02/12/2025
திருநெல்வேலி 9 TN SIG UNIT என்சிசி ஆபிசர் கமெண்டிங் லெப்டினான் கர்னல் பங்கஜ் நாராயணன் அவர்களின் ஆணைப்படி தேசிய மாசு கட்டுப்பாட்டு நாளினை முன்னிட்டு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் தாமிரபரணி நதி கரை பகுதியினை சுத்தம் செய்தனர்.நிகழ்ச்சியில் தமிழாசிரியர் மற்றும் தேசிய மாணவர் படை அலுவலருமான திரு. ராஜகுமார் அவர்கள் வரவேற்றார்.பொறுப்பு தலைமை ஆசிரியர் திரு சுரேஷ் காமராஜ் அவர்கள் கொடி அசைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.பள்ளிச் செயலாளர் திரு S. முருகன் அவர்கள் தலைமை வகித்தார் . செல்வ விநாயகர் கல்வி அபிவிருத்தி சங்க தலைவர் திரு T.R.ராஜசேகர் அவர்கள், பொருளாளர் திரு V மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 9 TN SIG UNIT JC0 சுபேதார் ஜெகத் சிங் மற்றும் THM சுந்தர் ஆகியோர் வழி நடத்தினர்.ஏரல் வியாபாரி சங்க செயலாளர் திரு விஜயராகவன் கலந்துகொண்டு மாணவர்களை பாராட்டினார்.ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவ மாணவியர் 85 பேர் கலந்துகொண்டு ஏரல் தாமிரபரணி ஆற்றின் உள்பகுதி மற்றும் வெளிப்புறங்களில் உள்ள கேரி பேக், உடைந்த பாட்டில்.பிளாஸ்டிக் பொருட்கள் காகித குப்பைகள் ஆகியவற்றை சேகரித்துபேரூராட்சி குப்பை தொட்டியில் சேர்த்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ கணேசர் பள்ளி தேசிய மாணவர் படை அலுவலகம் மற்றும் பள்ளி நிர்வாகம் இணைந்து செய்திருந்தது. ஆற்றுப் பகுதியில் உள்ள குப்பைகளைச் சுத்தம் செய்த தேசிய மாணவர் படை மாணவ மாணவியரை பொதுமக்கள் பாராட்டினார்