26/10/2025
வவுனியாப் பல்கலைக்கழகத்தினால் "முயற்சியாண்மையும் சிறுவியாபார முகாமைத்துவமும்" கற்கைநெறியின் நான்காம் அணிக்கான(4th batch) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
புதிய தொழில் முயற்ச்சியை ஆரம்பிக்கவுள்ளவர்களுக்கும், தமது தொழிலை விஸ்தரிக்க முயற்ச்சிப்பவர்களுக்கும், சவால்களை எதிர்கொண்டு தொழிலை வெற்றிகரமாக முன்னகர்த்துவதற்கும் ஒரு சிறந்த சந்தர்ப்பம். அத்துடன் கா.பொ.த உயர்தரம் மற்றும் கா.பொ.த சாதாரண தரம் படித்துவிட்டு தொழிலுக்காக காத்திருப்போர் அல்லது புதிதாக தொழில் முயற்சியை உருவாக்க எதிர் பார்ப்போர் இக்கற்கை நெறியை தொடர்வதன் மூலம் புதிய தொழிலை உருவாக்குவதற்கும் அதனை வினைத்திறனாக முன்னகர்த்துவதற்கும் வளிவகுக்கும். ஒரு அணியில் 40 மாணவர்கள் எனும் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி வழங்கப்படுவதால் ஆர்வமுள்ளவர்கள் தாமதமின்றி விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
மேலதிக விபரங்களுக்கு
இணைப்பாளர்,
முயற்சியாண்மையும் சிறு வியாபார முகாமைத்துவமும் கற்கை நெறி,
தொ.பே.இல: 0774683308, .
அலுவலகம்: 0242223910
மின்னஞ்சல் :[email protected]
Application form: https://www.vau.ac.lk/certificate-in-entrepreneurship-and-small-business-management-batch-iv-2025-2026/