International Institute of Tamil Arts

International Institute of Tamil Arts Kontaktinformationen, Karte und Wegbeschreibungen, Kontaktformulare, Öffnungszeiten, Dienstleistungen, Bewertungen, Fotos, Videos und Ankündigungen von International Institute of Tamil Arts, Hochschule und Universität, Zürich.

அறிமுகம்

சுவிற்சர்லாந்து நாட்டில் தாய்மொழிக்கல்வியுடன் கலை வகுப்புக்களையும் முன்னெடுத்துவந்த தமிழ்க்கல்விச்சேவை 1997ம் ஆண்டு முதல் நுண்கலைத் தேர்வுகளையும் நடாத்தியது. இத்தேர்வில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டதுடன் இத்தேர்வினைத் தொடர்ந்து மேலும் சிறப்பாகவும், ஐரோப்பிய நாடுகள் தழுவிய வகையிலும் நடத்த வேண்டிய தேவை உணரப்பட்டது.

இதனடிப்படையில் 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஐரோப்பாவில் இயங்க

ிவந்த அதிகளவு கலை ஆசிரியர்களின் ஆதரவுடன் பேராசிரியர் அமரர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களால் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் ஆரம்பிக்கப்பெற்றது. சுவிற்சர்லாந்து நாட்டு சட்டவரைமுறைகளுக்கமைய பதிவு செய்யப் பெற்று இந்நிறுவகம் இயங்கிவருகிறது.

இவ் அமைப்பானது ஐரோப்பிய மண்ணில் வாழும் தமிழ் மாணவர்களுக்கென இலகுவானமுறையில் பாடத்திட்டத்தினைத் தயாரித்து வெளியிட்டது. இப்பாடத்திட்டமானது கலை ஆசிரியர்களினால் தயாரிக்கப்பட்டு தாயகம் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள பல கலைத்துறை வித்தகர்களின் கருத்துக்களுடன் முழுமைப்படுத்தப்பட்டு 2001ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இப் பாடத்திட்டத்தின் அடிப்படையில், பொதுவான தேர்வு விதிமுறைகளுக்கு அமைவாக 2002ஆம் ஆண்டிலிருந்து நடாத்தப்பட்டுவரும் கலைத் தேர்வுகளுக்கு யேர்மனி, பிரான்ஸ், டென்மார்க், இத்தாலி, நோர்வே, சுவிற்சர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தோற்றியுள்ளார்கள். பல நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் இம் மாணவர்களைத் தேர்விற்குத் தயார்ப்படுத்தி அனுப்பி வைப்பதுடன் மாணவர்களதும், தங்களதும் கலைப்பயணத்தினை சீரான நோக்கோடு முன்னெடுத்து வருகின்றார்கள்.

நிறுவகத்தின் தோற்றத்தாலும், செயற்பாட்டாலும் பல ஆசிரியர்கள் தமது கலைவாழ்வை மேலும் வளர்த்துள்ளதுடன், மாணவர்களையும் சிறப்புற பயிற்றுவித்துள்ளனர். தரம் ஒன்றிலிருந்து தரம் ஏழு (ஆற்றுகைத்தரம்) வரை தேர்வுகள் ஒவ்வோராண்டும் நடாத்தப்படுகின்றன. 2002ம் ஆண்டுமுதல் 2017ஆம் ஆண்டுவரையான தேர்வாண்டுகளில் …….. மாணவர்கள் ஆற்றுகைத்தரத் தேற்விற்குத் தோற்றியுள்ளார்கள். அனைத்துத் தேர்வுகளிலும் சித்தியடையும் மாணவர்கள் “கலைவித்தகர்” என்னும் பட்டத்தினைப் பெறுவதற்குத் தகுதியானவர்களாகின்றனர்.

புலமைக்குழு, துறைசார்குழு, நிறைவேற்றுக்குழு, நிர்வாகக்குழு போன்ற கட்டமைப்புக்களினைக் கொண்டு இயங்கிவரும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தனது செயற்பாடுகளை சுவிற்சர்லாந்து சூரிச் நகரில் தொடர்புப் பணியகத்தினைக்கொண்டு முன்னெடுத்துவருகிறது .

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் தேர்வு நடுவரும் சிவன் சக்தி நர்த்தனாலயத்தின்இயக்குனருமான முது நிலை நடன ஆசிரியர் திரு...
12/10/2024

அனைத்துலகத்
தமிழ்க்கலை நிறுவகத்தின்
தேர்வு நடுவரும்
சிவன் சக்தி நர்த்தனாலயத்தின்
இயக்குனருமான
முது நிலை நடன ஆசிரியர்
திருமதி. சுகந்தி பிரதீபன் அவர்களின் நிறுவனமான
சிவன் சக்தி நர்தனாலயத்தின்
23 ஆவது ஆண்டு விழா
எதிர்வரும் 19.10.2024 சனிக்கிழமை அன்று
வோ (VD) மாநிலத்தில்
நடைபெறவிருக்கின்றது.

நிகழ்வுகள்
சிறப்புற நடைபெற
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்
தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது.

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் தேர்வு நடுவரும் பரததர்சனா நடனாலயத்தின்இயக்குனருமான முது நிலை நடன ஆசிரியர் திருமதி. க...
02/10/2024

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின்
தேர்வு நடுவரும்
பரததர்சனா நடனாலயத்தின்
இயக்குனருமான
முது நிலை நடன ஆசிரியர்
திருமதி. காயத்திரி திஷாந்தன் அவர்களின் நிறுவனமான
பரத்தர்சனா நடனாலயத்தின்
20 ஆவது ஆண்டு விழா
(பரததர்சனம் கலை நிகழ்வு)
எதிர்வரும் 06.10.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று
லுட்சேர்ன் மாநிலத்தில்
நடைபெறவிருக்கின்றது.

நிகழ்வுகள்
சிறப்புற நடைபெற
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்
தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது.

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் முதுநிலைத் தேர்வு நடுவரும்சங்கீதாலயஇயக்குனருமான முதுநிலை இசை ஆசிரியர்இசைக்கலைமணிதிரு...
29/09/2024

அனைத்துலகத்
தமிழ்க்கலை நிறுவகத்தின்
முதுநிலைத் தேர்வு நடுவரும்
சங்கீதாலய
இயக்குனருமான
முதுநிலை இசை ஆசிரியர்
இசைக்கலைமணி
திரு. ஆறுமுகம் செகசோதி, கலைவித்தகர்
திரு. நீருஜன் செகசோதி ஆகியோரின் மாணவன்
இசைக்குயில் செல்வன். ஹரீஸ் சிறீதரன் அவர்களின் அரங்கேற்றம்
எதிர்வரும்
05.10.2024 சனிக்கிழமை அன்று
பாசல் மாநிலத்தில் நடைபெறவிருக்கின்றது.

நிகழ்வுகள் சிறப்புற நடைபெற அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி
நாகராஜா விஐயகுமார்
தேர்வுப்பொறுப்பாளர்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் முதுநிலைத் தேர்வு நடுவரும் சலங்கை நர்த்தனாலயஇயக்குனருமான முது நிலை நடன ஆசிரியர் முது...
21/09/2024

அனைத்துலகத்
தமிழ்க்கலை நிறுவகத்தின் முதுநிலைத்
தேர்வு நடுவரும்
சலங்கை நர்த்தனாலய
இயக்குனருமான
முது நிலை நடன ஆசிரியர் முதுகலைமாணி
திருமதி. மங்களநாயகி வசந்தகுமாரன்
அவர்களின் மாணவர்கள் வழங்கும்
“நர்த்தன நாதம் “
நிகழ்வு
எதிர்வரும் 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று
லுட்சேர்ன் மாநிலத்தில்
நடைபெறவிருக்கின்றது.

நிகழ்வுகள்
சிறப்புற நடைபெற
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்
தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது.

நன்றி.
நாகராஜா விஐயகுமார்
தேர்வுப் பொறுப்பாளர்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் முதுநிலைத் தேர்வு நடுவரும்திருக்கோணேஸ்வர நடனாலயஇயக்குனருமான முதுநிலை நடன ஆசிரியர்முன...
16/09/2024

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின்
முதுநிலைத் தேர்வு நடுவரும்
திருக்கோணேஸ்வர நடனாலய
இயக்குனருமான
முதுநிலை நடன ஆசிரியர்
முனைவர்
திருமதி. மதிவதனி சுதாகரன் அவர்களின் மாணவி
செல்வி. ஜீவிதா ஜீவதாசன் அவர்களின் அரங்கேற்றம்
எதிர்வரும்
21.09.2024 சனிக்கிழமை அன்று
துர்க்கா மாநிலத்தில் நடைபெறவிருக்கின்றது.

நிகழ்வுகள் சிறப்புற நடைபெற அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி
நாகராஜா விஐயகுமார்
தேர்வுப்பொறுப்பாளர்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து - முத்தமிழ் விழா - 2024
29/08/2024

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து -
முத்தமிழ் விழா - 2024

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் முதுநிலைத்  தேர்வு நடுவரும் கலைக்கோவில் ஆடல்கலையக இயக்குனருமான முது நிலை நடன ஆசிரியர...
29/08/2024

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின்
முதுநிலைத் தேர்வு நடுவரும்
கலைக்கோவில் ஆடல்கலையக இயக்குனருமான
முது நிலை நடன ஆசிரியர் முதுகலைமாணி
திருமதி. நிமலினி ஜெயகுமார் அவர்களின் மாணவர்கள் வழங்கும்
“சதங்கை நாதம் “ நிகழ்வு
எதிர்வரும் 07.09.2024 சனிக்கிழமை அன்று
துர்க்கா மாநிலத்தில் நடைபெறவிருக்கின்றது.

நிகழ்வுகள் சிறப்புற நடைபெற
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்
தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது.

நன்றி
நாகராஜா விஐயகுமார்
தேர்வுப்பொறுப்பாளர்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் முதுநிலைத் தேர்வு நடுவரும்திருக்கோணேஸ்வர நடனாலயஇயக்குனருமான முதுநிலை நடன ஆசிரியர்முன...
29/08/2024

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின்
முதுநிலைத் தேர்வு நடுவரும்
திருக்கோணேஸ்வர நடனாலய
இயக்குனருமான
முதுநிலை நடன ஆசிரியர்
முனைவர்
திருமதி. மதிவதனி சுதாகரன் அவர்களின் மாணவி
செல்வி. மாதங்கி பஞ்சலிங்கம் அவர்களின் அரங்கேற்றம்
எதிர்வரும்
15.09.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று
சூரிச் மாநிலத்தில் நடைபெறவிருக்கின்றது.

நிகழ்வுகள் சிறப்புற நடைபெற அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி
நாகராஜா விஐயகுமார்
தேர்வுப்பொறுப்பாளர்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்

சுவிஸ் நாட்டில் 30 வருடங்களிற்கு மேலாக கலைப்பணியாற்றிவரும் முதுநிலை நடன ஆசிரியர் முதுகலைமாணி திருமதி. பவானி சிறிதரன் அவர...
29/06/2024

சுவிஸ் நாட்டில் 30 வருடங்களிற்கு மேலாக கலைப்பணியாற்றிவரும் முதுநிலை நடன ஆசிரியர் முதுகலைமாணி திருமதி. பவானி சிறிதரன் அவர்களை அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் நிர்வாகக் குழு ஆசிரியர்கள் இணைந்து மதிப்பளித்திருக்கிறார்கள்.

இசை, நடன ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு – 2024ஜேர்மனி – 07.07.2024 ஞாயிற்றுக்கிழமை  காலை 09:30 மணி தொடக்கம் அனைவரையும் அன...
29/06/2024

இசை, நடன ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு – 2024
ஜேர்மனி – 07.07.2024 ஞாயிற்றுக்கிழமை
காலை 09:30 மணி தொடக்கம்
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மிகச்சிறப்பாக இடம்பெற்ற ஜேர்மன் நாட்டின் மதிப்பளிப்பு விழா - 2024அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வில் ஆற்றுகைத்தேர்வினை நிற...
24/06/2024

மிகச்சிறப்பாக இடம்பெற்ற ஜேர்மன் நாட்டின் மதிப்பளிப்பு விழா - 2024

அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வில் ஆற்றுகைத்தேர்வினை நிறைவுசெய்த மாணவர்களிற்கான மதிப்பளிப்பு கடந்த 22.06.2024 சனிக்கிழமை அன்று ஜேர்மன் நாட்டில் நடைபெற்றது.

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் தலைவர் திரு. ஆறுமுகம் செகசோதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கனடா நாட்டில் இருந்து வருகை தந்திருந்த ஓய்வு நிலை பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்கள் மாணவர்களிற்கான பட்டயச்சான்றிதழினை வழங்கி மதிப்பளித்ததுடன் சேவைக்கால அடிப்படையில் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்துடன் இணைந்து பணியாற்றிய தமிழ்க்கலை ஆசிரியர்களையும் மதிப்பளித்திருந்தார்கள்.

மிகச்சிறப்பான திட்டமிடல்களுடன் நிகழ்வினை ஒழுங்கமைத்திருந்த பாரதி கலைக் கூடத்தினருக்கும் நிகழ்வுகள் சிறப்புற நடைபெற முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைவருக்கும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.

நன்றி.
நாகராஜா விஐயகுமார் (சங்கர்)
தேர்வுப்பொறுப்பாளர்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்

மதிப்பளிப்பு நிகழ்வு – ஜேர்மன் – 22.06.2024 சனிக்கிழமை அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வில் ஆற்றுகைத் தரத்தினை நிறைவு செய்த...
17/06/2024

மதிப்பளிப்பு நிகழ்வு – ஜேர்மன் – 22.06.2024 சனிக்கிழமை

அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வில் ஆற்றுகைத் தரத்தினை நிறைவு செய்த மாணவர்களிற்கான மதிப்பளிப்பும், நிறுவகத்துடன் இணைந்து கலைப்பணியாற்றிய கலை ஆசிரியர்களிற்கான மதிப்பளிப்பும் எதிர்வரும் 22.06.2024 சனிக்கிழமை அன்று மதியம் 13:00 மணிக்கு (Seerosensaal, Steegerstrasse 38, 41334 Nettetal) நடைபெறவிருக்கின்றது.

இந் நிகழ்விற்கு அனைவரையும் வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி.
நாகராஜா விஐயகுமார் (சங்கர்)
தேர்வுப்பொறுப்பாளர்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்

Adresse

Zürich
8050

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von International Institute of Tamil Arts erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen