Yadava College Alumni

Yadava College Alumni To integrate and bring the former students who also happen to be achievers and contribute to their professions. Keep them in contact.

Yadava College is a community Tertiary Institution serving the rual and economically under previleged students from the southern region of Tamil Nadu.

15/04/2024


வாக்களிக்க மறக்காதீர்கள். வாக்களிக்க நேரம் ஒதுக்குங்கள். வாக்களிப்பது உங்கள் உரிமை. உரிமையை இழந்து விடாதீர்கள்.

https://www.bbc.com/news/world-asia-67870119ஜனவரி 2ம் நாள் விடிந்தபோது எனது தொலைபேசியின் பிபிசி பயன்பாட்டில் (ஆப்) ஒரு வ...
04/01/2024

https://www.bbc.com/news/world-asia-67870119

ஜனவரி 2ம் நாள் விடிந்தபோது எனது தொலைபேசியின் பிபிசி பயன்பாட்டில் (ஆப்) ஒரு விமானம் ஜப்பான் டோக்கியோ விமான ஓடு தளத்தில் தீ பிடித்ததாக செய்தி வந்தது. இரண்டு மணி நேரம் கழித்து எல்லோரும் பாதுகாப்பாக வெளியேற்ற பட்டதாக வேறு செய்தி வந்தது, மிகவும் ஆறுதலாக இருந்தது. இது நமக்கு வெகு தூரத்தில் எங்கோ நடந்தது என்று விட்டுவிடாமல், இந்த செய்தியில் இருந்தும்.

3 ஆகஸ் 2016 அன்று திருவனந்தபுரத்தில் இருந்து துபாயில் தரை இறங்கிய இ கே 521 விமானம் தீ பற்றிக்கொண்டது, இதில் இருந்த 295 பயணியாற்றும் உரையில் சத்தமின்றி காப்பாற்றப்பட்டனர் என்ற செய்தியிலிருந்தும் ஒரு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு விமானமும் பறக்கும் தகுதி வாய்ந்தது என்று சான்றளிக்கப்பட அந்த விமானத்தில், அது தரையில் இருக்கும்போது தீ பற்றிக்கொண்டால் அதில் இருக்கும், எல்லா பயணியரும் (1 நிமிடம் 30 வினாடி) 90 வினாடிகளுக்குள் பாதுகாப்பாக வெளியேற இடைவெளியும், வாயில்களும் இருக்க வேண்டும். இது எல்லா அளவு விமானத்திற்கும், பயணியர் எண்ணிக்கைக்கும் பொருந்தும். இந்த 90 நிமிட அளவுகோல், எந்த பயணப்பெட்டியும் இல்லாமல் விமான பயணியாளர்களின் கட்டளைகளுக்கு பணிந்து பயணியர் நடக்கும் போது மட்டுமே இது செயல்முறையாகும்.

இப்பொழுது இரண்டு விபத்துகளுக்கும், இரண்டு வேற்றுமைகள் இருந்தன. ஒன்று டோக்கியோ விபத்து பலமானது துபாய் விபத்து மேலோட்டமானது. டோக்கியோ விபத்தின் அவசரகால வெளியேற்றத்தின்போது பயணியர் விமான பணியாளர்களின் கட்டளைகளை பின்பற்றினார்கள், ஆனால் துபாய் விபத்தில் பயணியர் கட்டளைகளை பின்பற்றவில்லை. ஆனாலும் எல்லோரும் பிழைத்துக்கொண்டார்கள் என்பது தவறான முன்னுதாரணமாகும். இதற்கு அவர்களாவது நல்லூழ் காரணமாக இருக்கலாம். முதல் காரணம் தீயின் வலுத்தன்மை, இதனை எப்போதுமே நமக்கு சாதகமான காரணியாக கொள்ளமுடியாது.

கீழ்ப்படிதல் என்ற பதம் நம் தலைமுறையினரிடையே காணாமல் போய்க்கொண்டிருக்கிற ஒன்றாகும். பெற்றோருக்கும், சான்றோருக்கும், ஆன்றோருக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்த காலம் நமக்கு மறந்து பொய்விட்ட சூழலில், விமான பயணங்களில் விமான பணியாளர்களின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடத்தல் அறம் மட்டுமல்ல சட்டப்படியானதுமாகும். பன்னாட்டு விமான பயண சட்டங்களின் கீழ் அவர்களுக்கு அவசர கால அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற பயணிகளின் பாதுகாப்பு கருதி அத்து மீறும் பயணியரை தடுத்து (கைது) வைத்து தரை இறங்கும் போது அந்த நாட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. விமானத்தில் ஏறும் முன்பு அதிக சினத்துடனோ போதை உணர்வோடோ அல்லது கட்டுப்படுத்த இயலாதவாறு செயல்பட்டாலோ, உங்கள் செலவில் உங்களை விமானத்தில் ஏற்ற மறுக்கவோ அவர்களுக்கு அதிகாரம் உண்டு. அவர்கள் அழகாவும் நம்மை பார்த்து வணங்கி நம்மை பார்த்து புன்னகைப்பதை பார்த்து அவர்களை குறைவாக எடை போட்டுவிடக்கூடாது.

நம் பயணப்பெட்டி, அதன் உள்ளடக்கமான நகை கடவுசீட்டு உள்ளிட்ட எல்லாமே காப்பீட்டின் ஊடாக ஈடுசெய்ய தக்கவை தான். ஆனால் நம் உயிரும் நம்மோடு பயணிக்கிற மற்றவர்களின் உயிர் திரும்பப்பெற இயலாதது. முட்டாள் தனமான செயல்களால் தன்னைத்தான் மாய்த்துக்கொள்வதே தவிர்க்கவேண்டியது, அடுத்தவர்களுக்கு அவர்களை காப்பாற்றிக்கொள்ள தாம் செய்யும் மடத்தனம் ஒரு போதும் ஒத்துக்கொள்ள முடியாது.

எண்ணிப்பார்த்தால், இதே (டோக்கியோ) விபத்து தமிழகம், கேரளம் ஆந்திரா, ஏன் இந்தியாவில் எங்கு நடந்திருந்தாலும் குறைந்தது பாதி பேர் இறந்திருப்பார்கள் என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும். ஏனெனில், நம்மால் கீழ்ப்படியவும் முடியாது, நம் தலைச்சுமையை மறக்கவும் முடியாது!

Leaving valuables behind was a "major factor" behind the evacuation of 379 people as fire engulfed the plane.

25/12/2022
B.Com 1991-94 Students and friends, reunited in 2019,  Photo Credit Mu.Mohan
01/04/2020

B.Com 1991-94 Students and friends, reunited in 2019, Photo Credit Mu.Mohan

01/04/2020

யாதவர் கல்லூரி நிர்வாகம் மீண்டும் சமுதாயத்திடம் வரவேண்டும், ஏற்கனவே தாவாவில் ஈடுபட்டிருக்கிற குழுக்களில் இருந்து இந்த அறக்கட்டளையை புணரமைக்க எனது நண்பர் திரு கருணாநிதி அவர்கள் விளைகிறார்கள். அவர் ஆஸ்திரேலியாவில் சிட்னியை வாழ்விடமாக க்கொண்டவர். முன்னாள் மாணவர், சிட்னியில் புகழ் பெற்ற சமூக சேவகருமாவார். தற்போது கோயமுத்தூரில் வசிக்கும் இவரது தொலைபேசி எண் கீழே உள்ளது. அரசியல், முன் விரோதம், போட்டி பொறாமை இவைகளைத்தாண்டி சமுதாய செல்வம் சமுதாயத்தின் நலன் கருதி சமுதாயத்திடமே வரவேண்டும் என்ற கருத்துள்ள முன்னாள் மாணவர்கள் அன்னாரை தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவையும் மேலான கருத்துக்களையும் தெரிவிக்கலாம். நன்றி! ‪+91 6379 660 559

28/07/2018

கல்லூரிகள் பலவுண்டு மதுரையில், ஆனால் கிராமத்தின் வசந்தமும் பட்டினத்தின் வசதியும் கலந்தது இது! நம் உறவுகளின் உரிமையும் ஒழுக்கத்தின் இறுக்கமும் கலந்தது இது. இதைப்போன்ற ஒரு கலைச்செல்வத்தை காண்பது அரிது. இதன் இதமான அரவணைப்பில் கதகதப்பில் கலந்திருந்த நாம் இதனை கடந்து போனதோடு மறந்தும் போய்விடலாமா?

வாருங்கள் நண்பர்களே நாம் அந்த நினைவுகளை அசைபோடுவதோடு அதன் தற்கால வளர்ச்சிக்கும் நம்மால் ஆன பங்களிக்க ஒரு வாய்ப்பையும் தேடிக்கொள்வோம், வாருங்கள்!!

This Sunday, the students of B.Com 1986-89 got together with their families after exactly 30 years from the departure to...
29/03/2018

This Sunday, the students of B.Com 1986-89 got together with their families after exactly 30 years from the departure to face the world with a determination to reconvene and challenge the cruel wheel of time. It was a wonderful time and effort spent.

1986-89 Yadava College B.Com reunion. On 25th March, Alumni of 1986-89 B.Com batch mates are coming back after 29 years ...
15/03/2018

1986-89 Yadava College B.Com reunion. On 25th March, Alumni of 1986-89 B.Com batch mates are coming back after 29 years to meet, greet and catch up with. Our Principal Dr Sampath has graciously agreed to accommodate us. When we left this noble place, we published a little book of addresses and autographs. This is so much instrumental in bringing us together again. When we departed we did a mistake of not taking a photo, also ours was the time that there were no cellular phones. Yet we managed to bring together 40 of us. Looking for more of our mates, from those who could not be traced from their earlier addresses. Even if you are from other majors of our time, want to meet any one of us, please let us know and appear on that date. It would be only good to see you. Welcome.

01/02/2018

On 25th March, Alumni of 1986-89 B.Com batch mates are coming back after 29 years to meet, greet and catch up with. Our Principal Dr Sampath has graciously agreed to accommodate us. When we left this noble place, we published a little book of addresses and autographs. This is so much instrumental in bringing us together again. When we departed we did a mistake of not taking a photo, also ours was the time that there were no cellular phones. Yet we managed to bring together 20 of us. Looking for more of our mates, from those who could not be traced from their earlier addresses. Even if you are from other majors of our time, want to meet any one of us, please let us know and appear on that date. It would be only good to see you. Welcome.

Please make an attempt to attend this annual meeting of the Yadava College Alumni.
18/10/2017

Please make an attempt to attend this annual meeting of the Yadava College Alumni.

21/09/2017

நண்பர்களே யாதவர் கல்லூரி முன்னாள் மாணவர் இணையத்தில் இணைந்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இந்த தளத்தை, இழந்த உங்கள் கல்லூரி நட்புகள் மீளவும் சந்தித்து அலவளாவவுமான ஊடகமாகவும் பயண்படுத்துங்கள். உங்களிடமிருந்து அரிய கல்லூரிக்கால நிழற்படங்களும் நட்பைத்தேடியுள்ள விண்ணப்பங்களை வரவேற்கிறேன்.

Address

Thiruppalai
Madurai
625014

Alerts

Be the first to know and let us send you an email when Yadava College Alumni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Yadava College Alumni:

Share