Muthuvapa Hostel

Muthuvapa Hostel Muthuvapa Hostel page is realy to connect muthuvapa friends they are in number of destinations in th

06/12/2022
13/04/2013

மாவீரன் கர்கரேயைக் கொன்றது யார்?
மறைக்கப்பட்ட உண்மை?

மறைக்கப்பட்ட உண்மை என்றாவது ஒருநாள் வெளிவந்தே தீரும். அன்றைய நாள் உண்மையான பயங்கரவாதிகளும், பயங்கரவாதமும் இணைத்து நசுக்கப்படும். உண்மை நீண்ட நாள் உறங்காது; இறுதியில் சத்தியமே வெல்லும்; நீதி நிலைபெறும்!

இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே காவி பயங்கரவாதம் குறித்து பேசியதும், அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் அவசர அவசரமாக தூக்கிலிடப்பட்டதும், நாட்டை நையப் புடைத்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளை விட்டு விட்டு பாஜகவினர் சுஷில் குமார் ஷிண்டே காவி பயங்கரவாதம் குறித்த தனது கருத்துக்கு மன்னிப்புக் கேட்டால் தான் நாடாளுமன்றத்தை இயங்க விடுவோம் என்று பாஜகவினர் நாடாளுமன்றத்தை நிறுத்தியதும், அதற்கு வேறு வழியில்லாமல் ஆதாரத்தோடு வைத்த குற்றச்சாற்று என்ற இறுமாப்பு கூட இல்லாமல் ஷிண்டே நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்ததும், சமீபத்தில் அலகாபாத் கும்பமேளா மாநாட்டுக்குப் பிறகு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்ற அறைகூவலும், அதே கும்பமேளாவில் சாதுக்கள் மாநாட்டில் விஷ்வ ஹிந்து பரிஷத் மீண்டும் அயோத்தி ராமர் கோவில் பிரச்சனைக்காக யாத்திரை நடத்துவோம் என்று அறிவித்ததும், அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள நேரத்தில் பாஜக மட்டும் ஊழல் பிரச்சனை, எல்லை பிரச்சனை, கூட்டணியைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் தனது ராமர் கோவில் லாபி, காவி பயங்கரவாதம் என்பதற்கான எதிர்ப்பு ஆகியவற்றின் மேல் கவனம் செலுத்தும் நேரத்தில் ஹைதராபாத்தில் திடீரென தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. குண்டுவெடிப்புக்கு 2 நாள் முன்பு உளவுத்துறைக்கு வந்த ரகசியத் தகவலின் மூலம் எதுவும் செய்ய முடியாத மத்திய மாநில அரசுகள், குண்டுவெடிப்பு முடிந்து 24 மணிநேரத்தில் யார் என்று கண்டுபிடித்து விட்டோம் என்று சொல்வது நமக்கு கட்டாயம் ஒரு பெரிய நெருடலை ஏற்படுத்துகின்றது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சில மறைக்கப்பட்ட அல்லது நாம் மறந்து விட்ட உண்மைகளை இந்த நேரத்தில் நினைவூட்ட வேண்டியது நமது கடமையாகக் கருதுகிறோம்.

26/11 மும்பையில் அப்பாவிகளை கொன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை காக்கும் காவல் பணியில் ஈடுப்படும் போது தன் உயிரை இந்தியாவிற்காக தந்த மராத்திய மாவீரன் ஹேமந்த் கார்கரே.

மாலேகான் குண்டுவெடிப்பில் இந்த தேசத்தின் மிகப்பழமையான ஒரு பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக அம்பலப்படுத்திய மராட்டிய மாநில தீவிரவாத தடுப்புப்படையின் தலைவர் மாவீரன் ஹேமந்த் கர்கரே, காமா மருத்துவமனைக்கு வேண்டுமென்றே வரவழைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்படுகிறார். அவரைப்போன்று இரண்டு துணிச்சலான காவல்துறை உயர் அதிகாரிகளும் இதே நாளில் வேறு வேறு இடங்களில் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்

ஹேமந்த் கர்கரே அணிந்து இருந்த குண்டு துளைக்காத சட்டையை சம்பவம் நிகழும் போது அவர் அணிந்துதான் இருந்தார். இருப்பினும் அவர் மார்பில் குண்டு பாய்ந்து அவர் உயிர் போனது எப்படி? அந்த குண்டு துளைக்காத சட்டை எங்கே? தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி இந்த வினாவினை எழுப்பிய போது கிடைத்த பதில் என்ன? இது போன்ற ஏராளமான விடை தெரியாத கேள்விகளுக்கு தீர்வு எப்போது? அவை வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டதன் பின்னணியில் ஓர் அப்பட்டமான அரசியல் சதி காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் கலந்த கவலை இந்திய மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் எழுந்தது.

குறிப்பாக மும்பை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவர் மாவீரன் ஹேமந்த் கர்கரே, அசோக் காம்தே, விஜய் சாலஸ்கர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள்.

மாவீரன் கர்கரேயின் மரணம் குறித்து இந்தியாவே அதிர்ச்சியில் ஆழ்ந்த போது சில சக்திகள் மட்டும் குதூகலத்துடன் கும்மாளமிட்டன. மாலேகான் குண்டுவெடிப்பு சதி குறித்த உண்மைகள் இனி வெளிவருமா? குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? என்ற ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழத் தொடங்கியது.

இந்நிலையில் கர்கரேயை படுகொலை செய்தது யார்? என்பது குறித்த மர்மங்கள் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் சுதந்திர உணர்வுள்ள புலனாய்வு நிபுணர்கள் மத்தியிலும் எழத் தொடங்கியது.

கர்கரேயின் மரணம் குறித்த மர்மம் நீடிக்கும் நிலையில், மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சரும், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல் அமைச்சருமான அப்துல் ரஹ்மான் அந்துலே நாடு தழுவிய நியாயமான சந்தேகத்தை சதிகாரர்கள் உள்ளம் அதிர உரத்து முழங்கினார்.

"கர்கரேயின் படுகொலையில் சந்தேகம் இருக்கிறது, கர்கரேயைக் கொன்றது யார்? ஹிந்துத்துவ தீவிரவாதத்தை நேர்மையுடன் வெளியுலகிற்கு அம்பலப்படுத்திய அந்த நேர்மையான அதிகாரியை காமா மருத்துவமனைக்கு செல்லுமாறு தவறாக வழிநடத்தியது யார்? பயங்கரவாதிகள் குண்டு மழை பொழிந்த தாஜ் ஹோட்டலுக்கோ, டிரைடன்ட் ஓபராய் ஹோட்டலுக்கோ, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கோ, நரிமன் இல்லத்திற்கோ செல்லவிடாமல் காமா மருத்துவமனைக்கு செல்வதற்கு அவரை தவறாக தகவல் கூறி வழிநடத்தியது யார்?" என்ற அதிரடி வினாக்களை வீசி நாடாளுமன்ற அவையினைத் திணறடித்தார்.

கர்கரே மிகச்சிறந்த நேர்மையான அதிகாரி. அவரது மரணத்தில் மர்மம் உள்ளது, கர்கரேயை படுகொலை செய்தது யார்? என்பது குறித்து தனியாக விசாரிக்க வேண்டும் என அந்துலே தெரிவித்த கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்துல் ரஹ்மான் அந்துலேயின் உரைக்கு கடும் இடையுறு விளைவித்தனர். இது அந்துலேயின் பாகிஸ்தானுக்கு சாதகமான வாதம் எனக்கூறும் அளவுக்கு தங்கள் நிலையை தாங்களே தாழ்த்திக் கொண்டனர்.

ஒரு நேர்மையான நெஞ்சுரம் மிக்க ஓர் அதிகாரியை இந்த தேசம் இழந்துவிட்டதே என்ற வேதனை கொஞ்சமும் இல்லாத பாஜகவினரின் வெற்றுக்கூச்சல் இந்திய மக்களின் மத்தியில் அவர்களுக்கு இழிவைத் தேடித்தந்தது.

மும்பை பயங்கரவாத தாக்குதல் சமயத்தில் படுகொலை செய்யப்பட்ட கர்கரேயின் விஷயத்தில் மகாராஷ்டிர அரசு எவ்வித ஆர்வமும் காட்டவில்லை எனத் தெரிகிறது. கர்கரே படுகொலை குறித்து தனியாக விசாரணை ஏதும் செய்யப்பட்ட மாட்டாது என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் வர்த்தக தலைநகரத்தில் ஏற்பட்ட தாக்குதல் குறித்த தகவல் தெரிந்த உடனேயே உயிரை துச்சமென நினைத்து சிங்கமென பாய்ந்து சென்ற ஒரு கடமை வீரன் குண்டு துளைக்காத சட்டை அணிந்தும் கூட மார்பில் சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். காமா மருத்துவமனைக்கு காரில் கடத்திச் செல்லப்பட்டு சிறிது நேரத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பரவலாக எழுகிறது.

கர்கரேயை படுகொலை செய்த பயங்கரவாதிகள் அம்பலப்படுத்தப்படுவது எப்போது என்பது தான் மக்கள் மனதில் உள்ள கேள்வி. ஒவ்வொரு பயங்கரவாத சம்பவங்கள் நடக்கும் போதும் இது குறித்து தனக்கு முன்பே தெரியும் என்றும் மோடி சொல்லி வருகிறார். ஆனால் இதுவரை மோடி மீது விசாரணைக் கணைகள் பாயாமல் இருப்பது ஏன்? மோடியை விசாரணைக்கு உட்படுத்துவதில் என்ன பிரச்சினை?

தீவிரவாத தடுப்பு படை தலைவர் ஹேமந்த் கர்கரே சங்பரிவார் அமைப்பினரால் தனக்கு மிரட்டல்கள் வந்ததையும், அவர்கள் தன்னை தவறாக சித்தரித்ததையும் குறித்து வேதனை தெரிவித்த கர்கரே, பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார். இதுகுறித்து தனக்கு வந்த கொலை மிரட்டல் குறித்து பிரதமரிடமோ, உள்துறையிடமோ கர்கரே கடிதம் மூலம் ஏதேனும் தெரிவித்திருக்கிறாரா என்பது தெரியவில்லை.

பயங்கரவாதிகள் போர்பந்தரில் இருந்து தான் வந்திருக்கிறார்கள் என்றால், இதற்கு குஜராத் அரசின் கையாலாகத்தனம் தான் முக்கியக் காரணமாக இருக்க முடியும். ஆனால் இது குறித்து மோடி அரசை விசாரிக்காமல் காலம் தாழ்த்துவது ஏன்? இது குறித்து யாரும் வாய் திறக்கவில்லையே ஏன்?

இவ்வளவு ஆயுதங்களுடன் சதிகாரர்கள் ஊடுருவ முடிந்தது என்றால் பாஜகவுக்கு நெருக்கடியான சூழ்நிலையில் குண்டுகள் வெடிக்கின்றன. இவ்வாறு கூறியவர் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக்விஜய்சிங். இது குறித்து எந்த புலனாய்வு அமைப்பும் ஊடகங்களும் வாய்திறக்கவில்லையே ஏன்?

தீவிரவாதிகள் பஞ்சாபி மொழி பேசியதாக முதலில் ஊடகங்கள் குறிப்பிட்டன. உருதுமொழி பேசியதாகக் கூட பல ஊடகங்கள் குறிப்பிட்டன. மராத்திய மொழியில் பேசியதாக மராட்டிய டைம்ஸ் குறிப்பிட்டது. அவ்வாறெனில், அவர்கள் யார்? என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

மோடி, ஓபராய் ஹோட்டலுக்குச் சென்று பார்வையிடுவது போல சென்றதை பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டை நடத்திய கமாண்டோ படையினர் கோபத்துடன் குறிப்பிட்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டிய லிஸ்ட்டில் உள்ள மோடி எந்த பயமும் இல்லாமல் நாடகமாடியது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.

ஹேமந்த் கர்கரே, சாலஸ்கர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றதோடு ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். வெறும் பத்து பேர் தான் இந்த பயங்கரவாதத்திற்கு காரணம் என்பதை நம்ப முடியவில்லை. பல்வேறு முரண்பாடான தகவல்கள் ஏற்கனவே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.

இதுவரை நடைபெற்று வந்த பயங்கரவாத நிகழ்வுகள் குறித்த வழக்குகளில் மர்மமான ஒரு போக்கை இதுவரை இந்நாடு பார்த்திருக்கிறது. சம்பந்தமே இல்லாமல் யாரையாவது கைது செய்வது பின்னர் அது குறித்த எந்த ஆதாரப்பூர்வ தகவல்களும் வெளிவராமல் மர்மத்தை பாதுகாத்துக் கொண்டே இருப்பது என்ற நிலை தான் இருக்கும். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் போக்கு அவ்வாறு இருக்கவில்லை. முறையாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டு பின்னர் அவை ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுக்களாக மாறிய பின்னரே மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டிருக்கிறது.

ராணுவத்தில் பணியாற்றிய கர்னல் புரோஹித்தை விசாரிக்கத் தொடங்கி பல வாரங்களாயின. ஆனால் அவர் வீட்டில் இதுவரை சோதனை போட தீவிரவாத தடுப்புப் படை செல்லவேயில்லை. வீட்டுக்கு செல்லாமலே தீவிரவாத தடுப்புப் படையினருக்கு தேவையான ஆதாரங்கள் கிடைத்துவிட்டன.

தெளிவாக சதிகாரர்களை அடையாளம் காட்டும் வழக்கிலேயே இவ்வளவு சுனக்கத்துடன் செயல்பட்ட போது, இதுவரை நிகழ்ந்த அசம்பாவிதங்களில் முதலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வீட்டைத்தான் முதலில் தட்டுவார்கள். அப்புறம் ஆளை தட்டுவார்கள். சரியான ஆளை தப்பிக்கவிட்டு தப்புத் தப்பாக எல்லாமே செய்வார்கள். தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் விதம் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவே இருக்கிறது. இந்நிலையில் உள்நாட்டு தீவிரவாதம் வெளிநாட்டு பயங்கரவாதம் என வகையாய் பிரச்சாரம் செய்வது மட்டும் போதாது. இந்திய மக்கள் அனைவரின் நம்பிக்கையைப் பெறும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் உறுதி காட்ட வேண்டும்.

நாட்டில் எத்தனையோ விசாரணைகள் குறித்து கவலைப்படாத பாஜக தலைவர் அத்வானி, பெண் சாமியார் கொடுமைப்படுத்தப்படுவதாகக் கூறி மிகப்பெரிய அழுகுணி ஆட்டமே ஆடினார். இதற்காக நாம் அத்வானியைக் குற்றம் சொல்லவில்லை. ஆனால் அதற்கு பணிந்து நடந்த மன்மோகன்சிங் மீது தான் நமது ஆதங்கம் அதிகரிக்கிறது.

அத்வானி போன்றவர்களின் அதீத ஆர்வம் மாலேகான் வழக்கின் கதி இனி என்ன ஆகும் என்ற கேள்வியையும், மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்த ஒரு மணி நேரத்திற்குள் தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவர் மாவீரன் ஹேமந்த் கர்கரே உள்ளிட்ட அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட பயங்கரமும் கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. இதுவும் நாட்டு மக்கள் ஏராளமானவர்களுக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் மும்பை, பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கிய அதிர்ச்சி செயல் நம் மனதை வெகுகாலம் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கக்கூடும். வெளிநாட்டு தீவிரவாதமோ, உள்நாட்டுத் தீவிரவாதமோ எதுவாக இருப்பினும் அதனை எதிர்கொள்ள வேண்டிய கடமை ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு. இந்நாட்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி வரை ராணுவத்திற்கென செலவழிக்கப்படுகிறது. காவல்துறைக்கும் கோடி கோடியாக கொட்டப்படுகிறது. ஆனால் பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடும் போது 10 மணி நேரம் கழித்தே நடவடிக்கையில் இறங்கும் அவல நிலையே நாம் காணும் காட்சியாக இருக்கிறது.

ராணுவத்திலாகட்டும், என்.எஸ்.ஜி. என்ற தேசிய கமாண்டோ படையிலும் மற்றும் பல பாதுகாப்பு படைகளிலும், ரா உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளிலும் அனைத்துத் தரப்பு மக்களை அதிக அளவு சேர்க்க வேண்டும். அரசுகள் பயங்கரவாதத்தை எதிர்கொண்ட விதம் பரிதாபத்தை வரவழைத்தது.

பயங்கரவாதம் குறித்து பயங்கரமாக கட்டுக்கதைகள் பரப்பும் சக்திகளையும், தாங்களே சதிகளை செய்து அப்பாவிகள் மீது பழிபோடும் பயங்கரவாத சதிக் கும்பலையும், வெளிநாட்டு சதி என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பவர்களையும் சாதாரண மக்கள் இனங்கண்டு அவர்களை சமூகத் தளத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும்.

மறைக்கப்பட்ட உண்மை என்றாவது ஒருநாள் வெளிவந்தே தீரும். அன்றைய நாள் உண்மயான பயங்கரவாதிகளும் பயங்கரவாதமும் இணைத்து நசுக்கப்படும். உண்மை நீண்ட நாள் உறங்காது; இறுதியில் சத்தியமே வெல்லும்; நீதி நிலைபெறும்!

Reference By : http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1302/23/1130223033_1.htm


நம்முடைய இஸ்லாமிய பிரசார குழுமத்தில் இணைத்துக்கொள்ள : http://www.facebook.com/groups/islamicdawah1/

நம்முடன் இணைத்துக்கொள்ள : http://www.facebook.com/CuddaloreMuslimFriend

நம்முடன் கை தொலைபேசி மூலமாக இணைத்துக்கொள்ள : http://m.facebook.com/a/profile.php?fan&id=330540656965013&gfid=AQBUn7a3fLJdzZtd

Verified:::

31/01/2013
கிறிஸ்மஸ் - மறைக்கப்பட்ட உண்மைகள்‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’– Christmas – என அழைக்கப்படும்‘இயேசு கிறிஸ்த்துவின்...
24/12/2012

கிறிஸ்மஸ் - மறைக்கப்பட்ட உண்மைகள்

‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’– Christmas – என அழைக்கப்படும்
‘இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாள் விழா’ ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25
அன்று பெரும்பாலான கிறிஸ்த்தவர்களால் கொண்டாடப்படுகின்றது. கிழக்கு
மரபுவழி திருச்சபையினர் என்கின்ற கிறிஸ்த்தவ பிரிவினரால் ஜனவரி 7ம் நாள்
கொண்டாடப்படுகின்றது.

பிறந்த நாள் கொண்டாட்டம் அறிவுபூர்வமானதா? கிறிஸ்த்தவ நம்பிக்கையின்படி
இறைமகனுக்கே(?) பிறந்தநாளா? என்கின்ற வாதப்பிரதிவாதங்களுக்குள் நுழையாமல் கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் 25ல் கொண்டாடப்படுவது சரிதானா? என்பதை வரலாற்று ரீதியாகவும், பைபிள் மற்றும் திருக்குர்ஆன் ஒளியிலும்
ஆய்வுக்குட்படுத்துவோம்.

வரலாற்று ஒளியில் கிறிஸ்மஸ்…

கிறிஸ்மஸின் தோற்றம்
ஆரம்ப கால கிறிஸ்த்தவ சமுதாயத்தில் கிறிஸ்மஸ் உள்ளிட்ட எந்தவொரு
பிறந்தநாள் கொண்டாட்டங்களும் கொண்டாடப்படவில்லை. கிறிஸ்மஸ் நாள் மரபுவழி வருவதேயன்றி இயேசுவின் உண்மையான பிறந்தநாள் அல்ல. மேலும், கிறிஸ்மஸ் மரம், கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் கேக் போன்ற அனுஸ்டானங்கள் புராதன பாபிலோனிலிய மக்களின் கலாசாரம் என என்சைக்ளோபீடியா -The world book Encyclopedia – The Encyclopedia of Religion and Ethics – the
Encyclopedia Americana – கூறுகின்றது.

விக்கிபீடியா தருகின்ற தகவலின் அடிப்படையில், இத்தாலி போன்ற நாடுகளில்
காணப்பட்ட ‘சட்டர்நாலியா’ (சடுர்நலியா பண்டிகை) – Saturnalia –மற்றும்
உரோமர்களால் டிசம்பர் 25ல் கொண்டாடப்பட்டு வந்த வெற்றி வீரன் சூரியன்
(Sol- Indicts) என்றழைக்கப்பட்ட சூரியக் கடவுளின் பிறந்தநாளான நட்டாலிஸ்
சோலிஸ் இன்விக்ட்டி- Natalis Solis Invicti – (சோல் இன்விக்டுஸ்)
என்கின்ற குளிர்கால பண்டிகைகளை தழுவியே கிறிஸ்மஸ் தோன்றியதாக
கூறுகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில்,கிறிஸ்த்தவ எழுத்தாளர்கள் இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள் உதயத்தோடு ஒப்பிட்டுள்ளதையும்,
இயேசு சோல்-இன் சூரியக்கடவுளாக சித்தரிக்கப்பட்டுள்ளதையும், சிப்ரியன் –
Cyprian- என்கின்ற கிறிஸ்த்தவ மதபோதகரின் “எவ்வளவு அதிசயச் செயல் சூரியன்
பிறந்த நாளில்…. கிறிஸ்த்துவும் பிறந்தது….” “ Oh ,how wonderfully acted
Providence that on that day on which that Sun was born . . . Christ
should beborn…” என்கின்ற வாக்குமூலத்தையும்,
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இதனை முழுக்க முழுக்க உறுதிப்படுத்துகின்ற
“சோல் இன்விக்டுஸ்- கிறிஸ்மஸின் தொடக்கத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு
செய்துள்ளது” என்கின்ற கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தின் வாக்குமூலம்
போன்ற சான்றுகளை கோடிட்டு காட்டுவதன் மூலம், சூரியக் கடவுளின் பிறந்தநாள்
உள்ளிட்ட குளிர்கால கொண்டாட்டங்களை அடிப்படையாக வைத்து மிகமிக பிற்பட்ட காலத்தில் தோன்றிய ஒரு பண்டிகையே கிறிஸ்மஸ் என்கின்ற கருத்தை உறுதி செய்கின்றது.

‘செக்டுஸ் ஜுலியஸ் அப்ரிகானுஸ்’ – Sextus Julius Africanus – என்கின்ற
மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்த்தவ எழுத்தாளரால் இயேசு கிறிஸ்து
டிசம்பர் 25ல் பிறந்தார் என்கின்ற கருத்து வரலாற்றில் முன்
வைக்கப்படுகின்றது. இதற்கு ‘ஒரிஜென்’- Origen – போன்ற ஆரம்பகால முக்கிய
கிறிஸ்த்தவ மதகுருக்களே மிககடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். கிறிஸ்த்தவ
இறையியல் அறிஞரான ஒரிஜென்,“பார்வோன்- pharaoh – அரசனைப் போன்று இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாளை கொண்டாடக்கூடாது என்றும், பாவிகளே அவ்வாறு செய்வதாகவும், புனிதர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்” என்றும் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டார்.

ரோமப் பேரரசன் ‘கான்ஸ்டான்டின்’ – Constantin – காலத்தில் இடம் பெற்ற
நைசியன் திருச்சபை பிரகடனத்தில் -Declaration of Nicean Council –
சூரியக்கடவுளின் பிறந்தநாள் -டிசம்பர் 25- இயேசுநாதரின் பிறந்தநாளாகவும்,
சூரியக் கடவுளின் பெயரால் உரோமர்கள் கொண்டாடிய கொண்டாட்டங்கள்-
கிறிஸ்த்துவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டது.
இக்கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ஒரேகடவுள் மூன்று நிலைகளில் உள்ளார்
என்கின்ற கொள்கையை அடிப்படையாக கொண்ட கிறிஸ்த்தவ பிரிவினரால் கி.பி.378ல் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. கி.பி. 379ல் கொன்ஸ்தாந்துநோபலில் –
Constantinople – அறிமுகப்படுத்தப்பட்ட கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பெரும்
சர்ச்சையை தோற்றுவித்ததாக எட்வர்ட் கிப்பன் – Edward Gibbon -என்கின்ற
ஆய்வாளர்குறிப்பிடுகிறர். வழக்கொழிந்து போன கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்
கொன்ஸ்தாந்துநோபலில் கி.பி. 400 காலப்பகுதியில் ‘யோன் கிறிசொஸ்டம்’ -John
Chrysostom- என்கின்ற கிறிஸ்த்தவ போதகரால் மீண்டும்
உயிர்ப்பிக்கப்படுகின்றது. மேலும், பேரரசன் சார்லிமெஜி -Charlemagie-
என்பவன் கி.பி 800ம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டிக்கொண்டதாலும்,
கி.பி. 1066 ல் முதலாவது வில்லியம் (இங்கிலாந்து)- William I of England–
மன்னன் கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டிக்கொண்டதாலும் கிறிஸ்மஸ்
கொண்டாட்டங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றது. மத்திய கால
கிறிஸ்த்தவ சீர்திருத்த திருச்சபைகள் “கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்-
பாப்பரசின் ஆடம்பரம்” என்று விமர்சித்தனர். தூய்மைவாதிகள் -Puritans-
எனும் கிறிஸ்த்தவ பிரிவினர் “கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை விலங்கின்
(சாத்தானின்) கந்தல் துணி” என்று மிகக் கடுமையாக விமர்சித்தனர். மேலும்
கி.பி. 1647ல் தூய்மைவாத கிறிஸ்த்தவ மறுசீரமைப்பினர் எனும் கிறிஸ்த்தவ
பிரிவினர் முதலாம் சார்ல்ஸ் மன்னனின் உதவியோடு இங்கிலாந்தில் கிறிஸ்த்தவ
கொண்டாட்டங்களை தடைசெய்தனர். இன்றும் கூட சில அங்கிலிக்கன் திருச்சபை
கிறிஸ்த்தவ போதகர்களும், ஆர்மினியர்களும், செர்பியர்களும் கிறிஸ்மஸ்
கொண்டாட்டங்களை அங்கீகரிப்பதில்லை..
இன்ஷாஅல்லாஹ் தொடரும். . .

உயிர்த்தெழுந்த பிறகு  தரிசனத்தடுமாற்றம்இயேசு சிலுவையில் அறையப்பட்டுமரணமடைந்தார்; மூன்றாம் நாள்மறுபடியும் உயிர்பெற்றெழுந்...
24/12/2012

உயிர்த்தெழுந்த பிறகு தரிசனத்தடுமாற்றம்

இயேசு சிலுவையில் அறையப்பட்டுமரணமடைந்தார்; மூன்றாம் நாள்மறுபடியும் உயிர்பெற்றெழுந்தார்; சீடர்களுக்குக் காட்சிதந்தார் என்று மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்குசுவிசேஷக்காரர்களும் சுறுகின்றனர். இந்த விஷயத்தை விபரிக்கும் நான்குசுவிசேஷக்காரர்களும் முரண்பட்ட பல விஷயங்களைக் கூறுகின்றனர்.



மகதேலேனா மரியாளிடமும்மற்ற மரியாளிடமும் தேவ தூதன் காட்சி தந்து இயேசு உயிர்த்தெழுந்ததைக் கூறிசீஷருக்கு இதைக் கூறுமாறும் தெரிவிக்கிறார். அவ்விருவரும் சீஷர்களிடம்கூறுவதற்காகச் செல்லும் போது இயேசுவே அவர்களுக்குக் காட்சி தந்து,

' நீங்கள்போய் கலிலேயாவுக்குப் போகும்படி என் சகோதரருக்குச் சொல்லுங்கள்! அங்கேஎன்னைக் காண்பார்கள் என்றார்.

(மத்தேயு 28:10)



பதினொரு சீஷருமோ இயேசுதங்களுக்குக் குறித்திருந்தபடி கலிலேயாவிலுள்ள மலைக்குப் போனார்கள். அங்கே அவர்கள் அவரைக்கண்டு பணிந்து கொண்டார்கள்.

(மத்தேயு 28:16)



இயேசுவின் கட்டளைப்படிபதினொரு சீஷரும் கலிலேயா எனுமிடம்சென்று இயேசுவைத் தரிசித்ததாக மத்தேயு இங்கே கூறுகிறார்.

ஆனால் மாற்கு,



அவர் உயிரோடுஇருக்கிறார் என்றும் அவள் அவரை கண்டாள் என்றும் அவர்கள் கேள்விப்பட்ட போது நம்பவில்லை.அதன் பின்பு அவர்களில் இரண்டு பேர்ஒரு கிராமத்துக்கு வழிநடந்து போகிற பொழுதுஅவர்களுக்கு வேறுரூபமாய்த் தரிசனமானார். அவர்களும் போய் மற்றவர்களுக்குஅறிவித்தார்கள். அவர்களையும் அவர்கள் நம்பவில்லை. பதினொருவரும் போஜன பந்தியில்இருக்கும் போது அவர்களுக்கு அவர்தரிசனமாகி உயிர்த்தெழுந்திருந்த தம்மைக்கண்டவர்களை அவர்கள் நம்பாமல் போனதினிமித்தம் அவர்கள் விசுவாச்ததைப்பற்றியும் இருதயக் கடினத்தைப் பற்றியும் அவர்களைக் கடிந்து கொண்டார்.

(மாற்கு 16:11-14)



பதினொரு சீடர்களும் இரண்டுமரியாள்களின் கூற்றை ஏற்று இயேசுவைத் தரிசிக்க கலிலேயா என்ற இடத்திற்குச் சென்றதாகமத்தேயு கூறுகிறார். ஒரு மரியாள் என்றும் அவளது கூற்றை சீடர்கள் நம்பவில்லைஎன்றும் மாற்குக் கூறுகிறார்.

வழியில் இரண்டு சீடர்களுக்குஇயேசு தரிசனமானதாக மாற்கு கூறுகிறார்.

மத்தேயு இது பற்றி எதையுமேகூறவில்லை.



கலிலேயா என்ற இடத்திற்குப்புறப்பட்டுச் சென்று அங்கே இயேசுவைத் தரிசனம் செய்ததாக மத்தேயுவும் இயேசுவைஅவர்கள் போஜனம் பண்ணும் இடத்துக்கு வலிய வந்து காட்சி தந்ததாக மாற்கும் கூறுகிறார்கள்.



கிறித்தவத்தின் முக்கியமானகோட்பாட்டை விளக்கும் விஷயத்தில்கூட இவ்வளவு முரண்படுவானேன்? இரண்டுமேகர்த்தரின் தூண்டுதலால் எழுதப்பட்டிருந்தால்இத்தகைய முரண்பாடுகள் இருக்க முடியுமா? இதே விஷயத்தை லூக்கா கூறும் போது முரண்பட்ட இந்த இரண்டுக்கும் முரணாகக் கூறுகிறார்.



அந்நேரமே எழுந்திருந்துஎருசலேமுக்குத் திரும்பிப் போய் பதினொருவர்களும் அவர்களோடிருந்தவர்களும்கூடியிருந்த இடத்தில் அவர்களைக் கண்டார்கள். அவர்கள் இவைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அவர்தாமே அவர்கள் நடுவிலே வந்து நின்று அவர்களைப் பார்த்துஉங்களுக்குச் சமாதானம் என்றார்.

(லூக்கா 24:33,37)



கலிலேயாவிலும் இயேசுவைச்சந்திக்கவில்லை; அவர்கள் போஜனம் பண்ணும் போதும்சந்திக்கவில்லை. மாறாக அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் எருசலேமில் தரிசனம்தந்ததாக லூக்கா கூறுகிறார்.


மரணித்த பிறகு உயிர்த்தெழுதல் என்பது சாதாரணமான ஒன்றல்ல.அப்படி நடந்திருந்தால் அவ்விஷயத்தில் இவ்வளவுமுரண்பாடுகள் இருக்க வழியில்லை. உயிர்த்தெழுதல் என்பது பொய்யாக இருக்க வேண்டும் அல்லது இவ்வளவுமுரண்பாடுகள் உள்ள பைபிள் இறை வேதம் அன்று என்பதைக் கிறித்தவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.இந்த இரண்டில் ஒன்றைத் தவிர உங்களுக்குவேறு வழியிருக்கிறதா கிறிஸ்தவர்களே

இயேசு உயிர்த்தெழுதலில் குழப்பம் இயேசு அடக்கம்செய்யப்பட்ட பின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதே கிறித்தவத்தின்அடிப்...
24/12/2012

இயேசு உயிர்த்தெழுதலில் குழப்பம்



இயேசு அடக்கம்செய்யப்பட்ட பின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதே கிறித்தவத்தின்அடிப்படைக் கோட்பாடு. அவர் உயிர்த்தெழுந்த(?) நிகழ்ச்சியாவதுமுரண்பாடில்லாமல் பைபிளில் கூறப்பட்டிருக்கிறதா?அதிலுள்ள முரண்பாடுகள் தான் எத்தனையெத்தனை?



ஓய்வு நாள் முடிந்தது.வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில் மகதேலேனா மரியாளும் மற்ற மரியாளும்கல்லறையைப் பார்க்க வந்தார்கள். இதோ பெரிய பூமி அதிர்ச்சியுண்டாயிற்று!கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கி வந்து வாசலில் இருந்த கல்லை உருட்டித்தள்ளி அதன் மேல் உட்கார்ந்தான். அவன் ரூபம் மின்னல் போலவும் அவன் வஸ்திரம் குறைந்தமழை போல் வெண்மையாகவும் இருந்தது. (மத்தேயு 28:1-3)



ஓய்வு நாள் முடிந்தபின் மகதேலேனா மரியாளும் யாகோபின் தாயாகிய மரியாளும் சலாமே என்பவளும் அவருக்குப்பூச வேண்டும் என்று சுகந்த வர்க்கங்களை வாங்கினார்கள். வாரத்தின் முதல் நாள்அதிகாலையில் சூரியோதயத்திலேயே அவர்கள் கல்லறைக்கு வந்தார்கள். கல்லறையின் வாசலில்இருந்த கல்லை நமக்காக எவன் புரட்டித் தள்ளுவான் என்று ஒருவரோடு ஒருவர்சொல்லிக்கொண்டார்கள். அவர்கள் வந்து ஏறிட்டுப் பார்த்த போது அது தள்ளப்பட்டிருக்கக்கண்டார்கள். அந்தக் கல் மிகவும் பெரிது. அவர்கள் கல்லறைக்குச் சென்று வெள்ளையங்கிதரித்திருந்த ஒரு வாலிபன் வலது பக்கம் உட்கார்ந்திருந்ததைக் கண்டு திகைத்தார்கள். (மாற்கு 16:1-5)



வாரத்தின் முதலாம் நாள்அதிகாலையில் தாங்கள் ஆயத்தம் செய்த சுகந்த வர்க்கங்களை அவர்கள் எடுத்துக் கொண்டுகல்லறைக்கு வந்த போது கல்லறையிலிருந்து கல் புறப்பட்டிருப்பதைக் கண்டார்கள். உள்ளேசென்று போதோ ஆண்டவராகிய இயேசுவின் சரீரத்தைக் காணவில்லை. அதைப்பற்றி அவர்கள்கலங்கிக் கொண்டிருக்கையில் பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டு பேர்அவர்கள் அருகேவந்து நின்றார்கள். (லூக்கா24:15)



வாரத்தின் முதல் நாள்காலையில் இருட்டோடே மகதேலேனா மரியாள் கல்லறைக்கு வந்தாள். கல்லறையை அடைத்திருந்தகல் எடுக்கப்பட்டிருக்கக் கண்டு - (யோவான் 20:1)



இயேசுவின் கல்லறைக்கு ஒருமரியாள் மட்டும் வந்ததாக யோவான் கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

இரண்டு மரியாள்கள்வந்ததாக லூக்காவும் மத்தேயுவும் கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

இரண்டு மரியாள்களும்சலாமே என்பவளுமாக மூவர்வந்தார்கள் என்று மாற்கு கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

அவர்கள் வந்த போதுஅவர்கள் இரண்டு தேவ தூதர்களைச் சந்தித்ததாக லூக்கா கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

ஒரு தேவ தூதன் என்றுமத்தேயுவும் மாற்கும் கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

அந்தத் தேவ தூதனைகல்லறைக்குள் உட்கார்ந்திருக்கக் கண்டார்கள் என்று மாற்குக் கூறுவது கர்த்தரின்வார்த்தையா?

அல்லது வானத்திலிருந்துஅவன் இறங்கி வந்ததாக மத்தேயு கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

அல்லது இரண்டு பேர் அருகே வந்துநின்றார்கள் என்று லூக்கா கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

உயிர்த்தெழுதலைப் பற்றிபைபிள் கூறும் தகவலில் ஏன் இத்தனை குழப்பங்கள்? உயிர்த்தெழுதல்நடந்திருந்தால் அதில் இவ்வளவு குழப்பங்களுக்கும் இடமிருக்குமா? கிறித்தவநண்பர்களே நடுநிலையோடு சிந்திப்பீர்

Address

Militery Line Pallivasal, Near SP Office, Palayamkottai
Tirunelveli
627002

Telephone

0462-2572239

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muthuvapa Hostel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share