Sri Ramamoorthi High School.Vasanthapuram

Sri Ramamoorthi High School.Vasanthapuram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Ramamoorthi High School.Vasanthapuram, College & University, VASANTHAPURAM, NADANTHAI(P. O), P. VELUR(T. K), NAMAKKAL(D. T), Namakkal.

06/08/2012

THIS IS FOR PEOPLE WHO STUDIED IN RAMA MOORTHI HIGH SCHOOL ..LET US JOIN AND LIKE THIS PAGE

21/06/2012

வெற்றியின் மகிழ்ச்சி நம்மை ,
ஒரு நாள் சோம்பேறி ஆக்கும் ”

“தோல்வியின் துக்கம் நம்மை ,
ஒவ்வொரு நாளும் சுறுசுறுப்பாக மாற்றும் ”

19/06/2012

----------------ஆய கலைகள் அறுபத்தி நான்கு----------------------
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

19/06/2012

வாழைப்பழம் - நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை. ஆனால் விலை குறைந்த பழவகைகளிலும் எல்லா சத்துக்களும் நிறைந்து கிடைக்கின்றன. அவ்வகையில் இந்த உலகத்தில் எல்லா பாகங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைக்கும் ஒரே கனிவகை வாழைப்பழம் மட்டும்தான். வாழைப்பழம்தானே! என்று எண்ணிவிடாதீர்கள். அவற்றை சற்று அன்போடு, ஆர்வத்தோடு பாருங்கள். அதன் வடிவமைப்பு எவ்வளவு அழகாக இருக்கிறது. வாழைப்பழங்கள் பல நூறு வகைகள் இருந்தாலும் சாதாரணமாக கிடைக்கும் வாழைப்பழத்தின் நன்மையைப் பற்றி சற்று தெரிந்துக் கொள்வோம். இந்த கட்டுரையை படித்த பின்பு வாழைப்பழத்தை நீங்கள் பார்க்கும் விதம் முழுவதுமாக மாறியிருக்கும். இதற்கு பின்பு வாழைப்பழத்தை வாங்கி அதை நாளைக்குச் சாப்பிடலாம் என்று உங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் சிறை வைக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.
வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூளை வலிமை (Brain Power):
மிடில் செக்ஸ் (Middle Sex)ல் உள்ள டிவிக்கென்ஹாம் (Twickenham) கல்வி நிலையத்தில் இவ்வருடம் 200 மாணவர்களுக்கு காலை, இடைவெளி மற்றும் மதிய உணவில் வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது அவர்களது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மலச்சிக்கல் (Constipation):
ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் வந்துவிட்டால் அவனது மனித குணமே மாறிவிடும். அதற்கு ஒரே வழி உங்கள் உணவில் தினமும் வாழைப்பழத்தைச் சேர்த்து சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் (Fiber) இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.

மந்தம் (Hangovers):
நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் (Milk Shake) தயார் செய்து குடிக்கவும். வாழைப்பழம் தேனுடன் சேர்த்து வயிற்றை அமைதிப்படுத்தி இரத்தத்திலுள்ள இனிப்புச் சத்தை அதிகமாக்குகிறது. அத்துடன் இதில் பாலும் சேர்ப்பதால் பால், நீர் சத்தை சரியாக வைத்துக்கொள்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து மந்த நிலைக்கு டாட்டா காட்டிவிடுகிறது.

நெஞ்செரிப்பு (Heart Burn):
உங்களுக்கு நெஞ்செரிகிறதா? வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் உங்களை விட்டு பறந்துவிடும்.

உடற்பருமன் (Over Weight):
ஆஸ்திரியா (Austria)வில் உள்ள மனோதத்துவ நிறுவனத்திலுள்ள (Institute of Psychology) ஆராய்ச்சியாளர்கள் 5000 நோயாளிகளை சோதனை செய்து பார்த்ததில் அதிகமான உயர்ந்த மனஅழுத்த வேலைகளில் உள்ளவர்கள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். இந்த அழுத்தத்தின் காரணத்தால் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு சீராக இல்லாத காரணத்தால் உடற்பருமன் ஏற்படுகிறது. அவர்களுக்கும் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வந்து உடற்பருமன் குறைவதாக அந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

குடற்புண் (Ulcers):
வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததினால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமல் காக்கிறது.

சீரான வெப்பநிலை (Temperature Control):
வாழைப்பழத்திற்கு குளிர்ந்த பழம் (Cooling Fruit) என்ற பெயரும் உண்டு. தாய்லாந்து நாட்டு மக்கள் அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிடுவதால் அவர்களது உடலின் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது.

காலநிலை மாற்றம் (Seasonal Affective Disorder):
வாழைப்பழம் சாப்பிடுவதால் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஒரு வித மந்த நிலையை இல்லாமல் ஆக்குகிறது.

புகைப்பிடிப்பது (Smoking):
புகைப்பிடிப்பவர்கள் அந்த கொடுமையிலிருந்து விடிவு பெற வாழைப்பழத்தை சாப்பிடலாம். வாழைப்பழத்தில் B6. B12 அதிகமாக இருப்பதால் புகைப்பிடிப்பதால் ஏற்படும் Ni****ne ஐ கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதால் புகைப்பிடிப்பதிலிருந்து விடுபடலாம்.

மன அழுத்தம் (Stress):
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் நீங்கும்.

காலைத் தூக்கம் (Morning Sickness):
மூன்று நேர உணவு இடைவேளைக்குள்ளும் வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடம்பிலுள்ள இரத்தத்தில் உள்ள குளுகோஸ் (Blood Sugar) அளவு அதிகமாக்கப்பட்டு காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.

நரம்பு நாளங்கள் (Nerve System):
இதில் B விட்டமீன்கள் அதிகமாக இருப்பதால் நரம்பு நாளங்கள் நன்றாக செயல்பட்டு நரம்புத் தளர்வை போக்குகிறது.

அழுத்தக் குறைவு (Depression):
‘Mind’ என்ற நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவாக ஒவ்வொரு உணவிற்குப் பின்பும் வாழைப்பழம் சாப்பிட்டால் அழுத்தக் குறைவு நோயை விரட்டலாம் என்று கூறுகிறது. ஏனெனில் மூளையிலிருந்து கசியக் கூடிய நீரை திட்டப்படி வெளியேற்றி மனிதனை மகிழ்ச்சியாக்குகிறது.

இரத்த சோகை (Anemia):
வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் அதிக அளவு சிவப்பணுக்களை உண்டு பண்ணி இரத்தச் சோகை வராமல் தடுக்கிறது.

இரத்த அழுத்தம் (Blood Pressure):
குறைந்த அளவு உப்பும் அதிக அளவு பொட்டாசியமும் இருப்பதால் அதிக இரத்த அழுத்தத்தையும், வாதநோயையும் குறைக்க முடிமென்று அமெரிக்க அரசு உணவு நிறுவனம் கூறுவதோடு அதிக வாழை மரங்களை சாகுபடி செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
The new England Journal of Medicines ஆராய்ச்சிப்படி நமது தினசரி உணவில் வாழைப்பழத்தையும் சேர்த்துக் கொண்டால் Stroke கினால் ஏற்படக்கூடிய மரணத்தின் விகிதத்தை 40% குறைக்கலாம் என்கிறது. இவ்வளவு நன்மைகளை சுமந்து நிற்கும் வாழைப்பழத்தை பாதுகாக்கும். அந்த மஞ்சள் நிறத்தைக் கொண்டதால் தன்னால் இயன்ற உதவியை மனிதனுக்கு செய்ய மறக்கவில்லை. ”மறு” என்று சொல்லக்கூடிய கருப்பு வடு உடம்பில் ஏற்பட்டால் வாழைப்பழத் தோலை சிறு துண்டாக வெட்டி உள் தோல் அந்த வடுவின் மேலும் மஞ்சள் தோல் வெளியில் தெரியும் படி வைத்து அதன் மீது சிறிது மருத்துவ டேப் ஒட்டி வைத்தால் நாள்பட அந்த மறு மறைந்துவிடும்.

கொசுக்கடிக்கு மருந்து தேவையா?
வாழைப்பழத்தோலின் உட்பகுதியை கொசுக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தி தேய்த்தால் கொசுக் கடியால் ஏற்பட்ட வேதனையும் தீரும். வீக்கமும் வற்றிவிடும்.

வாழைப்பழத்தைச் சாப்பிட்டு விட்டு அதன் தோலை குப்பைத் தொட்டியில் எறிவதற்கு முன் அதன் உள்தோலைக் கொண்டு உங்கள் காலணி (Shoe) யை பாலிஷ் செய்து வெள்ளைத் துணியால் துடைத்துப் பாருங்கள். உங்கள் Shoe மினு மினுக்கும்.
எல்லா விட்டமின்களையும் ஒரு பழத்தின் மூலம் தந்து நமது உடல் நலம் பேண வழி வகுத்த வல்லமை படைத்த நம் இறைவனுக்கே எல்லாப் புகழும்.

வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலை தெருவிலே எறிந்து விடுவதால் அத்தோலில் கால் வைத்து வழுக்கி மரணம் வரை சென்றவர்கள் உண்டு. அவ்வாறு தூக்கி எறிவதை நாமும் தவிர்த்து மற்றவர்களையும் தடுக்க வேண்டும். வாழைப் பழத் தோலை மனிதர்கள் நடக்குமிடத்தில் கண்டால் அதை எடுத்து குப்பை தொட்டியில் போட்டு அதன் மூலம் நன்மையை தேடிக் கொள்ள முன் வரவேண்டும்.

19/06/2012

உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது ,இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது ! ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 - 1372)

நம் தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம் , எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை !

சிந்தித்து பாருங்கள் சரியாக கட்டாமல் சாய்ந்து போன ஒரு கோபுரம் உலக அதிசயமா ? அல்லது ஆயிரம் வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக, மிக பிரம்மாண்டமாக நிற்கும் ஒரு கோபுரம் உலக அதிசயமா ?

சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம்

19/06/2012

மருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி...

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்பது ஒரு பழைய பழமொழி ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும்

இது பல மருத்துவப்பயன்களைக் கொண்டிருக்கிறது. சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு மிகவும் நன்மை செய்பவை ஆகும்

தமிழ் பெயர் இஞ்சி
ஆங்கில பெயர் Ginger
அறிவியல் பெயர் Zinziber

100 கிராம் இஞ்சியில் உள்ல சத்துக்கள்...

சக்தி (Energy) 67 கலோரிகள்
ஈரப்பதம்/நீர் (Moisture) 80.9 கிராம்
புரதம் (Protein) 2.3 கிராம்
கொழுப்பு (Fat) 0.9 கிராம்
தாதுக்கள் (Minerals) 1.2 கிராம்
நார்ச்சத்து (Fibre) 2.4 கிராம்
கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates) 12.3 கிராம்
கால்சியம் (Calcium) 20 மி.கி
பாஸ்பரஸ் (Phosporous) 60 மி.கி
இரும்பு (Iron) 3.5 மி.கி
மெக்னீஸியம் (Magnesium) 405 மி.கி
செம்பு (Copper) 0.74 மி.கி
மாங்கனீசு (Manganese) 5.56 மி.கி
ஸிங்க்/நாகம் (Zinc) 1.93 மி.கி
குரோமியம் (Chromium) 0.057 மி.கி
கரோட்டீன் (Carotene) 40 மை.கி
தையாமின் (Thiamine) 0.06 மி.கி
ரைப்போஃப்ளேவின் (Riboflavin) 0.03 மி.கி
நியாசின் (Niacin) 0.6 மி.கி
வைட்டமின் சி (Vitamin C) 6 மி.கி
Source: National Institute of Nutrition - Hyderabad

இது மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும் .வேரில் மஞ்சள் போலவே இருக்கும் .பொங்கலின் பொது இஞ்சி கொத்தும் மஞ்சள் கொத்தையுமே புது பொங்கல் பானையில் கட்டுவார்கள். இது பல நோய்களுக்கு அருமருந்தாக இது உள்ளது.
ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது.

இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.
மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது. உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது.

பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள்.
இஞ்சியின் மருத்துவ குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

சுக்கு+கொத்துமல்லி விதையை பொடி செய்து அதை தண்ணீரில் கொதிக்க வைத்து அத்னுடன் வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். வயிற்றில் சேரும் கொழுப்பு கரையும்.தொப்பை குறையும். செரிமான பிரச்சினை நீங்கும்.மலச்சிக்கல் தீரும். நன்றாக பசி எடுக்கும். இந்த பானத்தை காலை மாலை இருவேளையும் அருந்தலாம்.

ஆக முன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும்.

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும் என்கிறது அந்தச் செய்தி. பொதுவாக நாம் அரிசியையே பிரதான உணவாக தினமும் உண்டு வருகிறோம். இப்படிப் பல ஆண்டு காலம் அரிசியை தினசரி உணவாகக் கொள்பவர்களுக்கு, “பைப்ரினோலிடிக்” செயற் பாடுகுன்றி, ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுவதாகவும், இதனை இஞ்சி சரி செய்வதாகவும் இந்த ஆய்வுச் செய்தி தெரிவிக்கிறது.

இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பை உண்டாகாமல் தடுத்தும், மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இஞ்சியையும் சுக்கையும் உபயோகிக்கும் போது சுத்தி செய்தல் மிக முக்கியமானது .இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்ப்படும்.

இஞ்சியை சுத்தம் செய்ய அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும் .அதே போல் சுக்கை சுத்தம் செய்ய அதன் மேல் சுண்ணாம்பை தடவிகாயவைது ,பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும் .இது மிக முக்கியமானது சுத்தம் செய்யாமல் உபயோகிக்கவேண்டாம்.

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்ப முறையே.

அது என்ன இஞ்சி இடுப்பழகி என ஒரு குரல் கேட்கிறது. தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு குவளை மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும். அதன்பிறகு எந்த வயதிலும் நீங்கள் இடுப்பழகியாகவே இருக்கலாம்.”

எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு கரண்டி இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூச்சை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.

இஞ்சி- சுக்கு இவை உடம்பில் உள்ள அனைத்து நோய் கிருமிகளையும் போக்கும் ஆற்றல் படைத்த ஒரு சர்வ ரோக நிவாரிணி .

18/06/2012

ஒரு எழையின் வறுமை கவிதை :

"எதிர் வீடு ஜன்னலை பார்த்தேன் நிறைய சட்டைகள் ..!
என் சட்டையை பார்த்தேன் நிறைய
ஜன்னல்கள் ..!"

18/06/2012

ஜனாதிபதி தேர்தலில் பண பேரம் நடக்கிறது: மம்தா பானர்ஜி சரமாரி ...

''நான் யாரு.. எனக்கே தெரியலையே''... ஜனாதிபதி தேர்தல் விஷயத்தில் ...

இன்று 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

'புதுக்கோட்டை': கட்சி நிர்வாகிகளை கூட சந்திக்க ஜெ ...

புதுக்கோட்டை எம்.எல்.ஏவாக கார்த்திக் தொண்டைமான் நாளை பதவியேற்பு!

ஜுன் 30 தமிழகம் வருகிறார் பிரணாப் முகர்ஜி

கலாமை ஜனாதிபதியாக்க, இணைய தளத்தில் ஆதரவு கோருகிறார் மம்தா

Address

VASANTHAPURAM, NADANTHAI(P. O), P. VELUR(T. K), NAMAKKAL(D. T)
Namakkal
637206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Ramamoorthi High School.Vasanthapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Sri Ramamoorthi High School.Vasanthapuram:

Share