Government Arts College, Tiruvannamalai

Government Arts College, Tiruvannamalai திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியை சேர்ந்தோரும் அன்புகொண்டோரும். FB page of GAC Tiruvannamalai alumni (unofficial yet)

The colllege is affiliated to Thiruvalluvar University (earlier to the University of Madras), Co-education Institution. Courses available
UG & PG Level:
Arts (Tamil, English, History and Economics),
Commerce
Business administration (UG only)
and Science (Mathematics, Physics, Plant Biology & Plant Biotechnology, Chemistry and Computer Science)

Research level:
M.Phil
History (FT & PT), Commerce

(FT & PT), Economics (FT & PT), Mathematics (FT & PT), Physics (FT & PT), Botany (FT & PT)

Ph.D
Tamil (PT), Physics (PT), Physics (FT)
*FT-Full time, PT-Part time

*Currently the page is managed by alumini member, Soon it should be maintained by current students or official in GAC.

25/09/2020
09/05/2019
02/06/2017
12/01/2017

இந்தியா ; தமிழாக விவசாயி இங்க வறுமையில் இருக்கேம்.. நீ கென்யா விற்கு 683கோடி கடன் கொடுக்கிறன்.... சொல்றா .... வெக்கமா இல்லா மோடி அவர்களே... என்டா இப்படி...

தொடர்ந்து கற்றுகொள்வதே வேலைவாய்ப்புக்கு தேவையான அதிர்ஷ்டம்.
03/11/2015

தொடர்ந்து கற்றுகொள்வதே வேலைவாய்ப்புக்கு தேவையான அதிர்ஷ்டம்.

Eve Marder believes that many of the most important events in our lives, both personal and professional, depend to some degree on luck or chance.

அதிகாரிகளின் சீரிய திட்டத்தாலும், கிராம மக்களின் அயராத உழைப்பாலும்சத்தமின்றி ஒரு சாதனை
03/11/2015

அதிகாரிகளின் சீரிய திட்டத்தாலும்,
கிராம மக்களின் அயராத உழைப்பாலும்
சத்தமின்றி ஒரு சாதனை

நாங்களே எதிர்பார்க்காத மாதிரி, "ஊர் நன்மைக்காக ரெண்டு வருஷம்கூட வயித்தைக் காயப்போட நாங்க தயார்"னு சொன்னாங்க. எங்களுக்கு கண்ணீர் வந்துடுச்சி.

மேடைப்பேச்சு அனைவருக்கும் சாத்தியம்
03/11/2015

மேடைப்பேச்சு அனைவருக்கும் சாத்தியம்

Toastmasters says there are 5 common public speaking myths that keep people from becoming clear and confident speakers.

Great Inspiration
03/11/2015

Great Inspiration

In trying to find a cure for cancer, where better to look than the animals that experience very low rates of the disease, or don't get it at all? That's the thinking behind new research into elephants and naked mole rats, which scientists are...

03/11/2015
மிதக்கும் காற்றாலைகள்
02/11/2015

மிதக்கும் காற்றாலைகள்

If successful, this project could both drive down costs and increase the number of places where offshore wind is viable.

தங்கம், பிளாட்டினம், வைரம் ஆகியவற்றின் விலை அலுமினியம் போல் குறையுமா?
02/11/2015

தங்கம், பிளாட்டினம், வைரம் ஆகியவற்றின் விலை அலுமினியம் போல் குறையுமா?

அத்தியாயம் – 3
உலகின் விலை மதிப்பற்ற உலோகம்
இந்திய பெண்களையும் அவர்கள் தங்கத்தின் மீது கொண்ட மோகத்தையும் பிரித்து பார்ப்பது என்பது கடலில் கலந்த ஆற்றின் நீரை மீண்டும் ஆற்று நீராக மாற்றி பார்ப்பதற்கு சமம் என திருமணமான பெரும்பாலான ஆண்கள் அறிந்திருப்பர். இன்று அந்த மோகம் பிளாட்டினம் மற்றும் வைர நகைகளின் மீதும் வளர ஆரம்பித்திருப்பது மாத சம்பளம் வாங்கும் என்னை போன்ற பலரை கவலையுற வைத்திருக்கும் என்பதிலும் ஐயமில்லை. ஆனால் தங்கம் மீதான மோகம் பெண்களுக்கு மட்டுமானதன்று. பற்பல அரசுகளும் இந்த தங்கத்தின் மீதான மோகத்தில் ஆடாத ஆட்டம் ஆடியிருகின்றன அல்லது ஆட்டம் கண்டிருக்கின்றன. இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்து வென்ற முகமது கஜினி எதற்காக இங்கு வந்தார் என யாரும் சொல்லிதெரியவேண்டியதில்லை. இது இப்படியிருக்க, ஃபிரென்ச் மன்னர் மூன்றாம் நெப்போலியன் தனது சிறப்பு விருந்தினர்களுக்கு அலுமினிய பாத்திரங்களிலும் மற்ற சாதாரண விருந்தினர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பாத்திரங்களிலும் பரிமாறினாரென்றால் எங்கோ உதைக்கிறதல்லவா!
அலுமினியம் முதன்முதலாக 1825ல் டென்மார்க் விஞ்ஞானி ஹன்ஸ் கிறிஸ்டியனால் (Hans Christian) கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பளபளப்பு மற்றும் வலிமையை கண்டு, கண்டிப்பாக இது ஒரு அரிய விலைமதிப்பற்ற உலோகம் என தீர்மானித்தனர். புவியின் எடையில் 8% இருக்கும் இந்த உலோகம் அரியதாக கருதப்பட காரணம் இதை பிரித்தெடுப்பது அவ்வளவு சுலபமில்லை என்பதனால்தான். வெளிகூட்டில் 8 என்ற எலக்ட்ரான் எண்ணிக்கையை அடைய தனிமங்கள் படும்பாட்டை ஏற்கனவே பகுதி 1-ல் பார்த்தோம். அலுமினியத்திடம் இருப்பதோ 3 எலக்ட்ரான்கள். எனவே அது கனிமமாக பொதுவாக ஆக்ஸிஜனுடன் சேர்ந்தே காணப்படும். வெறும் அலுமினியம் மட்டுமாக பிரிப்பதென்பது 1800களில் மிகக்கடினம். சுத்த அலுமினியம் ஒரு அதிசயமாகவே கருதப்பட்டது. இதனால் இதன் விலை தங்கத்தையும்விட அதிகமாக இருந்தது. இதன் மெல்லிய எடை (இடை இல்லீங்க) மற்றும் வளைந்து கொடுக்கும் பண்பு எந்தவித உபகரணங்களும் ஆபர ணங்களும் செய்ய இதை ஏதுவான தனிமமாக்கியது. அறிவியல் கற்பனை கதைகள் எழுதும் எழுத்தாளர் ஜூல்ச் வெர்னே (Jules Verne) அலுமினிய விண்கலங்களை மூலமாக கொண்ட நிலவை நோக்கிய பயணம் (Journey to Moon) என்ற நாவலை 1865ல் எழுதினார். இதன் உயரும் மதிப்பினால், ஃப்ரான்ஸில் அரச நகைகளுடன் அலுமினிய கட்டிகளும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. மூன்றாம் நெப்போலியன் தனது சிறப்பு விருந்தினர்களுக்கு அலுமினிய பாத்திரங்களிலும் மற்ற சாதாரண விருந்தினர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பாத்திரங்களிலும் விருந்து பரிமாறினார். அமெரிக்க பொறியாளர்கள் தங்களது தொழில்வளர்ச்சியை பறைசாற்றும் விதமாக 1884ல் வாஷிங்டன் நினைவுகோபுரத்தின் உச்சியில் 2.8 கிலோ எடையுடைய அலுமினிய கூம்பினை நிறுவினர்.
கிட்டதட்ட 60 வருடங்கள் உலகின் விலைமதிப்பற்ற உலோகமாக இத்தனிமம் கோலோச்சியது. 1886ல் ஹால் (Hall) எனும் அமெரிக்க விஞ்ஞானியும் ஹெரௌல்ட் (Heroult) எனும் ஃபிரென்ச் விஞ்ஞானியும் தனிதனியே மின்பகுப்பு மூலமாக இதை சுலபமாக பிரித்தெடுக்கும் வழியை கண்டறிந்தனர். ஹால் சுதாரிப்பாக இதற்கான காப்புரிமத்தை பெற்றார். அமெரிக்காவின் அலுமினிய குழுமத்தை (aluminium company – Alcoa) 1888ல் நிறுவினார். முதல் வருடம் ஒரு நாளைக்கு ~23 கிலோகிராம் உற்பத்தி செய்தவர்கள் 20 வருடங்களில் ஒரு நாளுக்கு ~40000 கிலோகிராம் உற்பத்தி செய்யவேண்டியிருந்தது. கிலோவுக்கு 1100 டாலராக (70 ஆயிரம் ரூபாய்) இருந்த இதன் விலை 50 வருடங்களில் கிலோ 0.25 டாலராக (16 ரூபாய்) வீழ்ந்திருந்தது. ஹால் இறக்கும் போது இருந்த அவரது சொத்தின் இன்றைய மதிப்பி 42 ஆயிரம்கோடி! அவரை கோடீஸ்வரராக மாற்றினாலும் அலுமினியத்தை தங்கமாக நினைத்து முதலீடு செய்த பலரை பிச்சைகாரர்களாக ஹாலின் கண்டுபிடிப்பு மாற்றியிருக்கும் என்பதில் ஐயமேதும் இல்லை.
இங்கே அலுமினியத்தின் விலை வீழ்ச்சிக்கு காரணமென்ன என ஆராய்ந்தால் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கற்றுகொள்ளலாம். ஹாலின் கண்டுபிடிப்பினால் அலுமினியத்தின் குணாதிசயங்கள் ஒன்றும் மாறிவிடவில்லை. ஆனால் அது கிடைப்பது எளிதாகியது. புவியின் எடையில் 8% அலுமினியம் என்பதை நினைவில் கொள்க. ஆக சுலபமாக கிடைக்கும் எதற்கும் மதிப்பில்லை என்பது நிரூபனமாகியுள்ளது. மாறாக தங்கம் மற்றும் பிளாட்டினத்தில் அளவு 0.0000001% (1x10-7). எனவே அவை சுலபமாக கிடைக்கபோவதில்லை. ஆனால், வைரம் என நாம் கொண்டாடும் கார்பன் புவியில் அதிகமாக கிடைக்ககூடிய ஒரு தனிமம். மனித வாழ்க்கையின் மூலாதாரம். ஆக வைரத்தின் மூலப்பொருள் எளிதில் கிடைக்ககூடியது. அப்படியானால் ஏன் இதன் மதிப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில், கார்பன் வைரமாக அதிகம் கிடைப்பதில்லை. மாறாக, கார்பன் புவிக்கடியில் உயர்ந்த அழுத்தம் மற்றும் மிகஅதிக வெப்பத்தில் மட்குமே வைரமாக மாறுகிறது. புவியை தோண்டி இவ்வைரத்தை எடுப்பதில் உள்ள சிரமங்களும் ஆபரண தரத்துடன் கூடிய வைரம் கிடைப்பதில் இருக்கும் இம்சையும்தான் இதன் அதிகவிலைக்கு அடிப்படை. ஆனால் இன்று தரம் குறைந்த வைரகற்கள் செயற்கையாக ஆய்வகங்களில் வெற்றிகரமாக தயாரிக்கபடுகின்றன. ஆபரண தரம் கொண்ட வைரமும் செயற்கையாக தயாரிக்கபட்டுவிட்டது.
ஆனால் இன்னும் சுலபமான முறை கண்டுபிடிக்கபடவில்லை. நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதிய கண்டுபிடிப்புகள் வரும் இக்காலகட்டத்தில் தரமான விலைகுறைவான செயற்கை வைரம் வரும் நாள் அதிக தொலைவில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
வேதியியல் விரியும்...

வாஷிங்டன் நினைவுகோபுரத்தின் படம் கீழே இணைக்கபட்டுள்ளது

Address

Tindivanam-Krishnagiri Road
Tiruvannamalai
606603

Opening Hours

Monday 9:30am - 7:30pm
Tuesday 9:30am - 7:30pm
Wednesday 9:30am - 7:30pm
Thursday 9:30am - 7:30pm
Friday 9:30am - 7:30pm
Saturday 9:30am - 7:30pm
Sunday 9:30am - 7:30pm

Telephone

+91 4175 236 298

Alerts

Be the first to know and let us send you an email when Government Arts College, Tiruvannamalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share