Addalaichenai National College Of Education

Addalaichenai National College Of Education It is a pre-service Teacher Training Institute These colleges produce skillful, knowledgeable professional teachers for the government schools system annually.

National College of Education is a pioneering pre service Teacher Training Institute in Sri Lankan education system .There are Nineteen Colleges spread through out the country from North to South.

Admission Interviews Commence for 2023 and 2024 G.C.E. Advanced Level Qualified Applicants at Addalaichenai National Col...
24/04/2026

Admission Interviews Commence for 2023 and 2024 G.C.E. Advanced Level Qualified Applicants at Addalaichenai National College of Education

2026.04.24

The admission interviews for students who qualified at the G.C.E. Advanced Level Examinations in 2023 and 2024 for entry to Addalaichenai National College of Education commenced today, 21 April 2026.

This year, interviews are being conducted at the College for applicants in the disciplines of Mathematics, Islam (Sinhala Medium), Islam (Tamil Medium), Special Education, and Commerce. All relevant information regarding the interview process has already been communicated to the applicants.

Addalaichenai National College of Education currently offers pre-service teacher education programmes in Primary Education, Science, Mathematics, Special Education, Commerce, and Islam (Tamil Medium). Significantly, the Islam programme is being offered in the Sinhala medium for the first time this year.

Students selected through this interview process will undergo their residential training at Addalaichenai National College of Education and the adjoining Addalaichenai Teachers’ College.

It is also noteworthy that, for the first time, the National Diploma in Teaching programmes in Primary Education, English, Mathematics, and Science are being offered at Addalaichenai Teachers’ College.

M. C. Junaid
President
Addalaichenai National College of Education

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியின் பாடசாலையும் சமூகமும் செயற்திட்டம் -2025          கமு/ கமு/ அல் - மதினா  வித்த...
11/06/2025

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியின் பாடசாலையும் சமூகமும் செயற்திட்டம் -2025 கமு/ கமு/ அல் - மதினா வித்தியாலயத்தின் புகைப்படங்கள்

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியின் பாடசாலையும் சமூகமும் செயற்திட்டம் -2025         இறுதி நிகழ்வுகள்
07/06/2025

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியின் பாடசாலையும் சமூகமும் செயற்திட்டம் -2025 இறுதி நிகழ்வுகள்

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியின் பாடசாலையும் சமூகமும் செயற்திட்டம் -2025      போதை பொருட்களுக்கு எதிராக வீதி ந...
07/06/2025

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியின் பாடசாலையும் சமூகமும் செயற்திட்டம் -2025 போதை பொருட்களுக்கு எதிராக வீதி நாடகம்

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியின் பாடசாலையும் சமூகமும் செயற்திட்டம் -2025அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி...
07/06/2025

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியின் பாடசாலையும் சமூகமும் செயற்திட்டம் -2025

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் பயிற்சி பெற்றும் வரும் இரண்டாம் வருட (2022/2024) ஆசிரிய பயிலுனர்களின் பாடசாலையும் சமுகமும் செயற்றிட்டம் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எம் .சீ. ஜுனைட் அவர்களின் தலைமையில் நிதி மற்றும் நிருவாகத்திற்குப் பொறுப்பான உப பீடாதிபதி எம்.ஐ. ஜஃபர் அவன்களின் மேற்பார்வையிலும் நிதி மற்றும் நிருவாகத்திற்குப் பொறுப்பான இணைப்பாளர் ஏ.முஹம்மட் நியாஸ் அவர்களின் இணைப்பாக்கத்திலும் மருதமுனை கமு/அல் - மதீனா வித்தியாலயம் மற்றும் கமு/ஷம்ஸ் மத்திய கல்லூரியில் 2025.06.03 தொடக்கம் 2025.06.05 வரை மூன்று நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலைச் சுழலை கற்றல் கற்பித்தல் செயற்பாட்டிற்கு ஏற்ப அழகு படுத்தி சமூக ஒருமைப்பாட்டை உருவாக்கும் செயற்திட்டத்தின் கீழ் இவ்விரு பாடசாலைகளும் தெரிவு செய்யப்பட்டிருந்தது
அல் - மதீனா வித்தியாலயத்திற்கு பொறுப்பாக கல்லூரியின் கல்வி பிரிவுக்கான உப பீடாதிபதி ஏ.ஜீ. அஹமட் நளீர் அவர்களும், ஷம்ஸ் மத்திய கல்லூரிக்கு பொறுப்பாக தொடருறு கல்விப்பிரிவுக்கான உப பீடாதிபதி ஏ.எஸ்.எம். சதாத் அவர்களும் இணைந்து இரண்டு பாடசாலைகளிலும் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டிய சுமார் 15 க்கும் மேற்பட்ட வேலை திட்டங்கள் தொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்டு பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு பல்வேறு வேலை திட்டங்களும் முறையாக முன்னெடுக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் பாடசாலை சுற்றுப்புற சூழல் மற்றும் வகுப்பறைகள் அடங்கிய பாடசாலை வளாகத்தை துப்புரவு செய்தல், அவற்றை அழகுபடுத்துதல், மாணவர்களின் தளபாடங்களை திருத்துதல், சுவர் ஓவியம், வகுப்பறைகளை அழகுபடுத்துதல் மற்றும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு பொருத்தமான சூழல்களை உருவாக்குவது போன்ற பல்வேறு வேலை திட்டங்களையும் ஆசிரிய மாணவர்கள் குழுக்களாக இணைந்து செயல்படுத்தினர்.

தொடர்ந்து மூன்று தினங்களுக்கு பாடசாலையில் தங்கியிருந்து இந்த பாரிய வேலை திட்டத்தை முன்னெடுத்தனர். இதன் போது, போதை பொருட்களுக்கு எதிராக வீதி நாடகம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலை கலாசார நிகழ்வுகள் மற்றும் கல்வியற் கல்லூரியின் ஆசிரிய பயிலுனர்கள் மாணவர்களின் செயற்திட்டங்கள் பற்றிய பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடைபெற்றன.

இ்ந்நிகழ்வில் கல்வி பிரிவுக்கான இணைப்பாளர் எம்.டி. முஸம்மில், மதினா வித்தியாலயத்தின் அதிபர் என்.எம். முஹம்மட் முபீன், ஷம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.எம்.ஹிர்பகான், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விமான்கள் நலன்விரும்பிகள் பொதுமக்கள் ஆகியவர்களும் கலந்து செயற்திட்டம் வெற்றிபெற சிறப்பாகச் செயற்பட்டனர்.

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி கி . புண்ணியமூர்த்தி அவர்களினால் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ...
10/01/2025

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி கி . புண்ணியமூர்த்தி அவர்களினால் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எஸ்.எம்.சதாத் அவர்களுக்கு
தொடருறு கல்விப்பிரிவின் விரிவுரை இணைப்பாளருக்கான நியமனம் இன்றைய தினம் (10) கல்லூரியில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரியின் நிதி நிருவாகத்திற்கான உப பீடாதிபதி திரு. எம்.சீ. ஜூனையிட், தொடருறு கல்விக்கான உப பீடாதிபதி திரு. எம்.ஐ. ஜஃபர் மற்றும் நிதி நிருவாகத்திற்கான விரிவுரை இணைப்பாளர் திரு ஏ.ஏம். நியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கு பொறுப்பான பிரதம ஆணையாளர் குழு அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரிக்கு விஜயம்(எம்.ஜே.எ...
18/12/2024

கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கு பொறுப்பான பிரதம ஆணையாளர் குழு அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரிக்கு விஜயம்

(எம்.ஜே.எம்.சஜீத்)

கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கு பொறுப்பான பிரதம ஆணையாளர் திருமதி பீ.ஜீ.ஐ. களனி ஹேமாலி மற்றும் கல்விக்கல்லூரியின் பிரதி பணிப்பாளர் திருமதி. எம். சுமந்தகுமாரி ஆகிய குழுவினர் உத்தியோகபூர்வமான மேற்பார்வையின் பொருட்டு இன்றைய தினம் (18) அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரிக்கு விஜயம் செய்து பார்வையிட்டனர்.

இதன் போது ஆசிரியர் பயலுகனர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும், கல்வி சாரா உத்தியோகத்தர்களுக்கும் தேவையான ஆலோசனை வழங்கியதுடன் கல்விக் கல்லூரியின் எதிர்கால விருத்திக்காக தனது முழுமையான பங்களிப்பினையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்வின் கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி கே.புண்ணியமூர்த்தி உட்பட உப பீடாதிபதிகள், விரிவுரை இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆக்க திறன்களை விருத்தி செய்யும் வகையிலான கண்காட்சி நிகழ்வு (எம்.ஜே.எம். சஜீத்...
14/12/2024

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆக்க திறன்களை விருத்தி செய்யும் வகையிலான கண்காட்சி நிகழ்வு

(எம்.ஜே.எம். சஜீத்)

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆரம்பக் கல்வி நெறி ஆசிரியர் பயிலுனர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆக்க திறன்களை விருத்தி செய்யும் வகையிலான கண்காட்சி நிகழ்வு இன்றைய தினம் (13) கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி கே.புண்ணியமூர்த்தி தலைமையில் மன்றத்துக்கு பொறுப்பான விரிவுரையாளர்களின் ஆலோசனைக்கு அமைவாக கல்லூரி ஆராதணை மண்டபத்தில் நடைபெற்றது.

விரிவுரையாளர் Z.தஸ்லீன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடருறு கல்வி பிரிவுக்கு பொறுப்பான உப பீடாதிபதி எம்.ஐ.ஜஃபர், நிதி மற்றும் நிருவாகத்திற்கான உப பீடாதிபதி எம்.சீ.ஜூனைட், கல்வி மற்றும் தரமேம்பாட்டுக்கான உப பீடாதிபதி ஏ.ஜி. அஹமட் நழீர் மற்றும் விரிவுரை இணைப்பாளர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், கல்வியலாளர்கள் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

16/05/2024

ImportMirror - No 1 leading Tamil News website delivers Tamil News, Sri Lanka News, Latest Tamil News, Tamil News Paper Online,Tamil News.

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரிய பயிலுனர்கள் மற்றும் கல்வி, கல்விசாரா உத்தியோகத்தர்களினால் அக்கரைப்பற்று ஆத...
16/05/2024

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரிய பயிலுனர்கள் மற்றும் கல்வி, கல்விசாரா உத்தியோகத்தர்களினால் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இரத்தானம் வழங்கி வைப்பு

(எம்.ஜே.எம். சஜீத்)

“உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்”எனும் மகுட வாசகத்திற்கு அமைவாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் நோக்கில் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி 2022/2024 ஆம் பிரிவு ஆசிரிய பயிலுனர்களினாலும், கல்வி, கல்விசாரா உத்தியோகத்தர்களினாலும் இரத்தானம் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி கி.புண்ணியமூர்த்தி தலைமையில் இன்று (16) கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் நிதி மற்றும் நிருவாகத்திற்கு பொறுப்பான உப பீடாதிபதி எம்.சி. ஜூனையிட் , கல்வி, கல்வி சாரா உத்தியோகத்தர்கள், இரத்தவங்கிக்கு பொறுப்பான வைத்தியர் ஏ. எல். எம். றுஸ்தான், ஏ. ஏ.எப். மஸீறா மற்றும் தாதி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

32 nd Anniversary ANCoE
10/05/2024

32 nd Anniversary ANCoE

Address

Addalachenai
32350

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Friday 09:00 - 16:00

Telephone

+94672278882

Alerts

Be the first to know and let us send you an email when Addalaichenai National College Of Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Addalaichenai National College Of Education:

Share