26/01/2023
https://www.hindutamil.in/news/supplements/ilamai-puthumai/211654-.html
9 வருடங்களுக்கு முன் மகனின் திருமணம்
அம்மா, இந்த பெண்ணை பிடித்திருக்கு
சரி
அம்மா, கல்யாணத்திற்கு கருப்பு சட்டை தான் போடப்போகிறேன். கருப்பின் மேல் உள்ள myth ஐ உடைக்க வேண்டும்.
Ok very good. அப்படியே செய்.
அம்மா, ஆம்பூர்னா பிரியாணிதான் கல்யாணத்தில போடனும்
O. K போட்டுடலாம்.
என்ன கொள்கையில் இவ்வளவு காலம் வாழ்ந்தோமோ, அதில் பிசகாமல் திருமணம் நடத்திய திருப்தி இன்றுவரை எங்களுக்கு உண்டு.
பணம், பரிசுப்பொருட்களை தவிர்த்து புத்தகங்களை மட்டுமே மணமக்களுக்கு கொடுக்க வைத்தோம். ஆம்பூரில் புத்தக்ககடைகள் இல்லாததால் NCBH, கருப்பு பிரதிகள் , தமிழ்நாடு அறிவியல் இயக்க பிரசுரம் போன்றவைகளை திருமண மண்டபத்திலேயே கடைகளை போடச்செய்தோம். மக்கள் புத்தகங்களை புரட்டிப்பார்க்கட்டும் என்று ஒரு மணி நேரம் தாமதமாகவே திருமணத்தை ஆரம்பித்தோம்.
அருள்மொழி தலைமையில் இராமலிங்கம், புனித பாண்டியன், யாழன் ஆதி, பேரா. இளங்கோ, சுரேஷ் ஆசிரியர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள் பங்கேற்பில் எல்லோருக்கும் வசதியான குடியரசு தினத்தில் திருமண்ம் நடந்தேறியது. புத்தகங்களையும், மரக்கன்றுகளையும் நாங்கள் வந்திருந்தவர்களுக்கு பரிசாக வழங்கினோம்
இந்து தமிழ் நாளிதழில் மிக அழகாக செய்தி வெளியிட்டு கௌரவப்படுத்தினர்.
எந்த ஒரு சடங்கு சம்பிரதாயத்திற்கும் உட்படாமல் மனித நேயம், அன்பு, அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து முழு மனதுடன் நடத்தினோம்.
இன்று 7 வயதில் மகனுடன் அவர்கள் வாழ்க்கை இசைகிறது
கோடுகள் இல்லா வாழ்க்கை என்றும் மகிழ்ச்சியே.
மணமக்களுக்கு மொய்ப்பணக் கவர்களையோ, பரிசுப் பொருள்களையோ யாரும் அளிக்கவில்லை. நல்ல புத்தகங்களை மட்டுமே பரிசுகள...