10/10/2023
ஒன்று கூடுவோம் இலங்கை : எங்கள் சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்ப உதவுங்கள்!
இலங்கையின் தென் மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பரவலான சேதங்கள் மற்றும் இடப்பெயர்வுகள் ஏற்பட்டுள்ளன. பலர் தங்களது வீடுகளையும் உடமைகளையும் இழந்து உணவு, தண்ணீர், இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்குத் தவித்து வருகின்றனர்.
Sri Lanka Unites என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும், இது பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக செயல்பட்டு வருகிறது. மாத்தறையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த இக்கட்டான நேரத்தில் உங்கள் உதவிக்கரங்களை கோருகின்றோம்.
தேவையான பொருட்கள் :
🔵 சுத்தம் செய்யும் பொருட்கள்: சோப்பு, ஏன்ட் வாஷ், லைசோல், வாஷிங் பவுடர், ஹார்பிக்
🔵 உலர் பொருட்கள்: அரிசி, பருப்பு, வெங்காயம், ஸ்ப்ராட், உருளைக்கிழங்கு, நூடுல்ஸ், சர்க்கரை, தேநீர், பால் பவுடர், சால்மன் டின்
உதவி செய்வது எப்படி :
🔵 ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின் தலைமை அலுவலகத்தில் பொருட்களை ஒப்படைக்கலாம்.
உங்களது உதவிகள், எவ்வளவு சிறியதாக இருந்தாலும், மாற்றத்தை ஏற்படுத்தும். எங்கள் சக குடிமக்களுக்கு உதவி தேவைப்படும் இந்த நேரத்தில் உங்களுது உதவிகளை வழங்குங்கள்.
👉 சேகரிப்பு மையம்: தலைமை அலுவலகம் – 43, விபுலசேன மாவத்தை, கொழும்பு 10
👉 சேகரிக்கும் திகதிகள் : அக்டோபர் 10 முதல் அக்டோபர் 15 வரை
👉 நன்கொடை சேகரிப்பு நேரம்: காலை 8:30 முதல் மாலை 06:00 வரை
👉 தொலைபேசி இலக்கம்: 0743900179/ 0743900188/ 0117477944