Pums.Avanathankottai west

Pums.Avanathankottai west my school
and students activities

12/11/2023
5ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவிய போட்டியில் ஆவணத்தாங்கோட்டை மேற்...
07/08/2022

5ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவிய போட்டியில் ஆவணத்தாங்கோட்டை மேற்கு பள்ளி மாணவி அர்ச்சனா மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தமைக்கான பரிசினையும் சான்றிதழையும் பெற்ற நிகழ்வு.

அரசு பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் பங்குபெற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் வெற்றி பெற்...
27/05/2022

அரசு பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் பங்குபெற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் வெற்றி பெற்ற மொத்தம் 35 பேரில் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் இருந்து ஒரே மாணவனாக வெற்றி பெற்று மதிப்புக்குரிய முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களிடம் இருந்து பாராட்டுக்களையும் மற்றும் 2000 ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களையும் பெற்ற ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி மாணவனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

ஜூனியர் ரெட் கிராஸ் நூற்றாண்டு இந்நிகழ்வை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில்(கொரோனாவிற்கு முன்) ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி...
28/03/2022

ஜூனியர் ரெட் கிராஸ் நூற்றாண்டு இந்நிகழ்வை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில்(கொரோனாவிற்கு முன்) ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி மாணவர்கள் கல்வி மாவட்ட அளவில் ஓவியம் ,பேச்சு கட்டுரை, வெற்றி பெற்றதற்கான பரிசுகளையும், மாவட்ட அளவில் ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் கேடயங்களையும் தற்போது பெற்றனர். பரிசு மற்றும் சான்றிதழ்‌ அனைத்தையும் உயர்திரு முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் மற்றும் மதிப்புமிகு மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் வழங்கினார்கள் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். பரிசுகள் பெற்ற மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்தி முடித்த ரெட்கிராஸ் அமைப்பினருக்கு நன்றிகள் பல.

*அறந்தாங்கி KBSSC அமைப்பு வழங்கிய இனிப்புகள் மற்றும் ரூ20000:* இன்று (21/03/2022) கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறகட்டளையின் ...
21/03/2022

*அறந்தாங்கி KBSSC அமைப்பு வழங்கிய இனிப்புகள் மற்றும்
ரூ20000:*

இன்று (21/03/2022) கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறகட்டளையின் நிறுவனர் பாசத்திற்குரிய M.G.சரவணன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆவணத்தாங்கோட்டை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறகட்டளையின் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினர். மேலும் பள்ளியின் கோரிக்கையை ஏற்று பள்ளியில் முகப்பு பகுதியில் டைல்ஸ் அமைப்பதற்காக நன்கொடையாக ரூ 20000 வழங்கினார்கள். KBSSC அமைப்பினர் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக ஊர் பொது மக்கள் சார்பாகவும் பெற்றோர்கள் சார்பாகவும் மற்றும் மாணவர் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

பல் மருத்துவர், பேராசிரியர் திரு அஜித் ஜீவி அவர்கள் ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தில் போட்டித் திற...
26/02/2022

பல் மருத்துவர், பேராசிரியர் திரு அஜித் ஜீவி அவர்கள் ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தில் போட்டித் திறனில் சிறந்து விளங்கும் வகையில் ‌ பள்ளி நூலகத்திற்கு இயர் புக் 2022, பொது அறிவு புத்தகம், கணிதம் மற்றும் நுண்ணறிவு வளர்க்கும் புத்தகம், குழந்தைகளுக்கான நீதிக் கதைகள் புத்தகம், கட்டுரை புத்தகம்,திருக்குறள் புத்தகம் ஆகியவற்றை வழங்கி உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.தொடர்ந்து சிந்தனையில் அரசுப் பள்ளியை மேம்படுத்துவது தொடர்பாக சிறந்த நோக்கம் கொண்டிருக்கும் மருத்துவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. தொடர்ந்து தனது நண்பர்கள் மூலமும் ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளியின் மேம்பாட்டிற்கு தேவையான உதவிகளை செய்வோம் என உறுதி அளித்தமைக்கு‌ இருகரம் கூப்பி வணங்குகிறோம்.

ஆவணத்தான்கோட்டை ‌ மேற்கு நடுநிலைப்பள்ளிக்கு தேவையான Electric பொருட்கள் வாங்குவதற்காக தனது பங்களிப்பை வழங்கிய காவல்துறை ஆ...
21/02/2022

ஆவணத்தான்கோட்டை ‌ மேற்கு நடுநிலைப்பள்ளிக்கு தேவையான Electric பொருட்கள் வாங்குவதற்காக தனது பங்களிப்பை வழங்கிய காவல்துறை ஆய்வாளர் திரு .ஜவகர் அவர்களுக்கு பள்ளியின் சார்பாக, ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்

*ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி ‌ மாணவிக்கு தங்க நாணயம் பரிசு:*2020 கொரோனா ஊரடங்கு ‌காலத்தில் அறந்தாங்கி ‌சாமி V லேண்ட் மா...
07/02/2022

*ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி ‌ மாணவிக்கு தங்க நாணயம் பரிசு:*

2020 கொரோனா ஊரடங்கு ‌காலத்தில் அறந்தாங்கி ‌சாமி V லேண்ட் மார்க்ஸ் நிறுவனத்தினரால் நடத்தப்பட்ட நிறங்கள்2020 ஆன்லைன் ஓவியப் போட்டிக்கான பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. அப்போட்டியில் அக்கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு படித்த ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி மாணவி ‌ செல்வி. தரன்யா ஸ்ரீ முதல் இடம் பிடித்து தங்க நாணயம் பரிசினை இன்று அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் கரங்களால் பெற்றார் என்பதனை‌ மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண்  அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 29 ஆவது மாநாட்டில் ஆவணத்தான்க...
10/12/2021

புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்
29 ஆவது மாநாட்டில் ஆவணத்தான்கோட்டை மேற்கு
பள்ளி மாணவிகள் ஸ்ரீநிதி மற்றும் அட்சயா ஸ்ரீ தங்களது அறிவியல் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து மாவட்ட அளவில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களை உயர்திரு முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் சான்றிதழ் கேடயம் வழங்கி வாழ்த்தினார்.மாவட்ட அளவில் வெற்றி பெற்றதன் மூலம் மாநில அளவில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்

தனது முதல் மாத சம்பளத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஆவணத்தான்கோட்டை மேற்கு ...
09/12/2021

தனது முதல் மாத சம்பளத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி மாணவர்களுக்கு Tie அன்பளிப்பாக வழங்கும் மருத்துவர் GV. அஜித் அவர்களுக்கு பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்

ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளியில் 2020- 2021ஆம் கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த 76 மாணவர்களுக்கும் ரூ15000 மதிப்பீட்டில் சி...
22/11/2021

ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளியில் 2020- 2021ஆம் கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த 76 மாணவர்களுக்கும் ரூ15000 மதிப்பீட்டில் சில்வர் வாட்டர் பாட்டில் அன்பளிப்பு வழங்கிய திரு . அரவிந்த் அவர்களுக்கும் மற்றும் அவர்கள் குடும்பத்தாருக்கும் நன்றிகள் பல.மேலும்‌ இது தொடர்ந்து நான்காவது வருடமாக அவர் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

31/10/2021 அன்று JCI கீரமங்கலம் சென்ட்ரல் புதுக்கோட்டை மாவட்ட சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான சிலம்பப் ப...
17/11/2021

31/10/2021 அன்று JCI கீரமங்கலம் சென்ட்ரல் புதுக்கோட்டை மாவட்ட சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் நம் ஆவணத்தான்கோட்டை மேற்குப் பள்ளி மாணவிகள் 20 to 25 kg எடைப்பிரிவில் அட்சயா ஸ்ரீ‌ முதலிடம் (cash prize 1500),25 to 30 kg எடைப்பிரிவில் கனிஷ்கா இரண்டாமிடமும்(cash prize 1000) 25 to 30 எடைப்பிரிவில் மாணவன் நிஷாந்த் மூன்றாம் இடமும்(cash prize 500 ) மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவி மகேஸ்வரி மூன்றாம் இடமும்(cash prize 500) வென்று ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றனர்.அவர்களுக்கு பள்ளியின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Address

Aranthangi
614616

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pums.Avanathankottai west posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share