Mgr Govt Film and Television Institute of Tamilnadu

Mgr Govt Film and Television Institute of Tamilnadu The MGR Government Film & Television Institute of Tamil Nadu is run by the Government of Tamil Nadu. Established in the year 1946. Cinematography
3. Film Editing

The Film & Television Institute of Tamil Nadu is run by the Government of Tamil Nadu and is functioning under the administrative control of Director of Information and Public Relations. The institute also called as M.G.R Film and Television Institute of Tamil Nadu. It is located at CIT Campus Taramani, Chennai. The following Diploma courses are conducted in the Film and Television Institute of Tam

il Nadu.
1. Direction and Screenplay writing
2. Sound Recording and Sound Engineering
4. Film processing
5.

அடவி :பெரும் கா(ஆ)ட்சி ஊடகமான சினிமாவை நான்கு தலைமுறைகளுக்கு முன்பாக நம் முப்பாட்டன்கள் எப்படி ரசித்தார்கள் என்பதை நிகழி...
13/12/2018

அடவி :

பெரும் கா(ஆ)ட்சி ஊடகமான சினிமாவை நான்கு தலைமுறைகளுக்கு முன்பாக நம் முப்பாட்டன்கள் எப்படி ரசித்தார்கள் என்பதை நிகழில் காணத்தயாராகுங்கள். அன்றைய காட்சி அட்டைகளுக்கு பதிலாக கதைசொல்லியாக காட்சி விளக்க வரிகளுடன் ...

'தமிழ் சினிமாவின் நூற்றாண்டை' முன்னிட்டு ...

தென்னிந்தியாவில் கடைசி மௌனப்படம் வெளியாகி 85 ஆண்டுகளுக்கு பிறகு ... தென்னிந்திய சினிமா ஒரு முழு மௌனத்தை பிரசவிக்கிறது.

எவ்வித ஒலிகளுமின்றி காட்சி ஊடகம் 'அடவி' யாய் மறுபிறப்பெடுக்கிறது.

ஒலிகளற்ற இருட்டு சினிமா காட்சிக் கூடத்தில் ...
மூச்சுவிடும் சப்தமே பிற பார்வையாளருக்கு பேரொலியாய் மாறுமென்பதால் ... மூச்சடக்கி 'அடவி' யை உலக சினிமாவாய் ரசிக்க ...

15 க்கும் மேற்பட்ட உலக திரைப்பட விழாக்களில் பங்கெடுத்தும், பரிசுகள் பெற்ற பிறகு ...

இந்தியாவில் முதன் முதல் காட்சியாக( INDIAN PREMIERE) 16 - வது சென்னை உலக திரைப்பட விழாவில் காண்காட்சியாகிறது !!!

திரையரங்கம் : தேவி பாலா
நாள் : 15.12.2018
நேரம் : மாலை 5:30

இன்றைய 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழில் "அடவி" குறித்த செய்தி :Film on eco-conservation wins international laurels(P Sange...
09/06/2018

இன்றைய 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழில் "அடவி" குறித்த செய்தி :

Film on eco-conservation wins international laurels
(P Sangeetha, Times Of India)

With ecological conservation and going environment-friendly becoming the need of the hour, environmentalists in the city are leaving no stone unturned to spread awareness on the same. Coimbatore-based environmentalist R Mohammad Saleem has now donned a new hat as an actor in a film that revolves around eco-conservation and tribal life. The feature film titled Adavi, is directed by Chennai-based debutant director Velmurugan P and has popular Tamil poet Vikramadithyan playing a crucial role in it. The icing on the cake is that the movie has been winning accolades across the world, including awards at Barcelona Planet Film Festival, Mexico International Film Festival, and Indonesia World Environmental Film Festival.

Adavi has been shot in the Western Ghats and predominantly at Adavi Nainar reservoir in Tirunelveli. “The plot primarily touches upon two subjects- tribal welfare and eco-conservation. The story revolves around an old tribal man (played by Vikramadithyan) who refuses to leave the forest and a little boy whom he raises. The film tries to break the myth that forest dwellers are responsible for the destruction of the forest. The truth is that they are the ones who are carrying out sustainable living for generations. Their survival is based on the forest. It’s the outsiders who contribute to forest degradation with poaching and littering,” says Saleem.

Talking about the plot, he adds, “The story revolves around the old man who dwells in a forest alone. He later finds a small kid in the jungle and raises him as his own. Not only does he teach the language of birds and animals, but also helps him learn every detail of the forest. Some of the scenes were canned as live shots of our trekking and eco-conservation activities. I play a doctor in the film. The plot shows how tribal people understand the forest well and are its true guardians.” Interestingly, the film was shot two years ago and since then has been doing the rounds at international film circuits.

Talking about the challenges shooting in remote locations, the film’s director Velmurugan P, tells us, “Today, there is a lot of talk about environmental destruction and degradation and it was high time I played my part, too. Since we were shooting in the forest, we avoided trolleys, heavy cameras, artificial lightings and a big crew.” Velmurugan calls the film a tribute to 100 years of Tamil cinema. “Adavi has been made as a silent film as we wanted to capture the beauty of the sounds of animals and birds. Secondly, the film is a tribute to the silent era.”

Get latest news & live updates on the go on your pc with News App. Download The Times of India news app for your device. Read more City news in English and other languages.

#சுற்றுசூழல்_திரைப்படம்

#தமிழ்_திரைப்பட_நூற்றாண்டு_2018

அடவி :ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் நடைபெறப்போகும் யுராசிய உலக திரைப்படவிழாவில் திரையிட அடவி தேர்வாகியுள்ளது.
04/06/2018

அடவி :

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் நடைபெறப்போகும் யுராசிய உலக திரைப்படவிழாவில் திரையிட அடவி தேர்வாகியுள்ளது.

அடவி :போலந்து நாட்டில் நடைபெறப்போகும் ஈரோப்பியன் சினிமாட்டோகிராபி அவார்ட்ஸ் உலக திரைப்பட விருதுக்கான தேர்வில் சிறந்த மௌன...
04/06/2018

அடவி :

போலந்து நாட்டில் நடைபெறப்போகும் ஈரோப்பியன் சினிமாட்டோகிராபி அவார்ட்ஸ் உலக திரைப்பட விருதுக்கான தேர்வில் சிறந்த மௌனத்திரைப்படத்திற்காக அடவிக்கு விருது.

இந்த படைப்பின் திரையாடிகள் :

1) மூட்டுக்காணியாக : கவிஞர். விக்ரமாதித்யன்
2) குட்டிராஜாவாக : மாஸ்டர். தங்கமணி, கல்வராயன்மலை
3) டேனியேலாக : ஆண்ரூ, (மறைவு)
4) டாக்டர். நாராயணனாக : கோவை. சலீம்
5) வனச்சரகராக : மீரான் மைதீன்
6) வனவராக : இளையராஜா
7) நந்தனாவாக : அனு கல்யாணராகவன்
8) பால்பாண்டியாக : பறவை மனிதன். பால்பாண்டி
9) வேட்டை தடுப்பு காவலராக : கோவை. ஹாசன், வடகரை. அஹமது
10) உதவியாளராக : விஜய் டீவி. டைகர் கார்டன். தங்கதுரை
11) வாகன ஓட்டுனராக : செங்கோட்டை. சாமி
12) பணிப்பெண்ணாக : அம்பிகா

மற்றும் பேச்சிப்பாறை காணி ஆதிவாசி மக்கள்.

#தமிழ்_திரைப்பட_நூற்றாண்டு_2018

அடவி :இந்தோனேஷியா உலக சுற்றுச்சூழல் திரைப்படவிழாவில் சிறந்த புதுமுக சுற்றுச்சூழல் திரைப்படமாக அடவிக்கு விருது. இந்த படைப...
26/05/2018

அடவி :

இந்தோனேஷியா உலக சுற்றுச்சூழல் திரைப்படவிழாவில் சிறந்த புதுமுக சுற்றுச்சூழல் திரைப்படமாக அடவிக்கு விருது.

இந்த படைப்பின் பெருமைக்குரியோர் :

அடவி உருவாக்கத்தில் பெரும்பங்காற்றிய சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள்
Mohammed R Saleem
Hasan Hasan
Saanthakumar Velusamy
Dhanu Paran
DrRavi Vet

#தமிழ்_திரைப்பட_நூற்றாண்டு_2018

அடவி :மெக்சிகோ உலக திரைப்படவிழாவில் சிறந்த முதற்பட இயக்குநர் பிரிவில் அடவிக்கு 'வெண்கலப் பனை' விருது. இந்த படைப்பின் பெர...
22/05/2018

அடவி :

மெக்சிகோ உலக திரைப்படவிழாவில் சிறந்த முதற்பட இயக்குநர் பிரிவில் அடவிக்கு 'வெண்கலப் பனை' விருது.

இந்த படைப்பின் பெருமைக்குரியோர் :

ஒளிப்பதிவாளர் : எஸ்பி. மணி
வசனங்கள் : சி. மோகன்
திரைக்கதை : எம். இளையராஜா

#தமிழ்_திரைப்பட_நூற்றாண்டு_2018

அடவி :தென்னிந்திய சினிமாவின் தோற்றுவாயான கீசகவதத்தின் நூற்றாண்டை கொண்டாடும் விதத்தில் தயாரிக்கப்பட்ட கருப்பு-வெள்ளை முழு...
12/05/2018

அடவி :

தென்னிந்திய சினிமாவின் தோற்றுவாயான கீசகவதத்தின் நூற்றாண்டை கொண்டாடும் விதத்தில் தயாரிக்கப்பட்ட கருப்பு-வெள்ளை முழுநீள மௌனத்திரைப்படம் அடவி. சப்தங்களற்ற மௌனத்தை காட்சிகள் வழி கடத்த முடியுமா என்கிற பரீட்சார்த்த முயற்சி.

அதற்கு முதல் அங்கீகாரமாக ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா பிளானட் திரைப்பட விழாவில் நான்கு விருதுகள் கிடைத்துள்ளது.

சுற்றுச்சூழல் திரைப்படம்.

#தமிழ்_திரைப்பட_நூற்றாண்டு_2018

தென்னிந்திய சினிமா பிதாமகனின் நினைவு தினம் :தென்னிந்திய சினிமாவின் தந்தையான ஆர். நடராஜ முதலியாரின் 47 வது நினைவு தினம் இ...
02/05/2018

தென்னிந்திய சினிமா பிதாமகனின் நினைவு தினம் :

தென்னிந்திய சினிமாவின் தந்தையான ஆர். நடராஜ முதலியாரின் 47 வது நினைவு தினம் இன்று. 02.05.1971 ஆம் ஆண்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் மரணமடைந்த தென்னிந்திய சினிமாவின் தோற்றுவாயின் சடலம் எவ்வித போற்றுதலுமின்றி அண்ணாநகர் சுடுகாட்டில் சாம்பலான நாள் இன்று. அவரது மரண செய்தியை, அன்று வளர்ந்திருந்த தமிழ் திரையுலகமோ, ஊடகங்களோ ஒரு பொருட்டாக மதிக்காது கடந்து போனது மாபெரும் வடுவாகும். அவரை இன்றுவரையில் தமிழ் சினிமாவின் தந்தையாக முறையாக அங்கீகரிக்காதது நம்மின் மாபெரும் குறையே.

இந்திய சினிமாவின் வரலாறு 1913 ஆம் ஆண்டு துவங்கியிருந்தாலும், சில ஆண்டுகளாக தென்னிந்தியாவில் முதல் சினிமாவை துவக்குவதற்கு சுணக்கம் இருந்துவந்தது. அதனை நிவர்த்தி செய்தவர் ஆர். நடராஜ முதலியார். 1917 ஆம் ஆண்டு புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலையில் "இந்தியா பிலிம் கம்பெனி" என்கிற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி 'கீசகவதம்' எனும் மௌனப்படத்தை தயாரித்து 1918 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

கீசகவதத்தின் சிறு சட்டகமோ இல்லை விளம்பரமோ இன்றுவரையில் திரைப்பட ஆய்வாளர்களின் கண்களில் தட்டுப்படவில்லை என்பது மாபெரும் வியப்பான செய்தி. ஆனால், தற்போது ஆர். நடராஜ முதலியாரின் "இந்தியா பிலிம் கம்பெனி" என்கிற நிறுவனத்தின் லெட்டர் பேடும், நடராஜ முதலியார் கைப்பட எழுதிய கடிதமும் முருகராஜ் என்பவரின் தேடுதலால் கைவரப்பட்டுள்ளது.

அவரது இந்த நினைவு நாளில், இந்த ஆண்டை தமிழ் சினிமாவின் நூற்றாண்டாகவும், ஆர். நடராஜ முதலியாரை தமிழ் சினிமாவின் தந்தையாகவும் அங்கீகரிக்க முயற்சிப்போம்.

தெருக்கூத்து :சாதாரணமாக தெருக்கூத்து நிகழ்வு 7 மணிநேரம் நடைபெறும். அதனை மாணவர்களுக்காக 45 நிமிடங்களாக சுருக்கி நிகழ்த்தி...
14/11/2017

தெருக்கூத்து :

சாதாரணமாக தெருக்கூத்து நிகழ்வு 7 மணிநேரம் நடைபெறும். அதனை மாணவர்களுக்காக 45 நிமிடங்களாக சுருக்கி நிகழ்த்திய நிகழ்வு.
புரிசை தெருக்கூத்து கலைஞர்களின் குறு வடிவ நிகழ்கலை.

Address

TARAMANI, CHENNAI
Chennai
600113

Alerts

Be the first to know and let us send you an email when Mgr Govt Film and Television Institute of Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share