The Central Law college

The Central Law college The Central Law College, Salem,Tamil Nadu, India. It was opened in 1984. It is affiliated to Tamil Nadu Dr. Ambedkar Law University.

15/11/2014

நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். ஒரு இளைஞன் அவளருகில் வந்தான்.
அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் மெல்லக் கேட்டான். "நான் இங்கே அமரலாமா?"
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்....

பின் உறக்கக் கேட்டாள் "இன்று இரவு உன்னோடு தங்குவதா? என்ன நினைத்தாய்?" அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர்.

அவனுக்கு அவமானமாகி விட்டது.
அங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான்.
சிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் சென்றாள்.
சொன்னால்

"நான் ஒரு மனோதத்துவம் பயிலும் மாணவி உங்கள் மன நிலையைப் பார்க்க எண்ணி அவ்வாறு செய்தேன்"

இளைஞன் உரக்ககச் சொன்னான்.

என்ன? ஒர் இரவுக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டுமா? மிக அதிகம்" இப்போது அனைவரும் அவளையே பார்த்தனர்.
அவள் குறுகிப் போனாள்.

அவன் சொன்னான் "நான் ஒரு வழக்கறிஞர் யாரையும் குற்றவாளியாக்க என்னால் முடியும்...!

நீதி :
ஒருவரை நம்ம அவமானப்படுத்தினால் கண்டிப்பாக நாம் அவமானப்பட வேண்டிய காலம் வரும்.

14/09/2013

தெரிந்து கொள்ளுங்கள.

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் –ஸ்ரீவில்லிபுத்த ூர் ஆண்டாள் கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர் ..4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்...
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம் பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)

ரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு…. ஐ.ஐ.டி., அறிமுகம்…!ரூ.6 லட்சத்தில் இரண்டு அடுக்குமாடி வீடு கட்டலாம். ஏதோ ரியல் எ...
04/07/2013

ரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு…. ஐ.ஐ.டி., அறிமுகம்…!


ரூ.6 லட்சத்தில் இரண்டு அடுக்குமாடி வீடு கட்டலாம். ஏதோ ரியல் எஸ்டேட் விளம்பரம் என்று நினைக்க வேண்டாம். குறைந்த செலவில், நில நடுக்கத்தால் பாதிக்கப்படாத ஒரு பிளாட்டை புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கியிருக்கின்றனர், சென்னை ஐ.ஐ.டி., பொறியியல் துறையினர்.

அப்படி இந்த கட்டடத்தில் என்னதான் சிறப்பும் வித்தியாசமும் என்கிறீர்களா? இதன் மூலப் பொருட்கள் தான். முற்றிலும் வித்தியாசமான இதன் மூலப்பொருள் குறித்து பார்ப்போம்...

ஜிஎப்ஆர்ஜி என்றால் என்ன?

உரத் தொழிற்சாலைகளின் கழிவு பொருட்கள், கண்ணாடி இழைகள் மற்றும் ஜிப்சம் உப்பு ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையில் தயாரிக்கப்பட்ட (கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம்) ஜிஎப்ஆர்ஜி பலகைகள், இவற்றோடு குறைந்த அளவு சிமென்ட் மற்றும் மிகக் குறைந்த அளவு இரும்புக் கம்பிகள் இவற்றை வைத்து தான் ஐ.ஐ.டி., சிவில் இன்ஜினியரிங் துறையினர் இந்த மாதிரி வீட்டை அமைத்துள்ளனர்.

சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 1981 சதுர அடி அளவில் இரண்டு அடுக்குகள் கொண்ட இந்த மாதிரி வீட்டைக் கட்ட தேவைப்பட்ட கால அவகாசம் வெறும் ஒரு மாதம் தான். சொந்த வீடு என்பது கனவாகவே போய் விடுமா என்ற ஏக்கத்தில் இருக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு இந்த புதிய தொழில் நுட்பம் நிச்சயம் பயன்படும் என்கின்றனர் பொறியாளர்கள்.

பரீட்சார்த்த முறையில் ஐ.ஐ.டி வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மாதிரி வீட்டை, பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயர் சமீபத்தில் திறந்து வைத்தார்.

ஐ.ஐ.டி,யின் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தியின் வழிகாட்டுதலில் இத்திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவந்த சென்னை ஐ.ஐ.டி.,பேராசிரியர்கள் டாக்டர் தேவதாஸ் மேனன் மற்றும் டாக்டர் மெஹர் பிரசாத் ஆகியோரிடம் நேயர்கள் மற்றும் வாசகர்கள் சார்பில் நாம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

கேள்வி: சாதாரணமாக கட்டப்படும் வீடுகளை தவிர்த்து இந்த வீடுகளை கட்டுவதால் எவ்வளவு சேமிக்கலாம்?

பதில்: தற்போதைய சூழ்நிலையில் கட்டப்படும் வீடுகளின் செலவைக் காட்டிலும் இந்த ஜிப்சம் பலகை கொண்டு வீடுகட்டினால் 20 சதவீதம் வரை சேமிக்கலாம், தவிர இந்த மாதிரியான கட்டடங்களுக்கு பிளாஸ்டரிங் தேவைப்ப டுவதில்லை. குறைந்த நாட்களில் , குறைந்த அளவிலான பணியாளர்களைக் கொண்டு இந்தக் கட்டடங்களை கட்டிவிடலாம். 8 அடுக்கு மாடி கொண்ட குடியிருப்பை மரபு சார் கட்டடத்தைக் காட்டிலும் 50 சதவீதம் எடை குறைவானதாகவே அமைக்க முடியும். இதனால் அஸ்திவாரம் அமைப்பதற்கு ஆகும் செலவைக் குறைத்து அதிக அளவில் பணம் சேமிக்க இயலும்.

கேள்வி: கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம், இவை எங்கு கிடைக்கின்றன?

பதில்:இந்தியாவில் கேரள மாநில கொச்சியிலும், மும்பையிலும் கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகள் தயாரிக்கப்படுகின்றன. பொதுத்துறை உரத் தொழிற்சாலைகளான எஃப்.ஆர்.பி.எல்., கொச்சின், ஆர்.சி.எஃப்., மும்பை இவற்றை தயாரிக்கின்றன.

எதிர்காலத்தில், தனியார் தொழிற்சாலைகளும் கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகள் தயாரிப்பில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேனல்களின் விலை ஒரு சுதுர மீட்டர் ரூ.750 முதல் ரூ.900 வரை விற்கப்படுகிறது.

ஜி.எஃப்.ஆர்.பி., (GFRG) கொண்டு கட்டப்படும் வீடுகள் நில நடுக்கத்தால் பாதிக்காத வகையிலும், பூமியின் ஈர்ப்பாற்றலை தாங்கும் வகையிலும் இருக்கும். ஜி.எப்.ஆர்.ஜி பலகைகள் 12 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம் 124 மிமீ கனம் கொண்டவையாக தயாரிக்கப்படுகின்றன.

கேள்வி: உலகில் ஐ.ஐ.டியில்தான் முதன் முறையாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதா?

பதில்: ஆஸ்திரேலியா, சீனா, ஓமன் போன்ற நாடுகளில், கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகளை பயன்படுத்தி நிறைய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

கேள்வி: 6 லட்சம் ரூபாய்க்கு பிளாட் கிடைக்கும் என்பது கவர்ச்சிகரமாக இருந்தாலும், இந்த கட்டடங்களின் ஸ்திரத்தன்மை எப்படி இருக்கும்

பதில்: இந்த வகை கட்டடங்களின் ஸ்திரத்தன்மை, மரபு சார் கட்டடங்களுக்கு நிகரானதாக இருக்கும். ஒப்பிட்டுப் பார்க்கும் போது பராமரிப்புச் செலவு கனிசமாக குறைவு.

சுற்றுச்சூழலுக்கு ஏற்றதான இவ்வகை கட்டடங்களை கட்ட மணல், சிமென்ட், தண்ணீர், இரும்பு எல்லாமே குறைவான அளவிலேயே தேவை. இவ்வகைக் கட்டடங்களின் கான்கிரீட் தட்பவெப்ப சூழலின் நேரடி தாக்குதலுக்கு ஆளாவதில்லை. இதனால் மரபுசார் கட்டடங்களைக் காட்டிலும், இவற்றின் ஸ்திரத்தன்மை பன்மடங்கு அதிகம்.

கேள்வி: ஜி.எஃப்.ஆர்.பி., (GFRG) பயன்படுத்தி சராசரியாக எத்தனை மாடிகள் எழுப்பலாம்?

பதில்: கட்டடம் அமைக்கப்படும் பகுதி, நிலநடுக்க அபாய வளைவில் (seismic zone) எந்த பட்டியலில் அமைந்திருக்கிறது என்பது முக்கியம். மிதமான நிலநடுக்கம் ஏற்படக் கூடிய ஜோன் 3 (moderate seismic risk) பகுதியில் 10 மாடிகள் கொண்ட அடுக்குமாடியை அமைக்கலாம். ஜி.எஃப்.ஆர்.பி., (GFRG) பேனல்களுடன் ஆர்.சி., ஷியர் வால்ஸ் (RC shear walls) எனும் மற்றுமொரு தொழில்நுட்பத்தை புகுத்தி 10க்கும் மேற்பட்ட மாடிகள் கொண்ட கட்டடத்தையும் எழுப்ப முடியும்.

கேள்வி: இதுபோன்ற வீடுகளை வீட்டுவசதி வாரியங்கள் கட்டுவதற்கு ஊக்குவிப்பீர்களா?

பதில்: குறைந்த செலவில் கட்டப்படும் இந்த மாதிரியான வீடுகளை அனைத்து மாநிலங்களிலும் உள்ள வீட்டுவசதி வாரியங்களும் பின்பற்ற உகந்தது. தொகுப்பு வீடுகள் கட்ட ஜி.எஃப்.ஆர்.பி., (GFRG) மிகவும் ஏற்புடையது. இருப்பினும் இவற்றை அமைப்பதில் தரம் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும்.

இதற்கான பிரத்யேக பணியாளர்களைக் கொண்டு நல்ல முறையில் திட்டத்தை செயல்படுத்துதல் அவசியம். எனவே வீட்டு வசதி வாரியங்கள் இவ்வகை வீடுகளை கட்டும் பட்சத்தில் கட்டுமானப் பணிகளை நல்ல பயற்சி பெற்ற நிறுவனங்களுக்கு வழங்க வேண்டியது அவசியம்.

மணல் திருட்டை தடுக்க வேண்டும், நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும் இப்படி பல கட்டாயத்தில் இருக்கும் தருணத்தில் குறைந்த அளவு சிமெண்ட், குறைந்த அளவு இரும்பு, குறைந்த அளவு தண்ணீர், மிகக் குறைவான அளவில் மணல் கொண்டு நீண்ட காலத்துக்கு நீடித்து உழைக்கும் கட்டடங்களை கட்ட முடிந்தால் அது நிச்சயம் வரப்பிரசாதமாகத்தான் அமையும்... பார்ப்போம்!

GR8 :)
30/06/2013

GR8 :)

ஒரு கனவு கண்டால்... அதை தினம் முயன்றால்... ஒரு நாளில் நிஜமாகும்'

நிரூபித்திருக்கிறார் மதுராந்தகி. 'மாநில குடிமைப் பணிகள்' என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்1 தேர்வில், மாநிலத்திலேயே முதலாவது இடத்தை பிடித்து சாதனை செய்திருக்கும் இவர், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னகாம்பட்டிபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

முதல் முயற்சியிலேயே, முதல் இடத்தை பிடித்து, கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) பணிக்கான அரசு ஆணையையும் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் இருந்தவரிடம் பேசியபோது... ''எங்க அப்பா சதாசிவம், கரூர், வணிகவரித்துறை, டெபுடி கமிஷனரா இருக்கார். அம்மா அம்சவள்ளி, தம்பி ஆதவன்னு சின்ன குடும்பம்.

'படிப்பால எதையும் சாதிக்க முடியும்’னு சின்ன வயசுல இருந்தே அப்பா சொல்லிட்டு இருப்பாரு. அந்த வார்த்தை என மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு. நல்லா படிச்சு அரசு பணிக்குப் போறதுதான் லட்சியம்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டே இருந்தேன்.

உடுமலைப்பேட்டையில பள்ளிப் படிப்பையும், கோயம்புத்தூர்ல காலேஜையும் முடிச்சேன். சாஃப்ட்வேர் இன்ஜினீயரிங் படிப்பை முடிச்சுட்டு, சென்னையில ஒரு கம்பெனியில கொஞ்ச நாள் வேலை பார்த்தேன். ஆனா, மனசு முழுக்க அரசுப் பணியில சேரணும்ங்கிற யோசனையிலேயே இருந்ததால, நான் பார்த்துகிட்டு இருந்த வேலையை உதறிட்டு, படிக்க வந்துட்டேன். டி.என்.பி.எஸ்.ஸி தேர்வுக்கு தயாராக ஆரம்பிச்சேன்'' என்ற மதுராந்தகி, அந்தத் தேர்வுக்கு தயாரான விதம் பற்றி அழகாகப் பேசினார்.

'பலர் எதைப் படிக்கிறது, எதை விடுறதுனு தெரியாம எல்லாத்தையும் படிப்பாங்க. நான், தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து படிச்சேன். அந்த வகையில எனக்கு ரொம்ப உதவியா இருந்தது 'மனிதநேய அறக்கட்டளை’தான். அவங்களோட ஆலோசனையும், வழிகாட்டுதலும்தான் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கு.

என்னை முழுமையா தயார்படுத்திகிட்டதும் நான் எழுதுன முதல் தேர்வுலயே முதல் இடம் கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுக்கு முன்ன மதிப்பெண் அடிப்படையிலதான் பதவிகளை ஒதுக்குவாங்க. ஆனா, முதல் முறையா கவுன்சலிங் நடத்தி, அவங்கவங்க விருப்பப்படி பதவிகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு கொடுத்தாங்க. நான், ஆர்.டி.ஓ. பதவியை தேர்ந்தெடுத்தேன்'' எனும் மதுராந்தகிக்கு அரசுப் பணி குறித்த ஆர்வமும், இலக்கும் நிறையவே இருக்கிறது.

'' நேரடியா மக்களிடம் பழக வாய்ப்பு கிடைக்கும், அவங்களோட பல பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ல முடியும்ங்கிற எண்ணத்துலதான் ஆர்.டி.ஓ பதவியை தேர்ந்தெடுத்தேன். மக்கள்கிட்ட வாங்குற மனுக்கள் மேல எவ்வளவு சீக்கிரம் நடவடிக்கை எடுக்க முடியுமோ எடுத்து, அவங்களுக்கு உதவி பண்ணணும்னு நினைச்சுகிட்டுஇருக்கேன்.

அரசாங்க அதிகாரிகள்னு சொன்னாலே மக்கள்கிட்ட மோசமான ஒரு பிம்பம்தான் படிஞ்சுருக்கு. அதை மாத்தி 'அரசு அதிகாரிகள் நல்லவங்க’னு மக்கள் வாயால சொல்ல வைக்கணும்ங்கிற ஆசை எனக்குள்ள இருந்துகிட்டே இருக்கு.

நல்ல அதிகாரி கிடைச்சா, தலையில தூக்கி வெச்சு கொண்டாட தயாரா இருக்காங்க மக்கள். அதனால இதை ஒரு வேலையா நினைக்காம, கடமையா செய்யப் போறேன்'' என்றவர்,

''தெளிவான லட்சியமும், முறையான திட்டங்களும், விடாமுயற்சியும் இருந்தா போதும்.. யாராலயும் இந்த இடத்துக்கு வரமுடியும்!'' நம்பிக்கை கொடுத்து முடித்தார் மதுராந்தகி!

- ஆர்.குமரேசன்

30/06/2013

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.

பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதற கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது!

முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது

நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.

நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…
உறவுகள் இதுதானென்று!

via தமிழ் வளர்ப்போம்

பழைய வாகனத்தை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...!நாம் ஒரு புது வாகனத்தை வாங்கும்போது எந்தப் பிரச்னைகளும் வராதபடி, பதிவுக...
28/06/2013

பழைய வாகனத்தை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...!

நாம் ஒரு புது வாகனத்தை வாங்கும்போது எந்தப் பிரச்னைகளும் வராதபடி, பதிவுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் டீலர் நமக்குக் கொடுத்து விடுகிறார். நாம் நேரடி உரிமையாளர் ஆகிவிடுகிறோம். ஆனால், பழைய வாகனத்தை வாங்கும் போது எப்படி உரிமையை மாற்றிக்கொள்வது? ஆர்.சி. புத்தகம் இல்லாமல் அதை வாங்கலாமா?

ஒரு வீட்டையோ, காலி மனையையோ விற்பவர் பத்திரப் பதிவு அலுவலகத்துக்குச் சென்று வாங்குபவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, விற்பனை செய்ததற்கான பத்திரத்தில் கையெழுத்துப் போடுவதுடன் அவரது வேலை முடிந்துவிடுகிறது. ஆனால், மோட்டார் வாகனச் சட்டப்படி தன் பெயரில் பதிவு செய்யப்பட்ட பழைய கார், பைக் மற்றும் இதர வாகனங்-களை விற்கும்போதும் வாங்கும்போதும் நாம் பதிவு அலுவலகத்துக்குச் செல்வதில்லை. அதே சமயம், அந்த விற்பனை பற்றி மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்கு தகவல் தர வேண்டியது இருவருடைய கடமை ஆகிறது.

ஒருவர் தனது காரை பதிவு செய்யப்பட்ட அதே மாநிலத்துக்குள் இருப்பவருக்கு விற்பனை செய்திருந்தால், 14 நாட்களுக்குள் விற்பனை செய்யப்பட்ட நபரின் பெயர் மற்றும் முழு விலாசத்தையும் படிவம் 29&ல் பூர்த்தி செய்து, மோட்டார் வாகனப் பதிவு அலுவலகங்களுக்கு அக்னாலெட்ஜ்மென்ட் அட்டையுடன் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். அதன் நகலை நம்மிடமிருந்து வாகனத்தை வாங்கியவருக்கும் அனுப்ப வேண்டும். இது விற்பனை செய்பவரின் கடமை.

ஒரு வேளை நாம் வெளி மாநிலத்தில் இருப்பவருக்கு வாகனத்தை விற்பனை செய்து இருந்தால், விற்பனை செய்த 45 நாட்களுக்குள் எந்தப் பதிவு அலுவலக எல்லைக்குள் வாகனத்தை வாங்கியவர் இருக்கிறாரோ, அந்த அலுவலகத்துக்கு நாம் தகவல் தரவேண்டும். அப்படி வெளி மாநிலத்தில் விற்பனை செய்யும்போது, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ‘தடை இல்லாச் சான்று’ (No objection Certificate) அல்லது தடையில்லா சான்றுக்கு மனு செய்து 30 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களை வைத்து அனுப்ப வேண்டும்.

வாகனத்தை வாங்கியவர், அவர் குடியிருக்கும் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில், எங்கு அந்த வாகனத்தைப் பயன்படுத்துகிறாரோ அந்த மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்தில் பதிவுப் புத்தகம், இன்ஷ¨ரன்ஸ் அதற்குரிய கட்டணம் ஆகியவற்றுடன் வெளி மாநிலமாக இருப்பின், தடையில்லா சான்று அல்லது அந்தச் சான்றுக்கு மனு செய்து 30 நாட்களுக்குள் கிடைக்க-வில்லை என்பதற்கான ஆதாரங்-களுடன் மனு செய்து, ஆர்.சி. புத்தகத்தை தங்கள் பெயருக்கு 30 நாட்களுக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இப்படி வாங்குபவரோ, விற்பவரோ தங்கள் கடமைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் செய்யாவிட்டால், மோட்டார் வாகனச் சட்டப்படி அபராதம் செலுத்தக் கடமைப்பட்டவராவர். வாகனத்தை வாங்கியவர் பெயர் மாற்றம் செய்யாமல், பழைய உரிமையாளரின் பெயரிலேயே வாகனத்தை ஓட்டி ஏதாவது விபத்து ஏற்பட்டால், அதற்கு இன்ஷ¨ரன்ஸ் இருந்தாலும் இழப்பீடு தொகை பெற முடியாது.

புதிய உரிமையாளரின் பெயர் ஆர்.சி.புத்தகத்தில் மாற்றப்பட்டதும் அதன் நகலை இன்ஷ¨ரன்ஸ் கம்பெனியில் கொடுத்து, ஏற்கெனவே பழைய உரிமையாளர் பெயரில் உள்ள இன்ஷ¨ரன்ஸ் பாலிசியையும் குறிப்பிட்ட கட்டணம் (டிரான்ஸ்ஃபர் பீஸ்) செலுத்தி அவர் பெயருக்கு மாற்றிவிட்டால் சட்டப்படி எந்தச் சிக்கலும் வராது! ஒருமுறை பதிவு செய்த வாகனத்தை மறுபதிவு செய்யமுடியுமா?

ஒருமுறை வாகனத்தைப் பதிவுசெய்துவிட்டால், மீண்டும் பதிவுசெய்து புதிய எண் பெற முடியாது. அந்த வாகனத்தின் பதிவுக் காலம் காலாவதியாகும்போது, அதைப் புதுப்பிக்க மட்டும்தான் முடியும். எத்தனை உரிமையாளர்கள் மாறினாலும் மறு பதிவு செய்ய முடியாது. அந்த வாகனம் முழுவதும் பயன்படுத்த முடியாத காலம் வரையிலும் அதற்கு ஒரே பதிவு எண்தான். உரிமையாளரின் பெயர், விலாசம் மாறலாம். இந்தியாவின் எந்த மாநிலத்துக்கு எந்த மூலைக்குச் சென்றாலும் நமக்கு அதே பதிவு எண்தான். ஆனால், நாம் ஒரு மாநிலத்தில் பதிவு செய்த வாகனத்தை வேறு மாநிலத்தில் 12 மாதங்கள் வரைதான் பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பழைய பதிவு எண்ணுடன் பயன்படுத்த முடியாது. அப்படிப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். நாம் சென்னையில் பதிவு செய்த வாகனத்தில் பெங்களூர் சென்று 12 மாதங்களுக்கு மேல் அங்கு பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்தும்போது கர்நாடகப் பதிவு " ரீ&ரெஜிஸ்ட்ரேஷன் " கட்டாயம் செய்ய வேண்டும்!

பதிவை மறுக்க முடியுமா?
ஒரு வாகனம் திருடப்பட்டது என்று சந்தேகிக்கக் காரணம் இருந்தாலும், வாகனம் சாலையில் ஓடும்போது இயந்திரக் கோளாறு காரணமாக பிறர் உயிருக்கு ஆபத்து விளைவிக்க வாய்ப்பு இருந்தாலும், மோட்டார் வாகனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வரைமுறைகளுக்குள் அந்த வாகனத்தின் தன்மை, அமைப்பு போன்றவை இல்லை என்றாலும், பதிவுக்கு வரும்போது தேவையான அனைத்து விவரங்களையும் மனுதாரர் தரவில்லை என்றாலும், தவறான தகவல்களை மனுதாரர் கொடுத்திருந்தாலும், வேறு மாநில வாகனம் என்றால் அதன் முந்தைய பதிவு எண் விவரங்கள், சான்றுகள் ஆகியவற்றை தரவில்லை என்றாலும் பதிவு செய்யும் அதிகாரி எழுத்துப்பூர்வமாக, உத்தரவில் காரணங்கள் குறிப்பிட்டு பதிவு செய்ய மறுக்கலாம். இதன் ஒரு நகலை மனுதாரருக்கு அளிக்க வேண்டும்!

வாகன உரிமையாளர் இறந்துவிட்டால்...
ஒரு வாகனத்தின் உரிமையாளர் இறந்துவிட்டால், அதனைப் பயன்படுத்தப்போகும் வாரிசுதாரர் சம்பந்தப்பட்ட மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்கு 30 நாட்களுக்குள் உரிமையாளர் இறந்துபோனது பற்றியும், அதை தான் பயன்படுத்தப் போவதையும் தகவல் கொடுத்துவிட்டு, இறந்து போனவரின் பெயரிலேயே மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து உபயோகப்படுத்தலாம். இந்தக் காலகட்டத்துக்குள் ஆர்.சி.புத்தகம், இன்ஷ¨ரன்ஸ், உரிமையாளரின் இறப்புச் சான்று மற்றும் அதற்குரிய கட்டணம் செலுத்தி, படிவம் 31&ல் இறந்துபோனவரைப் பற்றிய முழு விவரங்களையும், தற்போது பயன்படுத்துபவர் பெயர், விலாசம், உறவுமுறை ஆகியவற்றையும் குறிப்பிட்டு, இறந்துபோனவரின் வாரிசுதாரர் என்பதற்கான சான்றுகளுடன் மனு செய்து, தங்கள் பெயருக்கு பதிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.

பட்டா, சிட்டா, அடங்கல்...etc என்றால் என்ன தெரியுமா?சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்...
28/06/2013

பட்டா, சிட்டா, அடங்கல்...etc என்றால் என்ன தெரியுமா?



சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.

கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில்

இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன.இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின்

விளக்கங்கள் விவரம்:

பட்டா:

ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.


சிட்டா:

குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.


அடங்கல்:

நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.


கிராம நத்தம்:

ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.


கிராம தானம்:

கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.


தேவதானம்:

கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.


இனாம்தார்:

பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.


விஸ்தீரணம்:

நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.
ஷரத்து: பிரிவு.

இலாகா: துறை.

கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண்: நில அளவை எண்.

இறங்குரிமை: வாரிசுரிமை.

தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.


ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.

அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.


சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.


ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.

நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

பதிவுதுறையின் http://www.tnreginet.net/ என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

FYI
20/06/2013

FYI

20/06/2013
05/06/2013

உண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும்! ! ! !

***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***

சென்னை தி.நகரில் உள்ள சரவணா மற்றும் ஜெயசந்திரன் குழுமங்களில் வெளியூர்களைச் சேர்ந்த பெண்கள் பெருமளவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இது போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மிக மோசமாகவும், கீழ்த்தரமாகவும் நடத்தபடுகின்றனர். பெரும்பாலான பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கபடுகின்றனர்...

இங்கே நடக்கும் பெரும் அநியாயங்களை ஊமை ஊடகங்கள் ஏனோ மறைத்து விடுகின்றன. கடந்த 29.5.13 புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு சரவணா செல்வரத்தினம் நிறுவனத்தில் பணிபுரியும் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்த, ரம்யா(20) என்ற இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தி தி.நகர் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அப்பெண்ணின் மரணத்திற்கான காரணத்தை மறைத்து விட்டு, அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளைஞரை அப்பெண் காதலித்ததாகவும் , அவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் தற்கொலை செய்து கொண்டதாகவும் கதை கட்டுகிறது சம்பந்தப்பட்ட நிர்வாகம். தற்கொலைக்குத் தூண்டியதாக பழி சுமத்தப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதைக்குள்ளாக்கப் பட்டு வரும், அப்பாவி இளைஞர் சுரேந்தர், நெல்லை மாவட்டம், கடையம் பகுதியைச் சேர்ந்தவராவார்.

இந்தச் சம்பவத்தை தற்கொலை என்று சொல்வது முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பானதாகும்.

சம்பந்தப்பட்ட இருவரும் வெவ்வேறு கிளை நிறுவனங்களில் பணிபுபுரிந்து வருபவர்கள். இந்நிறுவனத்தின் விதிமுறைகளின் படி, இவர்கள் இருவரும் சந்திக்கக்கூட முடியாது. இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள். அறிமுகமில்லாத இவர்கள் இருவரும் எப்படிக் காதலித்திருக்க முடியும்....?.. ?..?

இந்தப் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த இடம் எதுவென்று தெரியுமா.. இதே சரவணா செல்வரத்தினம் நிறுவனத்திற்கு சொந்தமான பெண்கள் தங்கும் விடுதியில் தான்...

சம்பவத்தன்று அந்தப் பெண் உடல் நிலை சரியில்லாததால், விடுமுறையில் இருந்துள்ளதாக அந்நிறுவனத்தின் குறிப்பேடுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் அப்பெண்ணுடன் பணிபுரியும் மற்றப் பெண்களிடம் விசாரிக்கையில், அந்தப் பெண் யாரையும் காதலிக்கவில்லையென்றும், சம்பவத்தன்று விடுப்பு எடுப்பதாகத் தெரிவிக்கவில்லையென்றும், அப்பெண்ணுக்கு உடல் நிலையில் எந்தப்பிரச்சனையும் இல்லையென்றும் தெரிவிக்கின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் அந்தப் பெண்ணைத்தவிர வேறு யாரும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியென்றால் விடுதியின், பெண் காப்பாளர், விடுதி காவலர், மற்றும் பணியாளர்கள் எங்கே போனார்கள்..??..?

மதியம் சரியாக 3.30 மணிக்கு அனைவரும் வேலை காரணமாக வெளியே சென்றிருப்பார்களோ..?

அப்படியென்றால் நடந்தது என்ன..?!

தற்கொலையா.? அல்லது பாலியல் வன்புணர்வினால் ஏற்பட்ட கொலையா..? இல்லையென்றால் அப்பெண்ணின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் சடலத்தை அப்பெண்ணின் குடும்பத்திடம் ஒப்படைத்தது ஏன்.?!

பழி சுமத்தப்பட்ட அந்த இளைஞரின் குடும்பத்தின் நிலை என்ன..?!

இந்நிறுவனத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது புதிதல்ல. அப்படியிருந்தும் இந்நிறுவனத்தின் மீது இது வரையில் ஒரு வழக்குக்கூட பதிவு செய்யப்படவில்லை என்பது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது .

VIP முகமூடி அணிந்துள்ள இம்மாதிரி சமூக விரோதிகளின் மீது அதிகார வர்க்கமும், காவல்துறையும் கனிவு காட்டுவது ஏனோ..?!

இந்நிகழ்வுகளுக்கு முடிவு தான் என்ன..?!

அந்நிறுவனத்தில் பணிபுரியும் மற்றப் பெண்களின் நிலையென்ன..?!

விடை தெரியாமல் தி.நகர் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்...!!!

நன்றி: விக்கிரவாண்டி-பக்கம்

30/05/2013

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது! ! ! !

( http://cmcell.tn.gov.in/register.php ) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ள து.

( http://cmcell.tn.gov.in/login.php )

தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....

Chief Minister's Special Cell , Secretariat, Chennai - 600 009.

Phone Number : 044 - 2567 1764 Fax Number : 044 - 2567 6929

Thanks: Arun

Address

Salem

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Central Law college posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share