29/05/2020
அஸ்ஸலாமு அலைக்கும்
*பாடசாலைச் சிறார்களின் பெற்றோர் கவனத்திற்கு,*
பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் தங்களது பிள்ளைகள் நாளை எப்படியான வாழ்க்கையை வாழ வேண்டும், நாம் பட்ட கஷ்டங்களை படவே கூடாது, அவர்களை சிறந்த முறையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெற்றோரினதும் எதிர்க்கால கனவாக அமைந்திருக்கிறது என்பது மிகையாகாது.
ஒரு பிள்ளை தாயுடைய வயிற்றில் இருப்பது தொடக்கம் ஆரம்பப் பள்ளி வயதை அடையும் வரை பெற்றோர்களும் அக்குழந்தையை சூழ உள்ளளவர்களுமே (புறக்காரணிகள் உள்ளடங்களாக) முதல் ஆசானாக அமைகின்றனர். எனவே, அக் காலகட்டத்தில் எழுத்து, சொற்கள், பேச்சுத்திறன் ஆகியவற்றோடு சேர்ந்து நுண்ணறிவு சார்ந்த விடயங்களும், திடமான மனம் சார்ந்த கதைகளும் குழந்தைகளோடு பரிமாறப்படல் வேண்டும். அச் சிறுவயதில் சென்றடையும் இவ்வாறான விடயங்களே பின்னர் அக்குழந்தையின் பாடசாலைக் காலங்களிலான கற்றல் விடயங்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் செயற்பாடாக அமையும்.
மேற்சொன்ன விடயங்கள் ஆரம்பகாலகட்டத்தில் தவறவிடப்படுமானால் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்போடு அக் குழந்தைகள் சில விடயங்களை கற்றுணர்கின்றனர். அதுவே காலப்போக்கில் முதலாம் தரம், இரண்டாம் தரம் என்று உயர்ந்துகொண்டு செல்லும்போது அக்குழந்தைகள் அவர்களது கல்வி நடவடிக்கைகளை சுவாரஸ்யமானதாக அமைத்துக்கொள்ள வேண்டும். கற்றலோடு சார்ந்த விளையாட்டுக்கள், உதாரணங்களோடு சார்ந்த கதைகள், எழுத்துக்களை கோவைப்படுத்தப் பழக்குதல், கதைகூறப் பழக்குதல், சிறிய சிறிய தலைப்புக்களில் பேசப்பழக்குதல் ஆகியவற்றோடு கற்பித்தலை மேற்கொள்ளும் போது பிள்ளைகளும் அவர்களது திறன்களை வளர்த்துக்கொள்ள முயற்சிப்பதோடு பாடசாலைக் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் பழகிவிடுவார்கள். தரம் 6, 7, 8யை அடையும் போது ஒவ்வொரு பிள்ளைகளினதும் தனித்திறன்களை வெளிக்கொண்டுவரும் அத்தனை செயற்பாடுகளோடும் சார்ந்த கல்வியை நாம் அவர்களுக்கு கற்றுக்கொள்ள உதவி செய்ய வேண்டும். வெறுமனே பாடசாலை நேரத்தில் படித்தோம், பெற்றோரின் வற்புறுத்தலால் மாலைநேர வகுப்புகளுக்குச் சென்றோம் என்றில்லாமல் பிள்ளைகள் அவர்களின் சுய விருப்பின் அடிப்படையில் படிக்கக்கூடிய ஆற்றலை அவர்க்குள் வளர்த்தெடுக்க நாம் ஊன்றுகோளாய் என்றுமே இருக்க வேண்டும்.
பாடசாலைக் கல்வியானது ஒவ்வொரு மாணவனும் அவனது வாழ்க்கையில் கட்டாயமாக கற்றறிந்துகொள்ள வேண்டிய அடிப்படைக் கல்வியாக இருக்கின்றது.
தனித்திறன் என்பது ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்து காணப்படும் or அவர்களது எதிர்க்காலத்தை நாம் கருத்திற்கொண்டு அவர்களுக்குள் தனித்திறன்களை வளர்த்துவிடுவதற்கான செயற்பாடுகளை விதைத்து எதிர்க்காலத்தில் அவர்கள் தனித்து செயற்படுவதற்கான ஆக்கபூர்வமான செயற்பாட்டுத் திறனேயாகும்.
ஆம், ஒவ்வொரு துறைக்கும் அடிப்படைக் கல்வியோடு சார்ந்த தனித்திறன் மாணவர்களுக்குள் அடையாளம் காணப்பட்டு அவர்களை சமுதாயத்திற்காக வளர்த்தெடுக்கும் செயற்பாட்டையே நாம் முன்னெடுக்க வேண்டும்.
ஆகவே, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சில வேளைத்திட்டங்களை நாம் முன்னெடுக்கவுள்ளோம். பிள்ளைகளுக்கான வினாப்பத்திரங்கள், சுய மதிப்பீட்டுப் பயிற்சிகள், கதைகூறல் பயிற்சி, கருத்தரங்குகள் போன்றவற்றை முடியுமான அளவு செயற்படுத்த இருப்பதால் எங்களோடு சேர்ந்து பயணிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்
தரம் 01 - 05 வரையான பிள்ளைகளுடைய பெற்றோர்கள் அவர்களது பிள்ளையின் பெயர், தந்தை or தாயின் பெயர், பிள்ளை கற்கும் வகுப்பு ஆகியவற்றை கீழ்கானும் வாட்ஸப் இலக்கத்திற்கு அனுப்பி எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்.
*Kids Modern Home* :- +94769841737
https://wa.me/94769841737
தரம் 06 - 08 வரையான பிள்ளைகளுடைய பெற்றோர்கள் பிள்ளையின் பெயர், தந்தை or தாயின் பெயர், பிள்ளை கற்கும் வகுப்பு மற்றும் இதுவரையில் பிள்ளைகளுடைய தனித்திறன் ஏதாவது நீங்கள் அடையாளம் கண்டு இருந்தால் அவற்றைக் குறிப்பிடவும் or அத்திறன்களை எங்கள் மூலம் அடையாளம்காண விரும்பினால் அதனையும் குறிப்பிட்டு வாட்ஸப் இலக்கத்திற்கு அனுப்பி இணைந்து கொள்ளுங்கள்.
*Kids Modern Home* :- +94769841737
https://wa.me/94769841737
*மேலதிக தகவல்கள் தேவைப்படின் 0769841737 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்ளவும்.*
Kids Modern Home, New Town, Nachchaduwa, Anuradhapura.