09/02/2023
வேலூர் மாவட்டம் வல்லம் கேகேஎஸ் மணி கல்வி நிறுவனத்தில் காவல்துறை சார்பாக பாதுகாப்பாக இணையவழியை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.
முகாமிற்கு தாளாளர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர்கள் குமார், புஷ்பராஜ், புரொபசர்கள் குமரகுருபரன், கருணாமூர்த்தி முன்னிலை வகித்தனர். புரொபசர் காஞ்சானா வரவேற்றார்.
வேலூர் கிராமிய காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, கிரைம் பிரான்ச் தலைமை காவலர் சுமதி ஆகியோர் இணையதளத்தில் நடக்கும் மோசடிகள், அதிலிருந்து பாதுகாத்து கொள்வது எப்படி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை உதாரணத்துடன் விரிவாக விளக்கி கூறினார்கள்.
தொடர்ந்து அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
இந்த விழிப்புணர்வு முகாம் மிகவும் பயனுள்ள வகையில் இருந்ததாகவும், முகாமிற்கு ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகத்திற்கும், வருகை தந்த காவல்துறையினருக்கும் மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.
முகாமில் கேகேஎஸ் மணி பாலிடெக்னிக், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கல்வியல் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக கணியம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச பொது மருத்தவ முகாம் நடைபெற்றது.