் சார்ந்த *MECHANICAL, EEE,ECE,CSE துறைகளைச் சார்ந்த மொத்தம் 46 மாணவர்களைத்* *தேர்வு செய்து பணிநியமன ஆணைகளை வழங்கினார்* .
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தலைவர் எம்.ஆர்.இரகுநாதன்
,இயக்குநர் ஆர்.இராஜமாணிக்கம்
நிர்வாக இயக்குநர் என் ஆர். கார்த்திகேயன் முதல்வர் எஸ்.சிவசங்கர்
வாழ்த்துகளைக் கூறினார்கள்.
பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் ஆர்.தர்மராஜு மற்றும் பேராசிரியர்கள் இணைந்து வளாக நேர்காணலை சிறப்பாக நடத்தினார்கள்.

#மீனாட்சிஇராமசாமிகல்விநிறுவனங்கள்




#மீனாட்சிஇராமசாமிபாலிடெக்னிக்கல்லூரி


#அரியலூர்மாவட்டம்

தத்தனூர் M. R. பாலிடெக்னிக்* *கல்லூரியில் இணையதள பாதுகாப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சிஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையம...
19/02/2026

தத்தனூர் M. R. பாலிடெக்னிக்* *கல்லூரியில் இணையதள பாதுகாப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி இராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் இணையதள பாதுகாப்பு தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கணிணி துறை பேராசிரியர் இரா.கார்த்திகா வரவேற்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் சேர்மன் வழக்கறிஞர் எம். ஆர்.இரகுநாதன் , இயக்குனர் முனைவர் ஆர். இராஜமாணிக்கம், நிர்வாக இயக்குனர் N.R கார்த்திகேயன், முதல்வர். S.சிவசங்கர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ALL THE CHILDREN TRUST(Ariyalur District Co-Ordinator) G.அன்பரசன் MA.,MPhil., அவர்கள் கலந்து கொண்டு
பாதுகாப்பான இணைய தினம் (Safer Internet Day) ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரம், இரண்டாவது நாளில் (பொதுவாக பிப்ரவரி 8 முதல் 11-க்குள்) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் அனைவருக்கும் இணையத்தை பாதுகாப்பான மற்றும் சிறந்த இடமாக மாற்றவும், சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதுகாப்பான இணைய பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கவும் அனுசரிக்கப்படுகிறது என்று கருத்துகளை எடுத்துரைத்தார்.

மேலும் கல்லூரியின் கணிணி துறைத்தலைவர் கு.எழிலரசி
பாதுகாப்பான இணைய தினம் பற்றிய முக்கிய விவரங்கள்:
நோக்கம்: இணையத்தில் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாத்தல், சைபர் மிரட்டல்களைத் தடுத்தல், மற்றும் போலி செய்திகளைக் கண்டறிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்துதல்.
விழிப்புணர்வு: சைபர் கிரைம்கள், பாலியல் மிரட்டல்கள், தரவு திருட்டு, மற்றும் வங்கி மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
கொண்டாட்டம்: உலகளவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இணையப் பாதுகாப்பு குறித்த பயிற்சிப் பட்டறைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துகின்றன.
முக்கிய பாதுகாப்பு குறிப்புகள்: வலுவான கடவுச்சொற்களைப் (Passwords) பயன்படுத்துதல், இரண்டு-காரணி அங்கீகாரம் (Two-Factor Authentication) அமைத்தல், சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்யாமல் தவிர்த்தல், மற்றும் சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட தகவல்களை குறைவாகப் பகிர்தல்.
இணையப் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், பாதுகாப்பான மற்றும் பொறுப்பான இணையப் பயன்பாட்டைக் கற்பிப்பதே இந்த தினத்தின் முக்கிய குறிக்கோளாகும் என்று விரிவாக கூறினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் கணிணி துறை மாணவன் P.சுரேந்தர் நன்றியுரை ஆற்றினார்.

#மீனாட்சிஇராமசாமிகல்விநிறுவனங்கள்




#மீனாட்சிஇராமசாமிபாலிடெக்னிக்கல்லூரி


#அரியலூர்மாவட்டம்

பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழா-2026 MR. பாலிடெக்னிக்கில் இன்று நடைபெற்றது. #மீனாட்சிஇராமசாமிகல்விநிறுவனங்கள்       #ம...
14/02/2026

பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழா-2026
MR. பாலிடெக்னிக்கில் இன்று நடைபெற்றது.

#மீனாட்சிஇராமசாமிகல்விநிறுவனங்கள்




#மீனாட்சிஇராமசாமிபாலிடெக்னிக்கல்லூரி


#அரியலூர்மாவட்டம்

Address

M. R. Kalvi Nagar
Nagar
621804

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+917639593666

Alerts

Be the first to know and let us send you an email when Meenaakshi Ramasamy Polytechnic College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Meenaakshi Ramasamy Polytechnic College:

Shortcuts

Share