Jamia Khairathul lslam Arabic College

Jamia Khairathul lslam Arabic College Go Ahead

07/05/2023
06/05/2023

يُرِيْدُوْنَ اَنْ يُّطْفِـــٴُـــوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَيَاْبَى اللّٰهُ اِلَّاۤ اَنْ يُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْـكٰفِرُوْنَ‏

இவர்கள் தங்கள் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வுடைய (மார்க்கமான இஸ்லாம் என்னும்) பிரகாசத்தை (ஊதி) அணைத்துவிட விரும்புகின்றனர்.
எனினும், இந்நிராகரிப்பவர்கள் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தனது பிரகாசத்தை முழுமைபடுத்தி வைக்காமல் இருக்கப்போவதில்லை.
(அல்குர்ஆன் : 9:32)

05/04/2023

#நெகிழும்___நோன்பு:

உண்ணுவது, பருகுவது, உடலுறவைத் தவிர்ப்பது தான் நோன்பு என்பதாக எண்ணிக்கொண்டிருக்கின்றோம்.

ஆனால் அது இறைக் காதலர்களின் சங்கமம் என்பதை நாம் புரிய வேண்டும்.

தன் காதலனாகிய அல்லாஹ்விடம் வந்த திடீர் அழைப்பு ஹள்ரத் மூஸா அலைஹி ஸலாம் அவர்களைக் கிரங்கச் செய்தது.

ஆசை தீர உரையாடி மகிழ்ந்தார்கள்.

உரையாடல் முடிந்ததும் அவர்களின் காதல் அதிகமாகி விட்டது.

எப்படியாவது தன் காதலனாகிய அல்லாஹ்வைப் பார்த்து விட வேண்டும் என்று துடித்தார்கள்.

அது நடைபெறாமல் போக போக அவர்களின் ஏக்கம் அதிகமாகிக்கொண்டே சென்றது.

ஒரு நாள் அவனிடம் நேரடியாகவே கேட்டு விட்டார்கள்.

(ரப்பி அரினி அன்ளுரு இலைக்!)

எனது இறைவா!

உன்னை என் கண்களுக்கு காட்டித்தா„ என்றார்கள்.

(லன் தரானி)

உன் கண்களால் என்னைக் காண இயலாது,,

என்று அல்லாஹ் பதிலளிதவதுப் பார்த்தான்.

ஆனால் ஹள்ரத் மூஸா அலைஹி ஸலாம் அவர்கள் அடம்பிடிக்க ஆரம்பித்தார்கள்.

"மூஸாவே! இதோ பார்! நான் சொன்னால் கேள்!

உன்கண்களுக்கு என்னை பார்க்கும் ஆற்றல் இல்லை.

இதோ பார்! இந்த மலையின் மீது என்னுடைய காட்சியை ஒளிக்கீற்றளவு காட்டுகிறேன்.

என்ன நடக்கிறது என்று பார்! என்று அல்லாஹ் கூறினான்.

அருட்பெருஞ் ஜோதியாக அல்லாஹ்வின் ஒளிக் கீற்று மலையில் பட்டதும். மலை சுக்கு நூறாக உடைந்து சிதறியது.

அந்த ஒளிக் கீற்றைப் பார்த்துக் கொண்டிருந்த ஹள்ரத் மூஸா அலைஹி ஸலாம் அவர்கள் மூர்ச்சையானார்கள்.

மூர்ச்சை தெளிந்து எழுந்த பின்னரும் ஹள்ரத் மூஸா அலைஹி ஸலாம் அவர்களுக்கு வேட்கை தீரவில்லை.

" சரி உன்னைப் பார்க்கத் தான் முடியாது என்று கூறிவிட்டாய்!

இன்னொரு முறை என்னிடம் பேசவாவது செய்யேன்! என்று வேண்டி நின்றார்கள்.

அதற்கு அல்லாஹ் என்ன மறு மொழி பகர்ந்தான் தெரியுமா?

முப்பது நாட்கள் நோன்பிருந்து வா! என்றான்.

ஆசையோடு முப்பது நாட்கள் நோன்பை நிறைவேற்றி முடித்த அவர்கள், மறு நாள் குளித்து, பல் துலக்கி, நறுமணம் பூசி,புத்தாடை அணிந்து குதூ குலத்தோடு.

தன் காதலனோடு உரையாட சென்றார்கள்.

நான் உன்னை நோன்பு வைத்த நிலையில் தானே என்னைச் சந்திக்க வரச் சொன்னேன்.

நீர் நோன்பை முடித்து விட்டு, நோன்பை முடித்து விட்டு , நோன்பு நோற்காத நிலையில் வந்திருக்கிறீரே!

சரி மீண்டும் சென்று இன்னும் பத்து நாள் நோன்பு நோற்று கடைசி நாள் நோன்பு நோற்ற நிலையிலேயே வாரும்.

உன்னிடம் உரையாடுகிறேன். என்று அல்லாஹ் கூறி இழுத்தடித்தான்.

உத்தரவுப் பிரகாரம் இன்னும் பத்து நாள் நோன்பு வைத்து, நோன்பிருந்த நிலையிலேயே தன் காதலனாகிய அல்லாஹ்விடம் ஹள்ரத் மூஸா அலைஹி ஸலாம் அவர்கள் உரையாடி இன்புற்றதாக.

திருக்குர்ஆன் (7:143) கூறுகிறது.

ஆம்...!

நோன்பு இறைக் காதலின் சக்கமம்தான்.

S. முஹம்மது சுலைமான் அலி.

கைரி......வாழூர்.

05/04/2023

பெருமானார் ﷺ அவர்கள் கூறினார்கள் :

நோன்பு ( பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்..

நூல் : புகாரி : 1904

25/10/2022

*வஃபாத் அறிவிப்பு*
*இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.....*
எனது சிறிய தந்தையும் தற்சமயம் ரஹ்மானிய்யா பள்ளிவாசல் சன்னதி தெருவில் வசித்து வருபவருமான *மர்ஹும் மியான் மைதீன் (லேகியம்) அவர்களின் மகன் தமீம் அன்சாரி என்பவர் சற்றுமுன் வஃபாத்தாகிவிட்டார்கள்.*
அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்

இன்ஷா அல்லாஹ் நாளை (1.4.2022) வெள்ளிக்கிழமை.
31/03/2022

இன்ஷா அல்லாஹ் நாளை (1.4.2022) வெள்ளிக்கிழமை.

கோவை கரும்புக்கடை ஜாமிஆ பத்ரியா மகளிர் அரபிக்கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நூர்ஷேட் மஹாலில் நடந்தது.இவ்விழா...
31/03/2022

கோவை கரும்புக்கடை ஜாமிஆ பத்ரியா மகளிர் அரபிக்கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நூர்ஷேட் மஹாலில் நடந்தது.

இவ்விழாவில் பி.எஸ்.ஆர். சைலானிக்கு சமூக சேவைக்கான விருதை.

எங்களது ஆசிரியத்தந்தையும், ஆன்மீகத் தந்தையுமான மெளலானா மெளலவி ஆஷிகுர் ரஸூல் O.M அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் கிப்லா அவர்கள் தங்களது பொற்கரத்தால் வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

 #நினைவேந்தல் கூட்டம் மற்றும் ஜியாரத்.அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹ்வின் அருளால் நேற்று  (15.3.2022) வீரசோழன் ஜாமிஆ கைராத்துல்...
16/03/2022

#நினைவேந்தல் கூட்டம் மற்றும் ஜியாரத்.

அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ்வின் அருளால் நேற்று (15.3.2022) வீரசோழன் ஜாமிஆ கைராத்துல் இஸ்லாம் அரபிக்கல்லூரியில்.

எங்களை விட்டு பிரிந்து சென்ற எங்களது ஆசிரியர் மர்ஹும் நஜ்முத்தீன் ஹழ்ரத் அவர்கள் மற்றும் மர்ஹும் ஷாஜஹான் ஹழ்ரத் அவர்களின் நினைவேந்தல் கூட்டம்.

எங்களது ஆசிரியத்தந்தையும், ஆன்மீக தந்தையுமானா மெளலானா மெளலவி ஆஷிகுர் ரஸூல் O.M அப்துல் காதர் பாகவி ஹழ்ரத் கிப்லா அவர்களின் தலைமையில் மிகசிறப்பாக நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

இக்கூட்டம் நிறைவடைந்த பின் எங்களது ஷைய்குல் ஜாமிஆ மெளலானா மெளலவி ஆஷிகுர் ரஸூல் O.M அப்துல் காதர் பாகவி ஹழ்ரத் கிப்லா அவர்களின் தலைமையில்

மர்ஹும் ஷாஜஹான் ஹழ்ரத் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட வீரசோழன் பக்கதில் உள்ள புதூருக்கு சென்று அவர்களின் மன்னறையில் யாஸீன் ஓதி துஆ செய்யப்பட்டது.

பின்பு மதுரை சக்கிமங்கலத்திற்கு சென்று அங்கே நல்லடக்கம் செய்யப்பட்ட மர்ஹும் நஜ்முத்தீன் ஹழ்ரத் அவர்களின் மன்னறையிலும் யாஸீன் ஓதி துஆ செய்யப்பட்டது.

அல்லாஹ்வின் அருளால் நூற்றுக்கும் மேற்பட்ட கைரிய்யீன்கள் கலந்து கொண்டார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களை விட்டு பிரிந்து சென்ற ஹழ்ரத்மார்களை பொருந்திக்கொள்வானாக...ஆமீன்.

S. முஹம்மது சுலைமான் அலி.

கைரி....வாழூர்

Address

Veeracholan
Virudunagar
626612

Alerts

Be the first to know and let us send you an email when Jamia Khairathul lslam Arabic College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share