அல் முஸ்தபவிய்யா அஹதிய்யாப் பாடசாலை - கஹடோவிட

  • Home
  • Sri Lanka
  • Kahataowita
  • அல் முஸ்தபவிய்யா அஹதிய்யாப் பாடசாலை - கஹடோவிட

அல் முஸ்தபவிய்யா அஹதிய்யாப் பாடசாலை - கஹடோவிட Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அல் முஸ்தபவிய்யா அஹதிய்யாப் பாடசாலை - கஹடோவிட, Community College, Al-Badriya Maha Vidyalaya/Kahatowita, Kahataowita.

கஹட்டோவிட்ட அல் முஸ்தபவிய்யா அஹதிய்யா ரமழான் விடுமுறைக்கு பின்னர் நேற்று 5/04/2026 கல்வி செயற்பாடுகளுக்காக மீண்டும் ஆரம்...
06/04/2026

கஹட்டோவிட்ட அல் முஸ்தபவிய்யா அஹதிய்யா ரமழான் விடுமுறைக்கு பின்னர் நேற்று 5/04/2026 கல்வி செயற்பாடுகளுக்காக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது நடைபெற்ற ஒன்று கூடலில் மாணவர்களுக்கான அறிவித்தல் மற்றும் அறிவிறுத்தல்களை பாடசாலை அதிபர் ஏ. எம். இக்ராம் அஹ்மத் அவர்கள் வழங்குவதையும், கடந்த வருடம் அஹதிய்யாவில் கடமையாற்றிய கூடுதலாக அஹதிய்யாவுக்கு வருகை தந்த ஆசிரியர்களுக்கான ஊக்குவிப்பு பரிசில்களும் இதன் போது வழங்கிவைக்கப்பட்டன.

நேற்றைய அஹதிய்யா வகுப்புக்களின் போதான காட்சிகளையும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் வருகை தந்துள்ள படங்களையும் காணலாம்.

இதன் போது புதிய 6 ஆம் ஆண்டுக்கான மாணவர்களும் சேர்த்து கொள்ளப்பட்டதோடு ,பாடபோதனைகளுக்காக புதிய ஆசிரியர்களும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சன்மார்க்க கல்வியை மாணவர்கள் மத்தியில் போதிப்பதனூடாகவே ஒழுக்கமும் பண்பாடும் நீதி நியாயம் பேனும் நல்ல தலைமுறையையும் சமூகத்தின் தலைமைகளையும் உருவாக்க முடியும்.
அதற்கான சிறந்த அத்திவாரத்தை இதுபோன்ற அஹதிய்யாக்களுக்கு மாணவர்களை அனுப்புவது கொண்டு அமைத்துக்கொள்ள முடியும்.
பெற்றோர்கள் இது விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இல்லையெனில் இன்றைய அலட்சியம் நாளைய வருத்தத்திற்கு இட்டுச்செல்லும்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபரகாதுஹு.*2026 ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவ மாணவிகளை இணைத்துக் கொள்ளல்.*எமதூரின் ம...
02/04/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபரகாதுஹு.

*2026 ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவ மாணவிகளை இணைத்துக் கொள்ளல்.*

எமதூரின் முதலாவது அஹதிய்யாப் பாடசாலையான *அல் முஸ்தபவிய்யாஹ் அஹதிய்யாப் பாடசாலை* கடந்த 20 வருடங்களாக மாணவ மாணவிகளுக்கு சன்மார்க்க அறநெறிக் கல்வியை வழங்கி வருகின்றது. எமது அஹதிய்யா தற்போது அல் பத்ரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 07.30 முதல் 11.00 மணி வரை சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

எமது அஹதியாவில்,

அகீதா :- நம்பிக்கை கோட்பாடுகள்

மஸாதிருஷ் ஷரீஆ :- சட்ட மூலாதாரங்கள்

பிக்ஹுல் இஸ்லாம் :- இஸ்லாமிய சட்டங்கள்

அخஹ்லாக் வத் தர்பிய்யா :- நற்பண்புகளும், பயிற்சியும்

ஸீரா வத் தாரீக்خ :- இஸ்லாமிய வரலாறு

அரபு மொழியும், இலக்கியமும்

தஜ்வீத்

போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இணைப் பாடவிதான பயிற்சிகள் வழங்கப்படுவதோடு
அஹதிய்யா மத்திய சம்மேளனத்தால் நடாத்தப்படுகின்ற *அஹதிய்யா இடைநிலைச் சான்றிதழ்ப் பரீட்சை,* இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தால் நடாத்தப்படுகின்ற *அஹதிய்யா இறுதிச் சான்றிதழ்ப் பரீட்சை* என்பவற்றுக்கு மாணவ மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர். இப் பரீட்சை பல்கலைக்கழக நுழைவுக்கான Z புள்ளியை அதிகரிக்க துணை நிற்கும் பரீட்சை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தரம் 06 முதல் 11 வரையான மாணவ மாணவிகளுக்கான பாட போதனைகள் வழங்கப்படும் எமது அஹதிய்யாவுக்கு 2026 ஆம் கல்வியாண்டிற்கான தரம் 06 க்கான புதிய மாணவ மாணவிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். *தற்போது தரம் 06 இல் பாடசாலைக் கல்வியைத் தொடரும் புதிய மாணவ மாணவிகளும், தரம் 07 முதல் தரம் 11 வரையுள்ள மாணவ மாணவிகளில் இதுவரை அஹதிய்யாவில் இணையாத மாணவ மாணவிகளும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 05.04.2026 காலை 07.30 க்கு அஹதிய்யாவுக்கு வருகை தருமாறு* அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
அதிபர்,
அல் முஸ்தபவிய்யாஹ் அஹதிய்யாப் பாடசாலை,
கஹட்டோவிட்ட.

சிறப்பாக நடைபெற்ற கஹட்டோவிட்ட அல் முஸ்தபவிய்யா அஹதிய்யாவின் இப்தார் நிகழ்வு. கஹட்டோவிட்டாவில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட...
05/03/2026

சிறப்பாக நடைபெற்ற கஹட்டோவிட்ட அல் முஸ்தபவிய்யா அஹதிய்யாவின் இப்தார் நிகழ்வு.

கஹட்டோவிட்டாவில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட அஹதிய்யாப்பாடசாலையாகிய அல் முஸ்தபவிய்யா அஹதிய்யாப் பாடசாலை நிர்வாகமும் அல் மத்ரஸதுல் முஸ்தபவிய்யா நிர்வாகமும் இணைந்து நடாத்திய மாணவர்களுக்கான தர்பிய்யா மற்றும் இப்தார் நிகழ்வு கடந்த 2/3/2026 செவ்வாய்கிழமை கஹட்டோவிட்ட அல் மத்ரஸதுல் முஸ்தபவிய்யா (ஆசூறா மன்ஸிலில் ) நடைபெற்றது.

அஹதிய்யாப் பாடசாலை அதிபர் இக்ராம் அஹ்மத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் விசேட வளவாளராகவும் அதிதியாகவும் மாத்தறை அல் மீரா அஹதிய்யாப்பாடசாலையின் அதிபரும் கஹட்டோவிட்ட முஅஸ்கருர் ரஹ்மான் அரபுக்கல்லூரியின் பணிப்பாளரும் நாடறிந்த பேச்சாளருமாகிய மௌலவி இக்ராம் பாஸி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான தர்பிய்யா மற்றும் நஸீஹத்துகளை வழங்கியதோடு விசேட துஆப்பிரார்த்தனையும் மேற்கொண்டார்.

மாணவர்களுக்கு தேவையான சரியான சன்மார்க்க கல்வியை போதிப்பது கொண்டே சிறந்த மாணவர் சமுதாயத்தையும் நல்லொழுக்கம் மிக்க நாளைய தலை முறையையும் உருவாக்கும் நோக்கில் செயற்படும் இவ்வாறான அஹதிய்யாக்களையும் சன்மார்க்க நிறுவனங்களையும் உயிர்ப்பிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதும் அதற்காக அநுசரணையளிப்பதும் காலத்தின் தேவையாகும். இந்த நிகழ்வுக்கான அநுசரணையை பெயர் குறிப்பிட விரும்பாத நலன்விரும்பி ஒருவர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அஹதிய்யாவின் முன்னால் அதிபரும் தற்போதைய நிர்வாக சபை உறுப்பினரும் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் அல் ஹாஜ் பிர்தைவ்ஸ் அவர்களின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட்ட மேற்படி நிகழ்வில் அஹதிய்யாவின் மாணவ மாணவிகள் குர்ஆன் மத்ரஸாவின் மாணவர்கள் உலமாக்கள், நிர்வாகத்தினர்கள் , ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

இப்தார் நிகழ்வின் பின்னர் அனைவருக்கும் இராப்போசனம் வழங்கப்பட்டது.

நிகழ்வின் போதான படங்களை காணலாம்.

கடந்த 14 ஆம் திகதி கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அல் முஸ்தபவிய்யா அஹதிய்யாப் பாடசாலையின் முப்ப...
19/02/2026

கடந்த 14 ஆம் திகதி கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அல் முஸ்தபவிய்யா அஹதிய்யாப் பாடசாலையின் முப்பெரும் விழாவின் போது வருகை தந்த பிரதம அதிதி சமய கலாச்சார பிரதியமைச்சர் கௌரவ முனீர் முழப்பர் அவர்களுடன் விசேட சொற்பொழிவாளராக கலந்து கொண்ட மாத்தறை அல் மீரா அஹதிய்யா பாடசாலையின் அதிபரும் கஹட்டோவிடாட முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக்கல்லூரியின் பணிப்பாளருமான அல் ஹாஜ் மௌலவி இக்ராம் பாஸி ஹஸ்ரத் அவர்களுடனும் அஹதிய்யாவின் அதிபர் இக்ராம் அஹ்மத் அவர்களுடனும் பெற்றுக்கொண்ட படத்தை முதலாவது படத்திலும்,

அதிதிகளின் தேநீர் உபசார நிகழ்வின் போதும் அதன் பின்னரும் நிகழ்வுக்கிடையேயும் ,நமது இந்த விழாவை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்குதவிய
அதிபர் இக்ராம் அஹ்மத் ,முன்னால் அதிபரும் நிகழ்வின் பரிசில்களுக்கான பிரதான அநுசரணையை பெற்று தந்தவருமான அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் அவர்களுடனும்சக நிர்வாகிகள் மற்றும் அஹதிய்யாவின் முன்னேற்றத்தில் உதவிடும் ஆசிரியர்கள், இளைஞர்கள், முகநூல் நேரடி ஒளிபரப்பு கொடுப்பதில் உதவிய மொஹம்மத் ஸஈத் மற்றும் வீடியோ மற்றும் புகைப்படம் பிடிப்பதில் உதவிய சகோதரர்களான இம்ரான் மற்றும் யூனுஸ் போன்றவர்களுடனும்.

நிகழ்ச்சியை அழகாக தொகுத்து வழங்கிய ஆசிரியர் இக்பால் நாஸர் அவர்களுடனும்

நிகழ்வின் ஏற்பாட்டுக்கு தம்மாலான அனைத்துவித ஒத்துழைப்புக்களையும்வழங்கிய அஹதிய்யா நிர்வாகத்தின் செயலாளர் ஹுஸ்னி அவர்களுடனும்.

நிகழ்வை சிறப்பாக நடாத்துவதற்கு பெரும் பங்காற்றிய அஹதிய்யாவின் உப அதிபர் சகோதரர் பவாஸ் அவர்களுடனும், முப்பெரும் விழா திட்டமிடல்,நிகழ்வின் விருந்துபசார விடயங்கள், நிகழ்வின் ஒருங்கிணைப்பு பணிகளை திறம்படவும் வெற்றிகரமாகவும் செய்வதில் ஒத்துழைப்பு வழங்கிய அஹதிய்யாவின் பொருளாளர் லுதுபுள்ளாஹ்வுடனும்.

நிகழ்வின் விருந்துபசார விடயங்களில் பூரண ஒத்துழைப்பை வழங்கிய அஹதிய்யாவின் ஆசிரியர் மௌலவி ரஸீக் அவர்களுடனும்.

எமது அஹதிய்யாவின் பழைய மாணவனும் தற்போது சியன மீடியாவின் ஊடகவியலாளராக கடமைபுரிந்து கொண்டுள்ளவரும் நமது நிகழ்வுகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி ஊடகமயப்படுத்தியதில் பங்களித்தவருமான சகேதரர் ரிஹ்மி அவர்களுடனும்.

அஹதிய்யா நிகழ்வுகளை சிறப்பாக நடாத்தி முடிப்பதில் உதவிய சகோதரர் ருஸ்தி மற்றும் ஸம்ரி போன்றோர்களுடனும்.

மற்றும் பல அதிதிகள் சகோதரர்கள் அஹதிய்யாவின் நிர்வாக உறுப்பினர்களுடனும் இறுதியாக ஸலவாத்து சொல்லும் போதும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் பிடிக்கப்பட்ட படங்களை காணலாம்.

தொகுப்பு
எம்.ஆர்.லுதுபுள்ளாஹ்

கடந்த சனிக்கிழமை கஹட்டோவிட்ட அல் முஸ்தபவிய்யா அஹதிய்யாப் பாடசாலையின் முப்பெரும் விழாவில் வழங்கிவைக்கப்பட்ட அதிதிகளுக்கான...
18/02/2026

கடந்த சனிக்கிழமை கஹட்டோவிட்ட அல் முஸ்தபவிய்யா அஹதிய்யாப் பாடசாலையின் முப்பெரும் விழாவில் வழங்கிவைக்கப்பட்ட அதிதிகளுக்கான நினைவு சின்னத்தின் போதான காட்சிகள்.

படம் 1
நிகழ்வுக்கு வருகை தந்த பிரதம அதிதி
பாராளுமன்ற உறுப்பினரும் சமய கலாச்சார அமைச்சின் பிரதியமைச்சருமாகிய கௌரவ முனீர் முழப்பர் அவர்களுக்கு அஹதிய்யாவின் ஆலோசனை குழு உறுப்பினரும் முன்னால் ஆசிரியரும் அல் மத்ரஸதுல் முஸ்தபவிய்யாவின் அதிபருமாகிய அப்துல் பாரி ஆலிம் மற்றும் அஹதிய்யாவின் முன்னால் அதிபர் அல் ஹாஜ் ஜிப்ரி ,அஹதிய்யா பாடசாலை அதிபர் இக்ராம் அஹ்மத் ஆகியோர்களின் கரங்களால் அஹதிய்யா பாடசாலை மற்றும் முப்பெரும் விழா சார்பில் நினைவு சின்னம் வழங்கி வைப்பதையும் அருகில் அஹதிய்யா பாடசாலை உப அதிபரும் ஆசிரியருமான பவாஸ் அவர்கள் அருகில் நிற்பதையும்.

படம்2. முப்பெரும் விழாவில் விசேட அதிதியாக கலந்து கொண்ட அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தின் தலைவர் அல் ஹாஜ் ஸரூக் அவர்களுக்கான நினைவு சின்னத்தை அஹதிய்யாவின் பொருளாளர் எம். ஆர். லுதுபுள்ளாஹ் அவர்கள் வழங்கி வைப்பதையும்.

படம் 3
அஹதிய்யா முப்பெரும் விழாவில் கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்த தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய துறை பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம் நபீஸ் அவர்களுக்கான நினைவு சின்னத்தை கஹட்டோவிட்ட முஹிய்யத்தீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அல் ஹாஜ் நஜீம் மற்றும் கஹட்டோவிட்ட மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் தலைவர் அல் ஹாஜ் ருஸ்தி மற்றும் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் இன்சாப் மந்திரி அவர்களும் இணைந்து வழங்கி வைப்பதையும் அருகில் பாடசாலை அதிபர் இக்ராம் அஹமத் நிற்பதையும் படத்தில் காணலாம்.

படம் 4:அஹதிய்யாவின் முப்பெரும் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட முன்னால் தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொஹம்மத் அவர்களுக்கான நினைவு சின்னத்தை அஹதிய்யா பாடசாலையின் தலைவர் அல் ஹாஜ் பாரி அவர்களும் ,பாடசாலை அதிபர் இக்ராம் அஹ்மத் அவர்கள் இணைந்தும் வழங்கி வைப்பதை படத்தில் காணலாம்.

படம் 5.
அஹதிய்யாவின் முப்பெரும் விழாவில் கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்த கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எம்.அஸ்மிர் அவர்களுக்கான நினைவு சின்னத்தை அஹதிய்யாவின் முன்னால் அதிபரும் தற்போதைய இணைத்தலைவருமான அல் ஹாஜ் ஜிப்ரி அவர்கள் வழங்கி வைப்பதையும் .

படம்.6.
கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகாவித்தியாலயத்துக்கு அல் முஸ்தபவிய்யா அஹதிய்யா நிர்வாகத்தால் 1500 ஆவது மீலாதுன் நபி விழா மற்றும் 20வருட பூர்த்தி மற்றும் பரிசளிப்பு விழாவை முன்னிட்டு பெறுமதி வாய்ந்த மின் சிவர் மின்விசிறி ஒன்றை அஹதிய்யா பாடசாலையின் முன்னால் அதிபரும் தற்போதைய ஆசிரியரும் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினருமான அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் அவர்களும்,முன்னால் அதிபர் அல் ஹாஜ் ஜிப்ரி அவர்களும் பாடசாலை அதிபர் இக்ராம் அஹ்மத் அவர்களும் இணைந்து அல் பத்ரியாவின் அதிபர் எம்.எம் அஸ்மிர் அவர்களிடம் வழங்கி வைப்பதையும் படத்தில் காணலாம்.

படம் 7.

அல் முஸ்தபவிய்யா அஹதிய்யாவின் முப்பெரும் விழாவில் சிறப்பு சொற்பொழிவாளராக கலந்து சிறப்பித்த மாத்தறை அல் மீரா அஹதிய்யா பாடசாலையின் அதிபரும் கஹட்டோவிட்ட முஅஸ்கருர்ரஹ்மான் மகளிர் அரபுக்கல்லூரியின் பணிப்பாளரும் நாடறிந்த பேச்சாளருமாகிய அல் ஹாஜ் மௌலவி இக்ராம் பாஸி அவர்களுக்கான நினைவு சின்னத்தை சமூக சேவகரும் அஹதிய்யா பிள்ளைகளுக்கான பரிசில்களை தனது குடும்பத்தவர்களூடாக அநுசரணையாக பெற்று வழங்கியவரும் கஹட்டோவிட்ட YMMA அமைப்பின் தலைவருமாகிய அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் அவர்கள் வழங்கி வைப்பதையும் படத்தில் காணலாம்.

கடந்த சனிக்கிழமை 14/02/2026 அன்று கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வட்ட கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அல் முஸ்தபவிய்யா அஹதிய்ய...
17/02/2026

கடந்த சனிக்கிழமை 14/02/2026 அன்று கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வட்ட கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அல் முஸ்தபவிய்யா அஹதிய்யாப்பாடசாலையின் முப்பெரும் விழாவின் போது பிரதம அதிதியின் கரங்களாலும் , விசேட அதிதியின் கரங்களாலும், கௌரவ அதிதிகளின் கரங்களாலும்.
மற்றும் விசேட சொற்பொழிவாளரின் கரத்தாலும்,
மற்றும் பள்ளிவாசல் இமாம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் , மற்றும் விழாவில் கலந்து கொண்ட பிரமுகர்களின் சிலரின் கரங்களாலும் அஹதிய்யா பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்களும், கடந்த ரமழான் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படும் போதான படங்களை காணலாம்.

அதிதிகளினாலும் , நிகழ்வுக்கான அழைப்பு விருந்தினர்களாலும் நிரம்பி வழியும் கண்கொள்ளாக் காட்சி தரும் அஹதிய்யா முப்பெரும் வி...
16/02/2026

அதிதிகளினாலும் , நிகழ்வுக்கான அழைப்பு விருந்தினர்களாலும் நிரம்பி வழியும் கண்கொள்ளாக் காட்சி தரும் அஹதிய்யா முப்பெரும் விழாவின் போதான நிறைந்த மண்டபத்தின் காட்சிகள்.

அஹதிய்யாவின் முப்பெரும் விழாவில் அரங்கேற்றப்பட்ட அஹதிய்யா மாணவ மாணவிகளின் நிகழ்ச்சிகளின் போதான படங்களை காணலாம்.
16/02/2026

அஹதிய்யாவின் முப்பெரும் விழாவில் அரங்கேற்றப்பட்ட அஹதிய்யா மாணவ மாணவிகளின் நிகழ்ச்சிகளின் போதான படங்களை காணலாம்.

கஹட்டோவிட்ட அல் முஸ்தபவிய்யாஹ் அஹதிய்யா பாடசாலையின் முப்பெரும் விழாவில் பிரதம அதிதியாக சமய கலாச்சார விவகார பிரதியமைச்சர்...
16/02/2026

கஹட்டோவிட்ட அல் முஸ்தபவிய்யாஹ் அஹதிய்யா பாடசாலையின் முப்பெரும் விழாவில் பிரதம அதிதியாக சமய கலாச்சார விவகார பிரதியமைச்சர் கௌரவ முனீர் முழப்பர் அவர்கள்,விசேட அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின் தலைவர் அல் ஹாஜ் ஸரூக், கௌரவ அதிதியாக கலந்து உரை நிகழ்த்திய தென்கிழக்கு பல் கழைக்கழகத்தின் இஸ்லாமிய துறை பேராசிரியர் கலாநிதி எஸ். எம் நபீஸ் , விசேட பேச்சாளராகவும் சொற்பொழிவாளராகவும் கலந்து கொண்ட மாத்தறை அல் மீரா அஹதிய்யா பாடசாலை அதிபரும் , கஹட்டோவிட்ட முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக்கல்லூரியின் பணிப்பாளர் மௌலவி எம். என். எம் இக்ராம் பாஸி ஹஸ்ரத் போன்றோர் உரை நிகழ்த்தும் போதான படங்களையும்

அஹதிய்யாவின் சார்பில் முப்பெரும் விழாவின் வரவேற்புரையை நிகழ்த்திய அஹதிய்யாவின் முன்னால் அதிபரும் பிரதேச சபை உறுப்பினருமாகிய அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் அவர்களின் வரவேற்புரை

நிகழ்வின் நோக்கம் பற்றிய தெளிவை அஹதிய்யா பாடசாலையின் அதிபர் இக்ராம் பாரி அவர்கள் வழங்குவதையும்

இறுதியாக நன்றியுரையை அஹதிய்யாவின் முன்னால் அதிபர் அல் ஹாஜ் ஜிப்ரி அவர்கள் வழங்குவதையும்

பிரபல கணித பாட ஆசிரியரும் அறிவிப்பாளருமான எம். டீ. இக்பால் நாஸர் ஆசிரியர் அவர்கள் நிகழ்வுகளை அஹதிய்யாவின் வரலாற்று தகவல்களோடு அழகுற தொகுத்து வழங்குவதையும் படங்களில் காணலாம்.

கஹட்டோவிட்ட அல் முஸ்தபவிய்யா அஹதிய்யா பாடசாலையின் முப்பெரும் விழா எதிர்வரும் சனிக்கிழமை.கஹட்டோவிட்ட அல் பத்ரியாவில் நடைப...
12/02/2026

கஹட்டோவிட்ட அல் முஸ்தபவிய்யா அஹதிய்யா பாடசாலையின் முப்பெரும் விழா எதிர்வரும் சனிக்கிழமை.

கஹட்டோவிட்ட அல் பத்ரியாவில் நடைபெற்று வருகின்ற அல் முஸ்தபவிய்யா அஹதிய்யா பாடசாலையின் 20வது ஆண்டு நிறைவு, வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் 1500வது மீலாதுன் நபி கொண்டாட்டங்கள் மிக விமர்சையாக நடைபெறவுள்ளன.

🗓️ திகதி: 2026 பெப்ரவரி 14, சனிக்கிழமை
🕑 நேரம்: பி.ப. 02:00 மணி
📍 இடம்: முஸ்லிம் மகளிர் கல்வி வட்ட மாநாட்டு மண்டபம் (Muslim Ladies Study Circle), கஹடோவிட்ட.
சிறப்பு விருந்தினர்கள்:
இந்த விழாவில் நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்:

* தலைமை விருந்தினர்: கௌரவ முனீர் முழப்பர் (MP) - மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர்.

* சிறப்பு விருந்தினர்: அல்-ஹாஜ் M.R.M. ஸரூக் - தேசிய தலைவர், இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளனம்.

* கௌரவ விருந்தினர்கள்:
* அல்-ஹாஜ் M.M. முஹம்மது (ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையாளர் நாயகம்).

* M.A.M.M. அஸ்மிர் (அதிபர் - அல் பத்ரியா மகா வித்தியாலயம், கஹடோவிட்ட).

* Dr. S.M.M. நபீஸ் (பேராசிரியர் - தென்கிழக்கு பல்கலைக்கழகம்).

* சிறப்பு சொற்பொழிவாளர்: மௌலவி M.N.M. இக்ராம் (ஃபாஸி) - பணிப்பாளர், முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரி.

அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகக் குழுவினர் உங்களை அன்புடன் அழைக்கின்றனர். அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!

குறிப்பு அன்றைய தினம் 6 ஆம் வகுப்புக்கான புதிய விண்ணப்பங்கள் வழங்கப்படுதோடு அஹதிய்யாவின் இடை நிலை மற்றும் இறுதி நிலை பரீட்சையில் சித்தியடைந்த சான்றிதழ் பெற வேண்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் அன்றைய தினம் வழங்கப்படும்.

அல் முஸ்தபவிய்யா அஹதிய்யா பாடசாலை நிர்வாகம் கஹட்டோவிட்ட

Address

Al-Badriya Maha Vidyalaya/Kahatowita
Kahataowita
KAHATOWITA-11144

Website

Alerts

Be the first to know and let us send you an email when அல் முஸ்தபவிய்யா அஹதிய்யாப் பாடசாலை - கஹடோவிட posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share