அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி, மருதமுனை

அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி, மருதமுனை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி, மருதமுனை, College & University, Nooraniya Road, Maruthamunai.

மருதமுனை அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி (மர்கஸுத் தஃலீமில் இஸ்லாமி எனும் பெயரில்) 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 30 வருடங்களாக நாடுபூராவும் 100 இற்கும் மேற்பட்ட ஹாபிழ்களையும், பல உலமாக்களையும் உருவாக்கியிருக்கும் ஓர் இஸ்லாமிய கல்வி நிறுவனமாகும்.

மருதமுனையைச் சேர்ந்த ஐக்கிய இராஜ்ஜியத்தில் வசித்துவரும் அல்ஹாஜ், A.S. பதியுத்தீன் (விரிவுரையாளர், மார்க்கப் போதகர், பேஷ்...
29/08/2026

மருதமுனையைச் சேர்ந்த ஐக்கிய இராஜ்ஜியத்தில் வசித்துவரும் அல்ஹாஜ், A.S. பதியுத்தீன் (விரிவுரையாளர், மார்க்கப் போதகர், பேஷ் இமாம் - லண்டன் மஸ்ஜித்) அவர்கள் இன்று (29.08.2026) எமது அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியை தரிசித்து, கல்லூரியின் தேவைகளை கேட்டறிந்ததோடு, எமது மாணவர்களோடும் கலந்துரையாடி பெறுமதியான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் எமது மாணவர்களுக்கு வழங்கியிருந்தார்.

அவருடைய குடும்பம் மற்றும் சகோதரர்கள் இணைந்து இதற்கு முன்பும் (2018) எமது கல்லூரியின் கட்டிட நிர்மாணப் பணிக்கு நன்கொடைகளை வழங்கியிருந்த நிலையில், இன்ஷா அல்லாஹ் தொடர்ந்தும் எமது கல்லூரியின் அபிவிருத்தி மற்றும் மாணவர் நலச் செயற்பாடுகளில் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளதாக மனமுவந்து எம்மிடம் தெரிவித்தார்.

வல்ல அல்லாஹுத்தஆலா அவருடைய உயரிய சதக்காக்களை, நற்பணிகளை ஏற்று அங்கீகரிப்பானாக, அவருடைய பெற்றோர், குடும்பத்தினர் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக என நாம் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.

ஊடகப் பிரிவு
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி
மருதமுனை

எமது மருதமுனை அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியின் பாடசாலை கல்விப் பிரிவுக்கான அர்ப்பணிப்பும், அனுபவமும் நிறைந்த, பிரபல ஆசிரியர்...
27/08/2026

எமது மருதமுனை அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியின் பாடசாலை கல்விப் பிரிவுக்கான அர்ப்பணிப்பும், அனுபவமும் நிறைந்த, பிரபல ஆசிரியர் குழாம்.

ஊடகப் பிரிவு
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி
மருதமுனை

🟢 பாடசாலைக் கல்வியுடன் ஹிப்ழுல் குர்ஆன் கற்கை நெறிகளுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளல் -2026/2017🧑‍💼 இம்முறை தரம் ...
24/08/2026

🟢 பாடசாலைக் கல்வியுடன் ஹிப்ழுல் குர்ஆன் கற்கை நெறிகளுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளல் -2026/2017

🧑‍💼 இம்முறை தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய ஆண் மாணவர்களிடம் ஹிப்ழ் பிரிவு புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

🤲 அல்ஹம்துலில்லாஹ்!
வல்ல அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 30 வருடங்களாக 100 இற்கும் மேற்பட்ட ஹாபிழ்களை எமது பிராந்தியத்தில் உருவாக்கிய ஓர் இஸ்லாமிய நிறுவனமாக எமது மருதமுனை அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி திகழ்கின்றது.

🔗விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்:

1. ஆண் மாணவராயிருத்தல்.
2. தேகாரோக்கியம் உள்ளவராகவும், ஆர்வமுள்ளவராகவும் இருத்தல்.
3. தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை எழுதி, அடுத்த வருடம் தரம் 06 இல் கல்வி கற்றல்.
4. அல்குர்ஆனை பார்த்து ஒதத் தெரிந்திருந்தல்.

🌐ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும்:
https://docs.google.com/forms/d/1NlseLd4yg7lRzIju-RTCHutY4E_ffU3Kbfug_E8IDrE/viewform

📅 விண்ணப்ப முடிவுத் திகதி: 30.08.2026

📞மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப்
படிவங்களைப் பெற அழையுங்கள்:
067 222 5867
075 524 7124
077 335 5162

அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி
மருதமுனை

என்றும் எமது அன்பான பிரார்த்தனைகளுக்குரியவர் மர்ஹும் அஷ்ஷெய்க். A. அபூஉபைதா (மதனி) அவர்கள்...மருதமுனை அந்-நஹ்ழா அரபுக் க...
23/08/2026

என்றும் எமது அன்பான பிரார்த்தனைகளுக்குரியவர் மர்ஹும் அஷ்ஷெய்க். A. அபூஉபைதா (மதனி) அவர்கள்...

மருதமுனை அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியின் (மர்கஸுத் தஃலீமில் இஸ்லாமி) கௌரவ ஸ்தாபக உறுப்பினர், நிர்வாக சபை உறுப்பினர், முன்னாள் அதிபர் என்றும் எமது அன்பிற்கும், மரியாதைக்குமுரிய மருதமுனையின் மூத்த ஆலிம் அஷ்ஷெய்க். A. அபூ உபைதா (மதனி) அவர்கள் இவ்வுல வாழ்கைக்கு விடை கொடுத்து (வபாத்தாகி) ஒரு வருடம் நிறைவு பெறுகிறது.

எமது கல்லூரி 1995 ஆம் ஆண்டு மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட போது, அதன் ஸ்தாபக உறுப்பினராக இருந்து, காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் கண்ணியத்திற்குரிய முன்னாள் அதிபர் மர்ஹும். அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்களின் ஆலோசனையின் பேரில், எமது கல்லூரியில் சுமார் 16 வருடங்கள் வரை பணியாற்றி, பல ஹாபிழ்களை நமதூருக்கு உருவாக்கித் தந்த கண்ணியத்திற்குரிய அல்-ஹாபிழ். M.H.M. றிஸ்வி அவர்களை தெரிவுசெய்து எமது கல்லூரிக்கு அன்று அழைத்து வந்ததோடு, எமது பிராந்தியத்தில் 100 இற்கும் மேற்பட்ட ஹாபிழ்களையும், 40 இற்கும் மேற்பட்ட உலமாக்களையும் (நஹ்ழிகள்) உருவாக்கும் உயரிய பணிக்கு உறுதுணையாகவும் செயற்பட்டு, எமது கல்லூரியின் நீண்டகால நிர்வாக சபை உறுப்பினராகவும், அதிபராகவும் பணியாற்றி, எமது கல்லூரியின் வளர்ச்சியிலும், அபிவிருத்தியிலும், மாணவர்களின் நலனிலும் மிகுந்த அக்கறையோடும் செயற்பட்டதோடு, தனது இரண்டு மகன்களை எமது கல்லூரியில் ஆரம்ப மாணவர்களாக இணைத்து, அவர்கள் இருவரையும் ஹாபிழ்களாகவும் உருவாக்கியிருந்தார்.

அட்டாளைச்சேனை ஷர்கிய்யா அரபுக் கல்லூரியின் மௌலவி பட்டதாரியும், மருதமுனையின் முதலாவது மதீனா பல்கலைக்கழக (மதனி) பட்டதாரியுமான மர்ஹும் அவர்கள், மருதமுனை ஜம்மியத்துல் உலமாவின் செயலாளராகவும், பின்னர் அதன் தலைவராகவும், 2002 இனப்பிரச்சினை காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்திலுள்ள 03 மாவட்டங்களையும் இணைத்து விஷேடமாக உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண ஜம்மியத்துல் உலமாவின் செயலாளராகவும் இருந்து, பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து தனது மார்க்கப் பணிகளையும், சமூகப் பணிகளையும் ஆற்றுவதில் உறுதியாக செயற்பட்டதோடு, மருதமுனை ஸகாத் நிதியத்தை ஸ்தாபிப்பதிலும் ஒரு முன்னோடியாக செயற்பட்டார்.

மேலும் நமது மருதமுனை பிரதேசத்தில் முதன்முறையாக மதீனா ஹஜ் ட்வர்ல்ஸ் எனும் பெயரில் ஹஜ் பயண முகவர் நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதனூடாக நமது பிராந்தியத்தைச் சேர்ந்த பல சகோதர, சகோதரிகள் இலகுவாக புனித ஹஜ் கடமைகளையும், உம்றாக்களையும் நிறைவேற்றுவதற்கும் வழிகாட்டியாக நின்றார்.

குறிப்பாக தனது அயராத முயற்சியினால் மதீனா பல்கலைக்கழக பட்டச் சான்றிதழை வைத்து ஆசிரியர் சேவைக்குள் நுழைந்து பல வருடங்கள் ஆசிரியராகவும் பணியாற்றிய மர்ஹூம் அவர்கள், அதன் பின்னர் அனைத்து அரபு நாட்டுப் பல்கலைக்கழகங்களிலிருந்தும் பட்டம் பெற்று வந்த, இலங்கையைச் சேர்த்த பட்டதாரிகள் பலரும் இலகுவாக அரச நியமனத்தை பெறுவதற்கு ஒரு மூலகர்த்தாவாக அமைத்திருந்தார்.

அவர் வபாத்தாகி ஒரு வருடம் நிறைவு பெறும் இத்தருணத்தில், எமது கல்லூரியின் வளர்ச்சியிலும், அபிவிருத்தியிலும் அன்னாருடைய காத்திரமான பங்களிப்புக்களை எமது அந்-நஹ்ழா சமூகம் என்றும் நன்றியோடு நினைவு கூர்வதோடு, அன்னாருடைய நற்பணிகளை வல்ல அல்லாஹுத்தஆலா பொருந்திக் கொண்டு, அவர்களுடைய பாவங்களை மன்னித்து உயர்தரமான ஜன்னதுல் பிர்தவ்ஸை வழங்க வேண்டும் எனவும் நாம் அனைவரும் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.

இவ்வண்ணம்,
நிர்வாக சபை மற்றும் பழைய மாணவர்கள்
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி
மருதமுனை

தகவல் தொகுப்பு:
செயலாளர்,
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி
மருதமுனை.

அல்ஹம்துலில்லாஹ்!எமது ஹிப்ழ் பிரிவு மாணவன் M.S. SAFI AHAMED தனது 19 ஆவது ஜுஸ்உவினை திறன்பட மனனம் செய்து முடித்துள்ளனர்.அ...
20/08/2026

அல்ஹம்துலில்லாஹ்!
எமது ஹிப்ழ் பிரிவு மாணவன் M.S. SAFI AHAMED தனது 19 ஆவது ஜுஸ்உவினை திறன்பட மனனம் செய்து முடித்துள்ளனர்.

அவருடைய அல்குர்ஆன் மனன முயற்சிகள் மேலும் சிறப்புற உங்கள் பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.

ஊடகப் பிரிவு
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி
மருதமுனை

அல்ஹம்துலில்லாஹ்!எமது ஹிப்ழ் பிரிவு மாணவன் M.F. YOOSUF தனது 05 ஆவது ஜுஸ்உவினை திறன்பட மனனம் செய்து முடித்துள்ளனர்.அவருடை...
20/08/2026

அல்ஹம்துலில்லாஹ்!
எமது ஹிப்ழ் பிரிவு மாணவன் M.F. YOOSUF தனது 05 ஆவது ஜுஸ்உவினை திறன்பட மனனம் செய்து முடித்துள்ளனர்.

அவருடைய அல்குர்ஆன் மனன முயற்சிகள் மேலும் சிறப்புற உங்கள் பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.

ஊடகப் பிரிவு
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி
மருதமுனை

அல்ஹம்துலில்லாஹ்!எமது ஹிப்ழ் பிரிவு மாணவன் A.NUSAIF AHAMED தனது 18 ஆவது ஜுஸ்உவினை திறன்பட மனனம் செய்து முடித்துள்ளனர்.அவ...
19/08/2026

அல்ஹம்துலில்லாஹ்!
எமது ஹிப்ழ் பிரிவு மாணவன் A.NUSAIF AHAMED தனது 18 ஆவது ஜுஸ்உவினை திறன்பட மனனம் செய்து முடித்துள்ளனர்.

அவருடைய அல்குர்ஆன் மனன முயற்சிகள் மேலும் சிறப்புற உங்கள் பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.

ஊடகப் பிரிவு
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி
மருதமுனை

அல்ஹம்துலில்லாஹ்!எமது ஹிப்ழ் பிரிவு மாணவன் M.M.M. AFAZ தனது 03 ஆவது ஜுஸ்உவினை திறன்பட மனனம் செய்து முடித்துள்ளனர்.அவருடை...
19/08/2026

அல்ஹம்துலில்லாஹ்!
எமது ஹிப்ழ் பிரிவு மாணவன் M.M.M. AFAZ தனது 03 ஆவது ஜுஸ்உவினை திறன்பட மனனம் செய்து முடித்துள்ளனர்.

அவருடைய அல்குர்ஆன் மனன முயற்சிகள் மேலும் சிறப்புற உங்கள் பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.

ஊடகப் பிரிவு
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி
மருதமுனை

அல்ஹம்துலில்லாஹ்!எமது ஹிப்ழ் பிரிவு மாணவன் M.F. YOONUS AHAMED தனது 02 ஆவது ஜுஸ்உவினை திறன்பட மனனம் செய்து முடித்துள்ளனர்...
19/08/2026

அல்ஹம்துலில்லாஹ்!
எமது ஹிப்ழ் பிரிவு மாணவன் M.F. YOONUS AHAMED தனது 02 ஆவது ஜுஸ்உவினை திறன்பட மனனம் செய்து முடித்துள்ளனர்.

அவருடைய அல்குர்ஆன் மனன முயற்சிகள் மேலும் சிறப்புற உங்கள் பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.

ஊடகப் பிரிவு
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி
மருதமுனை

அல்ஹம்துலில்லாஹ்!எமது ஹிப்ழ் பிரிவு மாணவன் N.A.M.HAATHY தனது 02 ஆவது ஜுஸ்உவினை திறன்பட மனனம் செய்து முடித்துள்ளனர்.அவருட...
19/08/2026

அல்ஹம்துலில்லாஹ்!
எமது ஹிப்ழ் பிரிவு மாணவன் N.A.M.HAATHY தனது 02 ஆவது ஜுஸ்உவினை திறன்பட மனனம் செய்து முடித்துள்ளனர்.

அவருடைய அல்குர்ஆன் மனன முயற்சிகள் மேலும் சிறப்புற உங்கள் பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.

ஊடகப் பிரிவு
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி
மருதமுனை

Address

Nooraniya Road
Maruthamunai
32314

Website

Alerts

Be the first to know and let us send you an email when அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி, மருதமுனை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share