தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கல

  • Home
  • India
  • Chennai
  • தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கல

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கல Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கல, College & University, 577, Anna Salai, Saidapet, Chennai.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Open University அல்லது TNOU) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரசினால் நிறுவப்பட்டுள்ள ஓர் பல்கலைக்கழகமாகும். தமிழகச் சட்டப்பேரவை இயற்றிய (2002ஆம் ஆண்டின் எண் 27) சட்டத்தின் கீழ் உயர்கல்வித் தொடரவியலா ஆதரவற்றோருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள ஆண்/பெண்களுக்காகவும் இன்னும் பிற காரணங்களுக்காக பள்ளிக்கல்வியை தொடராதவர்களுக்கும் பயன்

தருமாறு இக்கல்வி நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. பல பாடத்திட்டங்களில் பட்டய, சான்றிதழ், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பாடதிட்டங்களை வழங்குகிறது. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பல்கலைக்கழகத்தில் சேர்வது எளிதாக ஆக்கப்பட்டிருக்கிறது. தேர்வுகளும் வேண்டியவாறு எடுத்துக்கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தில் வழங்கப்படும் பணிசார் பாடங்கள் (vocational courses) செய்தொழிலில் அறிவு பெறவும் புதிய வேலை வாய்ப்புகளை வளர்க்கவும் பயனுள்ளதாக உள்ளன.

இது கிண்டியில் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக வளாகத்தில் இயங்குகிறது. 2011ஆம் ஆண்டு தமிழக முதல்வர் மு. கருணாநிதி இப்பல்கலைக்கழகத்தின் புதிய நிர்வாக கட்டிடத்தை சைதாப்பேட்டையிலுள்ள ஆசிரியர் கல்வி வளாகத்தில் திறந்து வைத்தார்.[1]

இப்பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தராக முனைவர் திருமதி சந்திரகாந்தா ஜெயபாலன் உள்ளார்.

Address

577, Anna Salai, Saidapet
Chennai
600015

Opening Hours

Monday 10am - 5:45am
Tuesday 10am - 5:45am
Wednesday 10am - 5:45am
Thursday 10am - 5:45am
Friday 10am - 5:45am

Telephone

+919345913376

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கல posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கல:

Share