BT/Hindu College PPA

BT/Hindu College PPA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BT/Hindu College PPA, Station Road, Batticaloa.

Welcome to the Official page of the 𝗣𝗮𝘀𝘁 𝗣𝘂𝗽𝗶𝗹𝘀' 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗕𝗮𝘁𝘁𝗶𝗰𝗮𝗹𝗼𝗮 𝗛𝗶𝗻𝗱𝘂 𝗖𝗼𝗹𝗹𝗲𝗴𝗲

Former Government College, Batticaloa and Koddaimunai Maha Vidyalayam, Batticaloa.

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் முன்னாள் நடன ஆசிரியரும் இலங்கையின் புகழ்பெற்ற நாட்டிய ஆசிரியருமான பரதசூடாமணி சுபித்திரா...
19/07/2026

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் முன்னாள் நடன ஆசிரியரும் இலங்கையின் புகழ்பெற்ற நாட்டிய ஆசிரியருமான பரதசூடாமணி சுபித்திரா கிருபாகரன் ஆசிரியர் அவர்கள் இன்று காலமானார்.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பழைய மாணவர் சங்கம் சார்பாக இறைவனை பிரார்திக்கின்றோம்.

குரலும் பொருளும் ஒன்றாய் இணைந்து களம் காண ஆரம்பமாகிறது சாரங்கபாணி சொல்லாடல் களம் 2026 மட்டக்களப்பு இந்துக் கல்லூரி பழைய ...
11/07/2026

குரலும் பொருளும் ஒன்றாய் இணைந்து களம் காண ஆரம்பமாகிறது சாரங்கபாணி சொல்லாடல் களம் 2026

மட்டக்களப்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் நடாத்தும் கல்லூரியின் வரலாற்றில் நீண்ட காலம் அதிபராகக் கடமையாற்றிய (1979 - 1988) முன்னாள் அதிபர் பெருமதிப்பிற்குரிய அமரர் ஐ. சாரங்கபாணி ஐயா அவர்களின் ஞாபகார்த்தமாக தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் நடாத்தப்படும் "சாரங்கபாணி சொல்லாடல் களம்" விவாதப் போட்டி

சாரங்கபாணி சொல்லாடல் களம் 2026 - விவாதப் போட்டியில்,
🥇 முதலாம் இடத்தைப் பெறும் அணியினருக்கு ரூ 20000.00 பணத்தொகையும் சாரங்கபாணி சொல்லாடல் களம் ஞாபகார்த்த சவால் கிண்ணமும் முதலாம் இடத்திற்கான வெற்றிக் கிண்ணமும்

🥈 இரண்டாம் இடத்தினைப் பெறும் அணியினருக்கு ரூ 15000.00 பணத்தொகையும் இரண்டாம் இடத்திற்கான வெற்றிக் கிண்ணமும்

🥉 மூன்றாம் இடத்தினைப் பெறும் அணியினருக்கு ரூ10000.00 பணத்தொகையும் மூன்றாம் இடத்திற்கான வெற்றிக் கிண்ணமும்,

🌟 போட்டியில் சிறந்த விவாதியாகத் தெரிவு செய்யப்படும் மாணவருக்கு சிறந்த விவாதி 2026 விருதும்
வழங்கிக் கௌரவிக்கப்படுவர்.

போட்டி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு
https://www.facebook.com/ppa.bhc/

இந்துக் கல்லூரியின் 80 ஆவது நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட Vehicle Wash 2026 இனிதே நிறைவுற்றது.இதற்கு அனுசரணை வழங்கிய TVS...
28/06/2026

இந்துக் கல்லூரியின் 80 ஆவது நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட Vehicle Wash 2026 இனிதே நிறைவுற்றது.

இதற்கு அனுசரணை வழங்கிய TVS நிறுவனத்தினர், வேலையை திறம்பட செய்து தந்த Leno Tyre Works and Car Wash அவர்களுக்கும் மற்றும் சீட்டிலுப்பிற்கு அனுசரணை வழங்கிய பழைய மாணவர்களுக்கும் மற்றும் ஏனைய பழைய மாணவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மற்றும் நடைபெற்ற குலுக்கலில்,
3ஆம் பரிசினை மட்டக்களப்பை சேர்ந்த Loganathan அவர்களும்
2ஆம் பரிசினை திமிலைதீவினை சேர்ந்த Sriharan Arjun அவர்களும்
1ஆம் பரிசினை கல்லாறினை சேர்ந்த K.Breandra அவர்களும் பெற்றுள்ளார்கள்.

பழைய மாணவர் சங்கத்தினால் மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்கு 15 வயதிற்கு உட்பட்ட வீரர்களுக்கான கிரிக்கெட் சீருடை கையளிப்பு!...
11/06/2026

பழைய மாணவர் சங்கத்தினால் மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்கு 15 வயதிற்கு உட்பட்ட வீரர்களுக்கான கிரிக்கெட் சீருடை கையளிப்பு!

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் கிரிக்கட் அணியின் பயன்பாட்டிற்காக, கல்லூரி அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க வீரர்களுக்கான கிரிக்கெட் சீருடை பழைய மாணவர் சங்கத்தினால் இன்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது.

இதற்கு அனுசரணை வழங்கிய பழைய மாணவர் Ricko Rod Kelly அவர்களுக்கும், Mr. Willow Cricket Store, Malaysia க்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மட்டக்களப்பு இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் நடாத்தும் "சாரங்கபாணி சொல்லாடல் களம்🎙️"மட்டக்களப்பு இந்து ...
07/06/2026

மட்டக்களப்பு இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் நடாத்தும்

"சாரங்கபாணி சொல்லாடல் களம்🎙️"

மட்டக்களப்பு இந்து கல்லூரியின் வரலாற்றில் நீண்ட காலம் அதிபராக (1979 - 1988) இருந்தவரும் தனது பதவிக் காலத்தில் கல்லூரியின் நிர்வாகம், அபிவிருத்தியில் இன்றளவும் பெயர் சொல்லக்கூடிய காத்திரமான பல சேவைகளை செய்தவரும், மட்டக்களப்பின் தமிழ் ஆளுமையுமான பெருமதிப்பிற்குரிய அமரர் ஐ. சாரங்கபாணி அவர்களின் ஞாபகார்த்தமாக தொடர்ச்சியாக இரண்டாம் வருடமும் நடாத்தப்படும்
"சாரங்கபாணி சொல்லாடல் களம் 2026 🎙️" (விவாதப் போட்டி)

விரைவில்...

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாணவர் பழைய சங்கத்தின் ஏற்பாட்டில் Vehicle Wash – 2026 ...
31/05/2026

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாணவர் பழைய சங்கத்தின் ஏற்பாட்டில் Vehicle Wash – 2026

கீழே உள்ள கடைகளில் தேவையான டிக்கெட்களை பெற்றுக்கொள்ளலாம்.
1️⃣ Annam Fruit Shop, Koolavady
Annathasan : 0741309536

2️⃣ Amirtham Unavakam
Sinna Uppodai
Ruban : 0768090300

3️⃣ East Link APO
Thandavenveli (Near to New Empire Bakery)
Sivakumaran : 0771801400

29/05/2026

அத்தியாயம் இரண்டு
விரைவில்....
🤔

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாணவர் பழைய சங்கத்தின் ஏற்பாட்டில் Vehicle Wash – 2026 ...
28/05/2026

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாணவர் பழைய சங்கத்தின் ஏற்பாட்டில் Vehicle Wash – 2026

📅 28.06.2026 (ஞாயிற்றுக்கிழமை)
⏰ காலை 7:00 – மாலை 3:00
📍 Leno Tyre Works and Car Wash
(இந்துக் கல்லூரிக்கு முன்பாக)

அனுமதிக்கப்படும் வாகனங்கள்:
🛵 மோட்டார் சைக்கிள்
🚗 கார்
🛺 முச்சக்கர வண்டி
💰 ஒவ்வொரு வாகனத்திற்கும்: ரூ. 250.00 மாத்திரம்

🎁 அதனைத் தொடர்ந்து Lucky Drawவும் நடைபெறு‌ம். அதிர்ஷ்ட சீட்டுக் குலுக்கல் வெற்றி உங்களுக்கு காத்திருக்கிறது!
ஒவ்வொரு வாகனத்தையும் கழுவியதும் ஒரு அதிர்ஷ்ட சீட்டு!
உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சிக்கவும் – பரிசுகளை வெல்லுங்கள்!
🥇 1வது பரிசு ரூ. 10,000
🥈 2வது பரிசு ரூ. 7,500
🥉 3வது பரிசு ரூ. 5,000

மேலதிக விபரங்களுக்கு:
📞 +94771273471
பொதுச் செயலாளர்,
மாணவர் பழைய சங்கம்

⚠️ முக்கிய அறிவித்தல்!சீரற்ற காலநிலை காரணமாக பழைய மாணவர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட இருந்த 𝐅𝐎𝐎𝐃 𝐂𝐈𝐑𝐂𝐔𝐒 உணவுத் திருவிழா மற...
22/02/2026

⚠️ முக்கிய அறிவித்தல்!

சீரற்ற காலநிலை காரணமாக பழைய மாணவர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட இருந்த 𝐅𝐎𝐎𝐃 𝐂𝐈𝐑𝐂𝐔𝐒 உணவுத் திருவிழா மற்றும் காணிவேல் பிற்போடப்பட்டுள்ளது

மாற்றுத் திகதி வெகு விரைவில் அறிவிக்கப்படும்

பழைய மாணவர் சங்கம்,
மட்டக்களப்பு இந்துக் கல்லூரி.

Address

Station Road
Batticaloa
30000

Telephone

065-2222377

Website

Alerts

Be the first to know and let us send you an email when BT/Hindu College PPA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share