Ummu Sulaim Women's Islamic Institute

Ummu Sulaim Women's Islamic Institute Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ummu Sulaim Women's Islamic Institute, College & University, Plot No 77, 78, 4th Cross, ARR Nagar, Sulthanpet, Pondicherry.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுல்தான்பேட்டையில் உம்மு சுலைம் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம் இயங்கி வருகிறது. இதில் ஒருவருட ஆலிமா மற்றும் நான்கு மாத தீனியாத் வகுப்பு நடைபெற்று வருகிறது.

அல்லாஹ்வின் திருப்பெயரால்....  #இஸ்லாம்_ஓர்_எளிய_மார்க்கம்!  ுதுச்சேரி_மாவட்டம்  #உம்மு_சுலைம்_பெண்கள்_கல்வியக்கத்தின் ச...
11/07/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

#இஸ்லாம்_ஓர்_எளிய_மார்க்கம்!

ுதுச்சேரி_மாவட்டம் #உம்மு_சுலைம்_பெண்கள்_கல்வியக்கத்தின் சார்பாக, இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி (10.07.2026) வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணி அளவில் புதுச்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள #மீலாது_வீதியில் நடைபெற்றது

மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இஸ்லாம் குறித்த பெண்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பேச்சாளர் சகோதரர் M A, அப்துர் ரஹ்மான் MISC அவர்கள் பதில் அளித்தார்கள்.

இஸ்லாமிய மார்க்கம் குறித்த சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு், இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடு ஏராளமான சகோதர சகோதரிகள் திரளாக கலந்து கொண்டனர்

அல்ஹம்துலில்லாஹ்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
புதுச்சேரி மாவட்டம்
7558178881, 7558178882, 7558178883

20/06/2026
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), புதுச்சேரி மாவட்டம், உம்மு சுலைம் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம் சா...
20/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), புதுச்சேரி மாவட்டம், உம்மு சுலைம் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம் சார்பாக இன்று (20.06.2026) காலை 11.30 மணியளவில் நடைபெற்ற *முன்னாள் மாணவிகள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி* மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்தீக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் கல்வியகத்தின் எதிர்கால வளர்ச்சி, மாணவிகளின் திறன் மேம்பாடு, முன்னாள் மாணவிகளின் அனுபவங்கள் மற்றும் அவர்களின் பங்களிப்பை கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
மேலும், கல்வியகத்தின் செயல்பாடுகளை மேலும் சிறப்பாக கொண்டு செல்ல தேவையான ஆலோசனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க உறுதியளித்தனர்.

*என்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணியில்*

*இப்படிக்கு,*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
புதுச்சேரி மாவட்டம்
7558178881, 882, 883

﷽அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி10 மாத கால செயல்திட்டத்தை முன்னிட்டு*TNTJ புதுச்சேரி மாவட்டம்* சார்பாக இயங்கி வரும்*உம்மு ...
19/06/2026



அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி
10 மாத கால செயல்திட்டத்தை முன்னிட்டு

*TNTJ புதுச்சேரி மாவட்டம்* சார்பாக இயங்கி வரும்

*உம்மு சுலைம் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம்* நடத்தும்…

பெண்களுக்கான

*🕌 இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 🕌*
(முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி)

இன்ஷா அல்லாஹ்…!!

📅 தேதி: ஜூலை 10, 2026
(வெள்ளிக்கிழமை)

⏰ நேரம்: மாலை 5:30 மணி முதல்

📍இடம்: மீலாது வீதி முல்லா வீதி சந்திப்பு, ரயில் நிலையம் அருகில், புதுச்சேரி - 605001

🔹 பெண்கள் வேலைக்கு செல்லலாமா?
🔹 கருக்கலைப்பு குற்றமா?
🔹 பெண்கள் முகத்திரை அணியலாமா?
🔹 பெண்கள் காது மூக்கு குத்தலாமா?
🔹 பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆனைத் தொடலாமா?
🔹 பெண்கள் ஒட்டு முடி வைக்கலாமா?
🔹 பெண்கள் புருவ முடியை நீக்கலாமா?
🔹 நபித்தோழர்களை பின்பற்றலாமா?
🔹 தொழக்கூடாத பள்ளிவாசல் என்று உண்டா?
🔹 பெண்கள் தாவா பணிகளில் ஈடுபடலாமா?

இதுபோன்ற இஸ்லாம் குறித்த அனைத்து விதமான கேள்விகளுக்கும்

🎙 பதில் அளிப்பவர்:
*M.A.அப்துர் ரஹ்மான்* M.I.Sc
(TNTJ பேச்சாளர்)

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
புதுச்சேரி மாவட்டம்
7558178881, 882, 883

Address

Plot No 77, 78, 4th Cross, ARR Nagar, Sulthanpet
Pondicherry
605110

Opening Hours

Monday 10am - 4pm
Tuesday 10am - 4pm
Wednesday 10am - 4pm
Thursday 10am - 4pm
Friday 10am - 4pm
Saturday 10am - 4pm

Alerts

Be the first to know and let us send you an email when Ummu Sulaim Women's Islamic Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Ummu Sulaim Women's Islamic Institute:

Shortcuts

Share