Hi Tech Polytechnic College

Hi Tech Polytechnic College கல்வியே நாட்டின் முதன் அரண்

Pongal Celebration
13/01/2026

Pongal Celebration

திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் உள்ள ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழர் திருநாளை முன்னிட்டு மாணவ மாணவிகளிடம...
13/01/2026

திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் உள்ள ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழர் திருநாளை முன்னிட்டு மாணவ மாணவிகளிடம் சமத்துவத்தை வளர்க்கும் விதமாக சமத்துவ பொங்கல் விழா 13.01.2026 அன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக TTN கல்வி குழுமத்தின் தலைவர் Er.லாரன்ஸ் அவர்களும் கல்லூரியின் தாளாளர் திருமதி.ஹெலன் லாரன்ஸ் அவர்களும் கலந்து கொண்டு தமிழர் பாரம்பரிய முறையில் பானையில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் திருவிழாவினை கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.சுரேஷ் தங்கராஜ் தாம்சன் அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் இவ்விழாவில் தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கும் விதமாக மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஜாதி மத இன வேறுபாடுயின்றி அனைவரும் சமத்துவத்துடன் வாழும் விதமாக மாணவர்கள் சமத்துவத்திற்கான விழாவாக இந்த பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகள் தங்களது துறை துறைவாரியாக பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முதல் மூன்று இடங்களைப் பிடித்த துறைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்கள் மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியில் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும், அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இனிப்பு மற்றும் கரும்பு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.

வள்ளியூர் TTN கல்வி குழுமத்தின் கீழ் இயங்கி வரும் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு மற்று...
10/01/2026

வள்ளியூர் TTN கல்வி குழுமத்தின் கீழ் இயங்கி வரும் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி 10.09.2025 பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்த TTN கல்வி குழுமத்தின் தலைவர் Er.T.லாரன்ஸ் அவர்கள் மாணவர்களை வரவேற்று பேசிய போது இப்போட்டியில் பங்கு பெற்ற அனைத்து பள்ளி மாணவர்களும் கிரிக்கெட் பயிற்சியை பெறுவதற்கு வசதியாக கிரிக்கெட் சார்ந்த உபகரணங்களை இலவசமாக வழங்கினார்கள். இப்போட்டியில் முதல் இடத்தைப் பெற்று இராதாபுரம் NVC அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 7000/- ரூபாயை பரிசு தொகையாக பெற்றுக் கொண்டனர், திசையன்விளை சமாரியா தூய யோவான் மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடத்தை பள்ளி பெற்றுக் கொண்டனர் அவர்களுக்கு 5000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது, மூன்றாம் இடம் பிடித்த பரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 3000 ரூபாய் வழங்கப்பட்டது, மேலும் நான்காம் இடம் பிடித்த ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரியின் சார்பாக பேருந்து வசதி செய்து கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கிய கல்லூரியின் முதல்வர் முனைவர். G.சுரேஷ் தங்கராஜ் தாம்சன் அவர்கள் மாணவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களையும் கூறி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் தாளாளர் திருமதி.ஹெலன் லாரன்ஸ் அவர்களும், மேலும் நேரு நர்சிங் கல்லூரி முதல்வர், மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர், மற்றும் குளோப் பப்ளிக் ஸ்கூல் முதல்வர் அவர்களும் பாராட்டி பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்கினார்கள். கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் திரு.முகமது இர்பாம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். போட்டிக்கான ஏற்பாட்டினை கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் திரு சுந்தர் அவர்கள் செய்திருந்தார்கள்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்த வங்கி சார்பாக  தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு 08....
09/01/2026

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்த வங்கி சார்பாக தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு 08.01.2026 அன்று மருத்துவமனை வளாகத்தில் இரத்ததான தன்னார்வர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை வகித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் அவர்களும் மருத்துவமனை கண்காணிப்பாளர் அவர்களும் இரத்த தான முகாம்களை நடத்தி வரும் தன்னார்வர்களை பாராட்டி சான்றிதழ்களையும் கேடயங்களையும் வழங்கினார்கள். நம் #ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியும் ஆண்டுதோறும் இரத்ததான முகாமினை நடத்தி மாணவ மாணவிகள் இரத்த தானம் செய்து வருகின்றனர். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நமது கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் திரு.ராம்கி அவர்கள் கல்லூரியின் சார்பாக பாராட்டு கேடயத்தை பெற்றுக் கொண்டார்.

நமது ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் 30.12.2025 அன்று இறுதி ஆண்டில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற...
31/12/2025

நமது ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் 30.12.2025 அன்று இறுதி ஆண்டில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் உலகின் முன்னணி கட்டுமானப் பொருட்கள் மற்றும் கண்ணாடி தயாரிப்பு நிறுவனமான #செயின்ட்-கோபைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் திரு.N.வளவன் அரசு திரு.J.ரிஷிகேஷ் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களை தேர்வு செய்தார்கள். நிகழ்வின் முன்னதாக மாணவ மாணவிகள் மத்தியில் பேசிய மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் அந்நிறுவனத்தின் செயல்களையும் வேலைவாய்ப்பை பெறும் மாணவர்களுக்கு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் விளக்கம் கொடுத்தார்கள். நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய கல்லூரியின் முதல்வர் முனைவர்.G.சுரேஷ் தங்கராஜ் தாம்சன் அவர்கள் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்நிறுவனத்தில் #மெக்கானிக்கல் துறையை சேர்ந்த 18 மாணவர்களும், #எலக்ட்ரிக்கல் துறையை சேர்ந்த 13 மாணவ மாணவிகளும், #எலக்ட்ரானிக்ஸ் துறையில் 3 மாணவ மாணவிகளும் மற்றும் #சிவில் துறையில் ஒரு மாணவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் பணி நியமன ஆணையைப் பெற்ற மாணவ மாணவிகளை கல்லூரியின் தலைவர் Er.T.லாரன்ஸ் அவர்களும், தாளாளர் திருமதி ஹெலன் லாரன்ஸ் அவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள். இதற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் வேலை வாய்ப்புத் துறை அதிகாரி Er.Y.கிப்சன் அற்புதராஜ் செய்திருந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் உள்ள T.T.N கல்வி குழுமத்தின் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் 23.12.2025 அன்று க...
25/12/2025

திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் உள்ள T.T.N கல்வி குழுமத்தின் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் 23.12.2025 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் வள்ளியூர் பரி.திருத்துவ தேவாலய Rev.தேவன்பு அவர்கள் ஜெபம் செய்து கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்கினார்கள். மாணவர்களும் ஆசிரியர்களும் இயேசு பிறப்பு பாடல்களை பாடி ஆராதனை செய்தனர். இவ்விழாவிற்கு கல்லூரியின் சேர்மன் Er.T.லாரன்ஸ் அவர்களும் கல்லூரியின் தாளாளர் திருமதி.ஹெலன் லாரன்ஸ் அவர்களும் தலைமைதாங்கி ஆசிரியர்கள், மாணவ மாணவியர் மற்றும் கல்லூரி ஊழியர்கள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்கள். கல்லூரி வளாகத்தில் மாணவ மாணவியர்கள் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து இயேசு கிறிஸ்துவை வழிபட்டனர். மாணவ மாணவிகளுக்கான கிறிஸ்துமஸ் குடில் போட்டி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது மேலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இயேசு கிறிஸ்து குறித்த மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.சுரேஷ் தங்கராஜ் தாம்சன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இதற்கான ஏற்பாட்டினை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

நமது ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடை...
21/12/2025

நமது ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி

இடம்: ஹைடெக் கல்லூரி மைதானம்
நாள்: 10.01.2026

முன்பதிவு தொடர்புக்கு:
கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் திரு.C.சுந்தர் - 90422 23407

நமது ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் 12.12.2025 அன்று மெக்கானிக்கல் மற்றும் மரைன் இன்ஜினியரிங் பிரிவில் பயிலும் மாணவர்கள...
19/12/2025

நமது ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் 12.12.2025 அன்று மெக்கானிக்கல் மற்றும் மரைன் இன்ஜினியரிங் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னையில் இயங்கி வரும் ஜெயம் CNC நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.ரத்தினவேல் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தற்போது தொழிற்சாலையில் உள்ள தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கல்லூரியின் முதல்வர் முனைவர் G.சுரேஷ் தங்கராஜ் தாம்சன் அவர்கள் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரியின் மெக்கானிக்கல் துறை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

நமது ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் 10.12.2025 புதன்கிழமை அன்று மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைமை த...
11/12/2025

நமது ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் 10.12.2025 புதன்கிழமை அன்று மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைமை தாங்கிய கல்லூரியின் முதல்வர் முனைவர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் அவர்கள் மக்களின் உரிமைகள் குறித்தும் அதன் அவசியம் குறித்தும், அவற்றினை பாதுகாப்பது குறித்தும் மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியின் இறுதியில் மாணவ மாணவிகள் அனைவரும் மனித உரிமைகளுக்கான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி திரு.முகமது இஃபாம் அவர்களும் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் திரு.ராம்கி அவர்களும் செய்திருந்தனர்.

நமது ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் நவம்பர் 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.  இந்திய அரசியலமைப்பு...
08/12/2025

நமது ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் நவம்பர் 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் கொண்டாடும் விதமாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய கல்லூரியின் முதல்வர் முனைவர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் அவர்கள் அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு செய்தார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவ மாணவிகள் அனைவரும் இந்திய அரசியலமைப்பு தினத்திற்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி திரு.முகமது இஃபாம் அவர்கள் செய்திருந்தார்கள்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக  நடைபெற்று வரும்  குழந்தைகள் அறிவியல் திருவிழாவில் இன்று 08.11.2025 சனிக்கிழமை, ந...
08/11/2025

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக நடைபெற்று வரும் குழந்தைகள் அறிவியல் திருவிழாவில் இன்று 08.11.2025 சனிக்கிழமை, நமது ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட ஆசிரிய ஆசிரியைகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு துறை வாரியாக ஆய்வகங்களை பார்வையிட்டனர். துறை தலைவர்களும் பேராசிரியர்களும் மாணவ மாணவிகளுக்குதொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினார்கள்.

நமது ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் டாட்டா நிறுவனத்தின் TP சோல...
21/10/2025

நமது ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் டாட்டா நிறுவனத்தின் TP சோலார் சார்பாக 24.09.2025 முதல் 26.09.2025 வரை மூன்று நாட்கள் வேலைவாய்ப்புக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் வேலை வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வில் எவ்வாறு கையாள்வது குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியை கல்லூரியின் முதல்வர் டாக்டர்.G.சுரேஷ் தங்கராஜ் தாம்சன் அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்கள்.

Address

Samugarangapuram
Radhapuram
627112

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919566556744

Alerts

Be the first to know and let us send you an email when Hi Tech Polytechnic College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Hi Tech Polytechnic College:

Share