29/07/2021
"அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சை மாவட்ட '12ம் வகுப்பு படித்து முடித்த மாணவ, மாணவியர்களுக்கு ஒரு மிகமுக்கிய தகவல்"
-இந்த தகவல் முக்கியமாக பொறியியல் படிப்பினை பயில இருக்கும் மாணவர்களுக்காக- ஆம், "பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, அரியலூர்" "(University College of Engineering Ariyalur)"பற்றிய ஒரு குறிப்பு.
#2008ம் ஆண்டு தமிழக அரசால் உருவாக்கப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகம் மூலம் அரியலூர் மாவட்டதில் ஆரம்பிக்க பட்டது.
# இந்த கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் (Constituent College) கல்லூரி.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயக்குகிறது.
# இங்கு 5 பொறியியல் பாடப் பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றது.
1.CIVIL - பொதுவியல்
2.CSE - கணணிப் பொறியியல்
3.ECE- மின்னணுவியல் மற்றும் தொடர்புப் பொறியியல்.
4.EEE- மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
5.MECHANICAL - இயந்திரப் பொறியியல்.
# இக்கல்லூரி சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் அனைத்து ஆய்வக உபகரணங்களும் கொண்ட சிறப்பு ஆய்வுவகங்கள்.
# அனைத்து துறைகளிலும் அனுபவ மிக்க பேராசிரியர்கள்(குறைந்தது 10 வருட அனுபவம்)
# நடைமுறை செயல் விளக்கங்களுடனான வகுப்பறை பாடங்கள் கற்றுத் தரப்படுகிறது.
# மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு தனித் தனி தங்கும் விடுதிகள்.
# குறைந்த கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் (அரசால் நிர்ணயம் செய்யப்பட்டது).
# அனைத்து பிரிவினர்க்கும் அரசின் நேரடி கல்வி உதவித்தொகை (Scholarship) பெற்று தரப்படுகிறது. இது நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
# மாணவர்களுக்கு கல்லூரி சென்று வர அரசு பேருந்து பயண சீட்டு.
ஆகையால் அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சை மாவட்ட மாணவ மாணவியர்கள் இக்கல்லூரியில் சேர்ந்து பயன் அடையுமாறு தெரிவிக்கப்படுகிறது.
#உண்மைத்தன்மை அறிய கல்லூரிக்கு ஒரு முறை சென்று பார்த்தபின் முடிவு செய்யுங்கள்.
#அரியலூர் - ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலையில் விளாங்குடி அருகே அமைந்துள்ளது.
# College Counselling Code 3016.
# இக்கல்லூரி, உங்களது ஆன்லைன் கல்லூரி தேர்ந்து எடுக்கும்போது முதலாவது தேர்வாக இருக்க வேண்டும். அப்போதுதான் இக் கல்லூரியில் இடம் பெற வாய்ப்பு உண்டு.
"குறிப்பாக இந்த கல்லூரியில் பயின்ற மாணவர்கள் பலர் அரசு நிறுவனங்களில் பொறியாளர்களாக பணி நியமனம் பெற்றுள்ளார்கள்".
இந்த அரிய வாய்ப்பை மாணவ மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.