01/06/2026
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறையின் இரண்டாம் வருட சிறப்பு கலை மாணவர்கள், 'இலங்கையின் அரசியலமைப்பு வளர்ச்சி' எனும் பாடப்பரப்புடன் தொடர்புடைய களஆய்வை மேற்கொண்டுள்ளார்கள்.
இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட வரைவுகள் மற்றும் புதிய அரசியலமைப்பு முயற்சிகள் குறித்து, தமிழ் அரசியல் பரப்பில் காணப்படும் பிரதான அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் என்ன? அவர்களின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் திட்டங்கள் எவை? போன்ற மிக முக்கிய விடயங்களை ஆழமாக அறிந்து கொள்வதற்காக இக்களவிஜயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் பிரதான நான்கு கட்சிகளின் தலைமைகள் மற்றும் பிரதிநிதிகளை மாணவர்கள் நேரடியாகச் சந்தித்து விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்:
1.இலங்கைத் தமிழரசு கட்சி
2.தமிழ்த் தேசியப் பேரவை
3.ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி
4.தமிழ் மக்கள் கூட்டணி
வகுப்பறைக் கற்றல் மற்றும் கோட்பாட்டு விளக்கங்களுக்கு அப்பால், சமகால அரசியல் தலைமைகளுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அரசியல் சாசன முயற்சிகள் மற்றும் தீர்வுத் திட்டங்கள் பற்றிய ஒரு தெளிவான, நடைமுறைப் புரிதலைப் பெற்றுக் கொள்ள இக்கலந்துரையாடல்கள் மாணவர்களுக்குப் பெரிதும் உதவியாக அமைந்தன.
The second-year Special Arts students of the Department of Political Science at the University of Jaffna have undertaken a field research study as part of the course 'Constitutional Development of Sri Lanka'.
This field visit was organized to gain a deep understanding of key issues, such as the positions of the main political parties within the Tamil political sphere regarding proposed solutions for Sri Lanka's long standing ethnic problem and new constitutional initiatives, as well as their future political moves and strategies.
During the visit, students met directly with the leadership and representatives of four major parties operating within the Tamil national landscape and engaged in detailed discussions:
1.Illankai Tamil Arasu Kachchi (ITAK)
2.Tamil National Council (TNC)
3.Democratic Tamil National Alliance (DTNA)
4.Tamil People's Alliance (TPA)
Beyond classroom learning and theoretical explanations, these discussions greatly helped the students gain a clear, practical understanding of constitutional efforts and proposed solution frameworks by interacting directly with contemporary political leaders.