இந்து மன்றம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

  • Home
  • Sri Lanka
  • Colombo
  • இந்து மன்றம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

இந்து மன்றம் - கொழும்புப் பல்கலைக்கழகம் Official page of Hindu Society of University of Colombo.

இந்து மன்றம் - கொழும்புப் பல்கலைக்கழகம்

கொழும்புப்பல்கலைக்கழக இந்துமன்றத்தின் இப்பக்கத்தின் மூலம் நாம் சமூகத்தோடு நல்லுறவை பேண முற்படுவதோடு எமது பொதுநிகழ்வுகளில் சகல தரப்பினரையும் எதிர்காலத்தில் இணைத்துக்கொள்ளவும் எதிர்பார்க்கின்றோம்.

*கூற்றுவ நாயனார் குருபூஜை நாளில் சிவனடியாரின் திருவடிகளுக்கு நமஸ்காரம்.*ஈசன் பாதமே மகுடம். மண்ணாளும் கிரீடம் மறுக்கப்பட்...
09/08/2026

*கூற்றுவ நாயனார் குருபூஜை நாளில் சிவனடியாரின் திருவடிகளுக்கு நமஸ்காரம்.*

ஈசன் பாதமே மகுடம். மண்ணாளும் கிரீடம் மறுக்கப்பட்ட போதும்,
விண்ணாளும் ஈசனை மனதினில் நிறுத்தினாய்!
மகுடங்கள் பல வந்து மண் மூடிப்போகும்,ஈசன் திருவடி என்றும் உன் தலைமீது பிரகாசிக்கும்!
கூற்றுவ நாயனார் குருபூஜை போற்றி!🔱✨

The feet of the Lord alone are the true crown. Even when the earthly crown of kingship was denied to you, you enthroned the Lord of the heavens within your heart. Many crowns will one day be buried beneath the dust of the earth, but the sacred feet of Lord Shiva will forever shine upon your head.

Praise to Kutruva Nayanar on his Guru Puja day! 🔱✨

Post by : Shageenthan
Caption by : Thilakshana

/27

“காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்றுரை பெம்மானை மறந்தில்லை என்னும் முகமாய்பட்டினத்தார் குருபூசைத்தினமின்றை நினை...
29/07/2026

“காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்றுரை பெம்மானை மறந்தில்லை என்னும் முகமாய்
பட்டினத்தார் குருபூசைத்தினமின்றை நினைவேந்தி
அவர்தம் காட்டிய அறவழி வாழ்வை பின்தொடர்வோமாக ✨

As way of saying we won’t forget the late great sage pattinathar peruman who quoted the famous saying “ We won’t even take even needle without a pinhole “ we remember his guru pooja day and continue to cherish and live in the path he showed us ✨

Design by : Shageenthan
Post by : Kavuchikan


இறைவனை தேடவில்லைஇறைவனே தேடி வந்த பக்தன்பெருமானையே பித்தாஎன அழைத்து தோழமை உறவு கொண்டதம்பிரான்தோழன்சுந்தர மூர்த்தி நாயனார்...
22/07/2026

இறைவனை தேடவில்லை
இறைவனே தேடி வந்த பக்தன்
பெருமானையே பித்தா
என அழைத்து
தோழமை உறவு கொண்ட
தம்பிரான்தோழன்
சுந்தர மூர்த்தி நாயனார்.🙏🙏
இறைவன் மீது தூய்மையான
தோழமை கொண்டு
தோத்திரங்கள் பாடிய பெரும் பக்தர்
தன்னைப்போல் சிவனை நேசித்து தொண்டு
செய்த சிவனடியார்களுக்கு
திருத்தொண்டர்தொகையில் புகழாரம் சூட்டியவர்.✨
பக்தி, அன்பு, உரிமை ஆகியவற்றின் சங்கமத்தை
விளக்கிய சுந்தரரின்
குரு பூஜை தினத்தில்
அவரை வணங்கி
அவரின் அருளையும்
சிவனின் அருளையும் பெறுவோம்.✨🙏

He did not seek the Lord; the Lord Himself came in search of His devotee.
Calling Lord Shiva "Pitha" with love, Sundaramurthi Nayanar shared a unique bond of divine friendship.
He praised not only the Lord but also His devoted servants through the Tiruthondar Thogai.
A shining symbol of devotion, love, and unwavering faith, Sundarar continues to inspire generations.
On this sacred Guru Pooja Day, let us bow to him and seek the blessings of both Sundarar and Lord Shiva. 🙏✨

Design by : Jathusha
Caption by: Jathusha


பெருமிழலைக் குறும்ப நாயனார் குருபூசைத் தினம் பக்தியின் சிறப்பை நினைவுகூரும் நாள். ✨🙏“அடியார்க்கு அடியேன்” என்று பணிவுடன்...
21/07/2026

பெருமிழலைக் குறும்ப நாயனார் குருபூசைத் தினம் பக்தியின் சிறப்பை நினைவுகூரும் நாள். ✨🙏
“அடியார்க்கு அடியேன்” என்று பணிவுடன் வாழ்ந்தார்.
அடியார்சேவையில் ஆனந்தம் கண்ட பெரும் பக்தர்.
அவரின் பாதம் பின்பற்றி நாம் வாழ்வோம்.🕉️✨

Perumizhalai Kurumbar Nayanar Guru Pooja Day is a day to remember the greatness of devotion.✨🙏
He lived with the humility of being “a servant to the devotees.”
A great devotee who found joy in serving the followers of Lord Shiva.
Let us follow his path and live with devotion. 🕉️✨

Post by : Shageenthan
Caption by : Thiloja



🕊️🌕 இனிய பொசன் பௌர்ணமி தின நல்வாழ்த்துகள்!பொசன் நிலா பொழியும் தர்ம ஒளியில்,கருணை மலரட்டும் ஒவ்வோர் இதயத்திலும்.ஞானம் வழி...
29/06/2026

🕊️🌕 இனிய பொசன் பௌர்ணமி தின நல்வாழ்த்துகள்!

பொசன் நிலா பொழியும் தர்ம ஒளியில்,
கருணை மலரட்டும் ஒவ்வோர் இதயத்திலும்.
ஞானம் வழிகாட்ட, அமைதி நிலைத்திருக்க,
அன்பும் நல்லிணக்கமும் உலகெங்கும் பரவட்டும்.

🙏 அனைவருக்கும் அமைதியும் அருளும் நிறைந்த இனிய பொசன் பௌர்ணமி தின நல்வாழ்த்துகள்! ☸️

🕊️🌕 Happy Poson Poya Day!

In the gentle light of the Poson moon,
May compassion bloom in every heart.
May wisdom guide our path, and peace remain within,
As love and harmony spread across the world.

🙏 Wishing everyone a blessed and peaceful Poson Poya Day! ☸️

Post : Sadhya prashalini


"ஒவ்வொரு பெரிய வெற்றியும் கனவுகளைக் கொண்ட ஒரு குழுவின் ஒன்றிணைந்த முயற்சியிலிருந்தே தொடங்குகிறது." 26/27 காலப்பகுதியை நோ...
22/06/2026

"ஒவ்வொரு பெரிய வெற்றியும் கனவுகளைக் கொண்ட ஒரு குழுவின் ஒன்றிணைந்த முயற்சியிலிருந்தே தொடங்குகிறது."

26/27 காலப்பகுதியை நோக்கி நாம் புதிய பயணத்தைத் தொடங்கும் இவ்வேளையில், கொழும்பு பல்கலைக்கழக இந்து மன்றத்தின் புதிய குழு உறுப்பினர்களை பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்கிறோம்✨🕉️

இந்த புதிய பயணம் உங்களை சவால்களை எதிர்கொள்ளச் செய்து, ஊக்கமளித்து, சிறந்த தலைவர்களாக வளர்த்தெடுக்கட்டும். இன்று தொடங்கும் இந்த பயணத்திற்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்🔥

_"Coming together is a beginning; keeping together is progress; working together is success."_
— Henry Ford

"As we embark on the *26/27* term, we are delighted to welcome our new Committee members to the *Hindu Society of the University of Colombo*! ✨ 🕉️

Your unique talents, fresh perspectives, and energy are exactly what we need to carry our mission forward. 🌟
Best wishes to begin your journey and we are excited to have you on board! 🔥

Post by: S.Sivethan
Caption by: Keerththika (Tamil)
Shivani (English)

/27

"ஒரு அமைப்பின் வெற்றி அதன் இலக்குகளில் மட்டும் அல்ல; அதற்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் மனிதர்களின் முயற்சிகளிலும் உள்ளது...
22/06/2026

"ஒரு அமைப்பின் வெற்றி அதன் இலக்குகளில் மட்டும் அல்ல; அதற்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் மனிதர்களின் முயற்சிகளிலும் உள்ளது."

கொழும்பு பல்கலைக்கழக இந்து மன்றத்தின் 25/26 காலப்பகுதியில் குழு உறுப்பினர்களாகப் பணியாற்றிய அனைவருக்கும் எங்களின் இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் 🙏✨

_Appreciation is a wonderful thing. It makes what is excellent in others belong to us as well_- Voltaire

We would like to extend our heartfelt thanks to all the Committee members of the *Hindu Society of the University of Colombo*, for the term *25/26* for their incredible service. ✨


“தந்தை மகற்காற்று நன்றி அவையத்துமுந்தி இருப்பச் செயல்” — திருக்குறள் என் வாழ்வின் முதல் ஆசிரியராகஎன் கனவுகளின் காவலராக,எ...
21/06/2026

“தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்” — திருக்குறள்

என் வாழ்வின் முதல் ஆசிரியராக
என் கனவுகளின் காவலராக,
என் தோல்விகளில் தோளாக நின்றவர்,
என் வெற்றிகளில் அமைதியாக மகிழ்ந்தவர் — தந்தை ✨

அனைத்து தந்தையருக்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்! ❤️

“The greatest gift a father can give his son is to make him excel among the learned.” — Thirukkural

My first teacher,
The guardian of my dreams,
The one who stood by me in my failures,
And quietly rejoiced in my successes — my father ✨

Happy Father’s Day to all fathers! ❤️



சித்தராய் வாழ்ந்த நம் முன்னோர் தந்த கலை 🧘‍♂️மூச்சடக்கி முக்தி தேடும் தமிழரின் வித்தை! 🌾புற உலகை மறந்து, அக ஒளியை நோக்கிய...
21/06/2026

சித்தராய் வாழ்ந்த நம் முன்னோர் தந்த கலை 🧘‍♂️
மூச்சடக்கி முக்தி தேடும் தமிழரின் வித்தை! 🌾
புற உலகை மறந்து, அக ஒளியை நோக்கிய பயணம் ✨
இவ்வுலகிற்கு தமிழ் மண் தந்த மாபெரும் கொடை! 🌱
இனிய சர்வதேச யோகா தின நல்வாழ்த்துகள்! 🪷

Born from the wisdom of ancient Siddhas, 🧘‍♂️
A timeless Tamil art of mastering breath and soul. 🌾
Detaching from the world outside, awakening the light within. ✨
The ultimate gift of Tamil heritage to the universe! 🌱
Wishing you a blessed International Yoga Day! 🪷

Post by : Suganya
Caption by :Niruja



“அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கடியேன்”என்று சுந்தரர் போற்றிய திருத்தொண்டத் தொகையேன் அமர்நீதி நாயனார் அவர்களுடைய  கு...
20/06/2026

“அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கடியேன்”
என்று சுந்தரர் போற்றிய திருத்தொண்டத் தொகையேன் அமர்நீதி நாயனார் அவர்களுடைய குருபூசைத்தினத்தில் அவர் வழி நாமும் அறத்தை போற்றுவோம்🙏🕉️

On the Guru Pooja of Saint Amarneethi Nayanar, let us cherish and uphold the virtues of righteousness and selfless devotion🙏🕉️

Post by : Shageenthan
Caption by : Mohanapratha


of Colombo

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when இந்து மன்றம் - கொழும்புப் பல்கலைக்கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share