31/12/2025
இந்த வருடத்தின் இறுதியை அடைந்து விட்டோம்.....
இந்த வருடம் நமக்கு பல்வேறு மகிழ்ச்சி மற்றும் சோகங்களின் கலவையாகவே கடந்து சென்றது.....
மகிழ்ச்சி நிறைந்த நினைவுகளையும்
அன்பு உறவுகளின் இழப்பால் ஏற்பட்ட துக்கத்தையும் பரிசளித்துச்சென்றது....
எப்போதும் போல என்னுடைய துயரமான நேரங்களில் நீங்கள் அனைவரும் எனக்கு தோள் கொடுத்து நின்றீர்கள்.....
என்னுடைய அனைத்து நன்மை நிறைந்த செயல்களிலும் எனக்கு ஆதரவும் உத்வேகமும் தந்தீர்கள்.....
உங்கள் அனைவருக்கும் எமது நன்றிகள் 🙏🙏🙏
வாடி நின்ற போதெல்லாம் எனை தேற்றி எனக்கு ஆறுதல் தந்த அனைத்து உறவுகளுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.....
என்ன பெற்றோம் இப்பூவுலகில் என்றால்....
நான் பெற்றது உங்களைப்போன்ற அருமையான உறவுகளைத்தான்....
கல்லூரி எமக்கு பரிசளித்த அற்புத உறவுகள் நீங்கள் அனைவரும்......
எத்தனையோ கசப்புகளை, இன்னல்களை கடந்து செல்ல துடுப்பாக நின்ற உங்கள் அனைவருக்கும் நன்றி 🙏 🙏 🙏
இன்றும் எம்மீது நம்பிக்கை வைத்து
உடன் பயணிக்கும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்......
எனக்கு மிகச்சிறந்த பாடம் அருளி பிரிந்து சென்றவர்களுக்கும் நன்றி 🙏 🙏 🙏
உதாசீனம் செய்தவர்களும் உதறியவர்களும் எனக்கு உத்வேகம் அளித்தவர்கள் தான்...
என்னை செதுக்கியவர்கள் தான்......
கடந்த காலங்களின் கசப்புகளிலிருந்து வெளியே வருவோம்...
மகிழ்ச்சியான புதிய ஆண்டை வரவேற்க தயாராவோம்.....
இது வரை நமக்கு தீங்கிழைத்தவரை மன்னிப்போம்....
அது போல் என்னால் யாராவது வருத்தமுற்றிருப்பின் என்னையும் மன்னிக்கவும்.......
புதிய ஆண்டு புதிதாக பிறப்பது போல் நாமும் புதியவர்களாக நடைபோடுவோம்.....
ஏக்கங்களை விட்டு ஏற்றங்களை நோக்கி பயணிக்கும் உங்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துகள்.....
வரும் 2026 உங்கள் அனைவரது வாழ்விலும் ஒளி வீசும் ஆண்டாக அமையட்டும்....
உங்கள் அனைவருக்கும் பரிபூரண ஆயுள் மற்றும் ஆரோக்கியம் அருளட்டும்.....
வாழ்த்துகள் உறவுகளே 🙏🙏🙏