02/12/2025
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிவாரணப்பொருட்கள் சேகரித்தல்.
கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக,
அண்மையில் நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்த நிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமது கற்றல் உபகரணங்களை இழந்து கல்வியை பெற முடியாத நிர்கதியான நிலைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த இக்கட்டான நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக அவர்களுக்கு எம்மாலான உதவிகளை செய்ய வேண்டியது எமது கடமையாகும். எனவே பின்வரும் பொருட்களை சேகரித்து ஒப்படைக்குமாறு வேண்டி இருக்கிறார்கள்.
தேவையான பொருட்கள்:-
* கடந்த கால பாட குறிப்புகள், கடந்த கால வினா புத்தகங்கள்
* சீருடைகள் / பாவித்த நல்ல நிலையில் உள்ள சீருடைகள்
* அப்பியாச கொப்பிகள்
* பாடசாலை பைகள்
* தண்ணீர் போத்தல்கள்
* பாதணிகள்
* பேனைகள், பென்சில்கள்
* கலர் பெட்டிகள்
* மாணவிகளுக்கான நெப்கின்கள்
*அத்தோடு துணிகள் வழங்கப்படுமாக இருந்தால் அதனை இலவசமாகவும் அவசரமாகவும் தைத்து தர எமது பிரதேச tailors தயாராக இருக்கிறார்கள். முடியுமானவர்கள் வெள்ளைத் துணிகளையும் வழங்க முடியும்.
எனவே எமது பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இவ்விடயத்தை கவனத்தில் கொண்டு தங்களாலான பொருட்களை நாளை (03/12/2025) காலை 9 மணி முதல் பாடசாலையில் ஒப்படைக்க முடியும். ஆசிரியர்களும் கல்வி சாரா உத்யோகத்தர்களும் அவற்றை பொறுப்பேற்பார்கள்.
- நன்றி -