18/04/2015
எட்டு எட்டா எட்டு வைத்து எட்டு வருடங்களாகிறது கல்லெறிந்த பறவை கூட்டமாய் சிதறி சென்று
அன்று
பதினோரு ஆண்டுகளுக்கு முன்
புயலுக்கு முன் அமைதியை போல்
சுனாமிக்கு முன் நட்பு மலர்ந்தது
எப்படி பாத்தாலும் நகைச்சுவயாதான் இருந்தது
கல்லூரி வாழ்கை
இப்போ நினைத்தாலும் சிரிப்பு வருது
கூடவே கண்ணும் வியர்க்குது
கான்கிரீட் கலவை போல் கலந்துகிடந்தோம்
பிரேக்கர் போல் பிரிவு வந்து உடைத்து தள்ளியது
லே(ஏலு) ம் மக்காவும் இணைந்து லேமக்கா என்றழைத்த காலம்
இரண்டாம் ஆண்டு முதல்நாள் வகுப்பு சக்கரவர்த்தி தியட்டரிலும் நடந்ததும்
4 மீட்டரே உள்ள லெவலிங் ஸ்டாப்-இல் 6 மீட்டார் அளவு எழுதி பெருமையாக காட்டி பல்பு வாங்கியதும் மறக்க முடியாதது
மாணவர்களை விட அதிகமாக இருந்த ஈக்களின் டீ கடை
டப்பாக்களில் மிட்டாய்களை விட அதிகமாக சில்லறைகள் நிரம்பிய HOடீ கடை
அழியா சுவடுகள்
எந்த Labலேயும் எதுவும் செய்யாம இன்ஸ்ட்ருமெண்ட வச்சி விளையாடிட்டு ரிசல்ட்ட அடுத்தவன பாத்து எழுதியதும்
தியோடலைட் பெட்டில உக்கார்ரதுக்கு சண்டை இட்டதும்
அத பாத்த நம்ம ராஜு சார் கழுவி கழுவி ஊத்தியதும்
தப்பு கண்டுபிடிக்கமா இருக்க இன்ஸ்ட்ருமென்ட் உயரத்தை அதிகபடுத்தியதும் அதுக்காக திட்டு வாங்கியதும்
கண்ணிலே ரோலிங் செயர் போட்டு உக்கார்ந்திருக்குது
கல்லூரி பேருந்து நகரத்தை நோக்கி நகர யோசித்த போது
பின் சென்று முன் தள்ளி நகர்த்தியதும்
இருக்கை பற்றாக்குறையால் வகுப்பறை இருக்கையை
பேருந்தில் இருத்தி உள்ளூர் சுற்றுலா சென்றதும்
அங்கு இருக்கையின் கால்களை உடைத்து கூரையில் இருத்தி இறுதி ஊர்வலம் நடத்தியதும் உச்சகட்டம்
அகழ்வாராய்ச்சியில் கூட சிக்காத அரிய பொக்கிசமாய் HODயின் கையில் இருக்கும் நோட்ஸ்
தோசைக்கு சட்டினியே தோசை மாவுதான் என்ற போதும்
இட்டலிய சாம்பார்ல ஊறவைத்ததும்,
அழுக்கு துணிய அடுத்தவன் பக்கெட்டில் ஊறவைத்ததும்
ஆடை மாற்றியதும், உணவு பகிர்ந்ததும்,
அழியா நினைவுகள்
ஆமா.. ஆமா.. சொல்லி HODய கலாய்த்ததும்
அத பாத்து சில்வியாகான மேடம் பீரோ கதவில் மறைந்து சிரித்ததும் ரசிக்கத்தக்கது
சர்வே கேம்ப்-ல இன்ஸ்ட்ருமென்ட்-அ நடு ரோட்டுல போட்டுட்டு ஐஸ், ஸ்நாக்ஸ் சாப்பிட்டதும் கடுப்பேத்தியதும்
சிரிப்புதான் வருது
எழந்திரு, வெர்டிகல் , சிகப்பு மை, கலர் பேன்ட், தயிர் சாதம், சாம்பார் சாதம், கணினி அறை, உணவு அறை, கொல்லாமரம்(முந்தரி மரம்), விடுதி, சினிமா, சைக்கிள், நானி க்ரூப்ஸ், டிராயிங் ஹால், சிமெண்ட், ஜல்லி, செங்கல், லைப்ரரி கார்டு, புதைத்த எலி, தாத்த, நைனார் கிளாஸ், பஸ் ஸ்டாப், கோணம், புன்னை நகர், கோபால் ரூம், கேம்பஸ் க்ளீனிங், சமோசா, ஹைட்ராலிக்lab, ரேடியோ டவர், மீதி இருக்கிற 2யுநிட் எஸ்டிமேட், ப்ராஜெக்ட் அது ஒரு காமெடி ப்ராஜெக்ட், நாலு இட்டலிய பிச்சு போட்டு வந்திர்றது, தேர்டு பாட்ச் வொர்ஸ்த் பாட்ச், மினி டிரப்ட்டர், என்டரன்ஸ் இது போல் பல வார்த்தைகள்...
ஒவ்வொரு வார்த்தையும் பல நிகழ்வுகளை ஞாபகப்படுத்துகிறது
எதுவும் கற்க்காத போது
ஜாதி மதம் வயது ஊரு பார்க்காமல்
பழகி வந்தோம்
ஆனால் ஏனோ இன்று
அதோடு சேர்த்து
தகுதி ஆசை பணம் பதவி கௌரவம் பொறாமையும்
சிறிது கற்று கொண்டோம்
லாலே லா.. லல லா லா......... அஆஆஆஆ.......