Al Minhaj National School

Al Minhaj National School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Minhaj National School, Hapugastalawa.

UTMOST FOR THE HIGHEST

VISION : COMPETENT CITIZEN WHO COPE WITH THE ERUDITE WORK

Description
IF YOU HAVE STUDIED OR STUDYING IN AL MINHAJ NATIONAL SCHOOL- HAPUGASTALAWA,PLEASE JOIN IN THIS PAGE AND INVITE YOUR CLASS FRIENDS. Province : Central
District : Nuwara Eliya
Educational Zone : Kotmale
Founder : Sham Moulana
School No : 25013
Census No : 05344
First Principal : E.S.Stenis Los - Jaffna
ca

tegory : National School
Started : 10.10.1925
Upgraded as Maha Vid : 13.04.1963
Upgrade as National school : 25.01.1999
Present Grade : 1AB
School colour : Maroon
School Houses : Macca, Madeena and Munawwara

09/08/2026
2026.07.31The former principal of Al Minhaj National School, U.L.M Razik Sir,Inna li lillahi wa inna ilaihi raji'un.He w...
31/07/2026

2026.07.31

The former principal of Al Minhaj National School, U.L.M Razik Sir,

Inna li lillahi wa inna ilaihi raji'un.

He was the beloved husband of retired teacher Zavia, beloved father of Muhammad Rashid and Muhammad Rashim.

The funeral of U L M Razik teacher will be held tomorrow, 2026.08.01, with the Zuhr prayer at Masjidul Minhaj.

ஹபுகஸ்தலாவை பள்ளி வீதியில் வசித்து வந்த அல் மின்ஹாஜ் தேசியப் பாடசாலையின் முன்னால் அதிபர் U.L.M ராஸிக் சேர் அவர்கள் காலம் சென்று விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் ஓய்வு பெற்ற ஆசிரியை ஸாவியா அவர்களின் அன்புக் கணவரும், முஹம்மத் ராஷித், முஹம்மத் ராஷிம் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் நாளை 2026.08.01 ஆம் திகதி ஹபுகஸ்தலாவை மஸ்ஜிதுல் மின்ஹாஜ் ஜும்ஆப் பள்ளியில் லுஹர் தொழுகையுடன் தொழுவிக்கப்பட்டு ஹபுகஸ்தலாவை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை, ஹபுகஸ்தலாவாவின் மற்றுமொரு பெருமைமிகு சாதனையாளர்!பகல கொரகோய அல் அரபா முஸ்லீம் வித்தியாலயத்தில...
29/07/2026

அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை, ஹபுகஸ்தலாவாவின் மற்றுமொரு பெருமைமிகு சாதனையாளர்!

பகல கொரகோய அல் அரபா முஸ்லீம் வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வி முதல் சாதாரண தரம் வரை கல்வி கற்று, பின்னர் அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை, ஹபுகஸ்தலாவாவில் உயர்தர வணிகப் பிரிவில் கல்வி பயின்ற மாணவரும்,
பகல கொரகோயவைச் சேர்ந்த ஜனாப் நிலாப்தீன் – திருமதி ரமீஸா ஆகியோரின் அன்புப் புதல்வருமான செல்வன் ரிமாஸ், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வியாபார முகாமைத்துவம் தொடர்பான இளங்கலைமானி (கௌரவ) பட்டத்தை வெற்றிகரமாகப் பெற்றுள்ளார்.
இவரது இச்சிறப்பான சாதனைக்கு அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை, ஹபுகஸ்தலாவா சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், எதிர்கால வாழ்விலும் கல்வி, தொழில் ஆகிய துறைகளில் மேலும் பல வெற்றிகளைப் பெற்று சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்.
💐 மனமார்ந்த வாழ்த்துகள்!

மின்ஹாஜின் பட்டதாரி வாரிசுகள்.. இந்த உலகை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய வேண்டிய சக்தி வாய்ந்த ஆயுதம்_கல்விமின்ஹாஜின் 2...
27/07/2026

மின்ஹாஜின் பட்டதாரி வாரிசுகள்..

இந்த உலகை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய வேண்டிய சக்தி வாய்ந்த ஆயுதம்_கல்வி

மின்ஹாஜின் 2018 உயர்தர கலைப்பிரிவு முன்னாள் மாணவியும் மம்மிபுரவை சேர்ந்த சகோதரர்.பைஸல்_பரீனா பீபி ஆகியோரின்புதல்வியுமான பஸ்லியா இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அரசியல் விஞ்ஞான துறைசார் பட்டப்படிப்பை முடித்தமைக்கான பட்டமளிப்பு கௌரவத்தை பெற்றார்.

அவருக்கு எமது வாழ்த்துக்கள்

🎓🌹 அல்-மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் மற்றுமொரு பெருமைமிகு பட்டதாரி! 🌹🎓"கல்வி என்பது உலகை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய வல...
26/07/2026

🎓🌹 அல்-மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் மற்றுமொரு பெருமைமிகு பட்டதாரி! 🌹🎓

"கல்வி என்பது உலகை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய வலிமையான ஆயுதம்."
— நெல்சன் மண்டேலா
ஹபுகஸ்தலாவை அல்-மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் முன்னாள் மாணவியும், மின்ஹாஜ் மஹல்லாவைச் சேர்ந்த ஜனாப். நஸீம் – நபீலா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியுமான திருமதி. ஆயிஷா நஸீம் அவர்கள், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 18வது பொதுப் பட்டமளிப்பு விழாவில், சமூகவியல் துறையில் கலைமானி (BA Hons) கௌரவப் பட்டத்தை பெற்றுள்ளார்.
இவரது சிறப்பான கல்விச் சாதனை அல்-மின்ஹாஜ் தேசிய பாடசாலை, ஹபுகஸ்தலாவிற்கு பெருமை சேர்க்கும் ஒரு மகிழ்ச்சியான தருணமாகும். 🎓🌹
திருமதி. ஆயிஷா நஸீம் அவர்களுக்கு அல்-மின்ஹாஜ் தேசிய பாடசாலை, ஹபுகஸ்தலாவைச் சேர்ந்த அனைவரின் சார்பிலும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எதிர்கால வாழ்வில் மேலும் பல உயரங்களை அடைந்து, கல்வியிலும் சமூகத்திலும் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக! 🤲❤️
வாழ்த்துக்கள்! Congratulations! 🎓✨

🎓 பெருமைக்குரிய சாதனை – மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌟பல்துறை கல்விச் சாதனைகள் எமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கான வலுவான அடி...
26/07/2026

🎓 பெருமைக்குரிய சாதனை – மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌟

பல்துறை கல்விச் சாதனைகள் எமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கான வலுவான அடித்தளமாக அமைகின்றன.
ஹபுகஸ்தலாவ அல்-மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் 2019 கலைப்பிரிவு மாணவியும், ஹபுகஸ்தலாவ கல்லுமலைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜனாப். அன்ஸார் – ஸரீனா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியுமான செல்வி. M.M.A.F. ரிகாஸா அன்ஸார், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியல் துறையில் BA (Hons) பட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து பட்டம் பெற்றுள்ளார்.
அல்-மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் முன்னாள் மாணவியாக இவர் பெற்றுள்ள இந்த உயரிய கல்விச் சாதனை, எமது பாடசாலைக்கும், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் ஒரு சிறப்பான தருணமாகும்.
செல்வி. ரிகாஸா அன்ஸாருக்கு அல்-மின்ஹாஜ் தேசிய பாடசாலை குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். 🌹🎓

இறைவன் அவருடைய அறிவையும், வாழ்க்கையையும் மேலும் சிறப்பித்து, எதிர்காலப் பயணத்தில் எண்ணற்ற வெற்றிகளையும் உயர்வுகளையும் வழங்குவானாக. ஆமீன். 🤲

🌟 கல்வித்துறையில் சாதிக்கும் அல் மின்ஹாஜின் பெருமைமிகு வாரிசுகள் 🌟அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் மற்றுமொரு பெருமைக்குரிய...
19/07/2026

🌟 கல்வித்துறையில் சாதிக்கும் அல் மின்ஹாஜின் பெருமைமிகு வாரிசுகள் 🌟

அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் மற்றுமொரு பெருமைக்குரிய பழைய மாணவரின் கல்விச் சாதனையை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
கெலிஓயவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர் திரு. குனைஸ் அவர்களின் புதல்வரும், அஹஸ்வெவ காஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தின் 2010 ஆம் ஆண்டு சாதாரண தர மாணவரும், அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் 2013 ஆம் ஆண்டு உயர்தர மாணவருமான திரு. Ishfaque Kunais, அண்மையில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் Master of Information Technology (MIT) பட்டத்தை வெற்றிகரமாகப் பெற்றுள்ளார்.
இந்த உயரிய கல்விச் சாதனை எமது பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் ஒரு சிறந்த மைல்கல்லாகும்.
அன்னாருக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், எதிர்கால கல்வி, தொழில் மற்றும் வாழ்வுப் பயணங்களிலும் மேலும் பல வெற்றிகளையும் உயரிய சாதனைகளையும் அல்லாஹ் வழங்கிட பிரார்த்திக்கிறோம்.

🎓 வாழ்த்துக்கள்! உங்கள் சாதனை, எதிர்கால தலைமுறைக்கு ஒரு ஊக்கமும் முன்மாதிரியும் ஆகும்.

– Al Minhaj National School, Hapugastalawa

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்2026.07.05அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூAl Minhaj National School,...
05/07/2026

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

2026.07.05
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

Al Minhaj National School, Hapugastalawa-வின் 1998 O/L Batch பழைய மாணவருமான மொஹம்மட் ரிபாஸ் அவர்கள் டுபாயில் காலமானார்கள்.
அன்னார், ஹபுகஸ்தலாவை, முதல்மாவத்தையைச் சேர்ந்த காலம் சென்ற ஆசிரியர் ராசிக் அவர்களும், ஓய்வு பெற்ற ஆசிரியை பௌசியா அவர்களும் ஆகியோரின் மூத்த மகனாவார்.
அல்லாஹ் (ஸுப்ஹானஹு வதஆலா) அன்னாரின் பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தை வழங்குவானாக. அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அழகிய பொறுமையையும் ஆறுதலையும் அருள்வானாக. ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

அல்மின்ஹாஜ் தேசிய பாடசாலை - ஹப்புகஸ்தலாவைஎமது பாடசாலைக்கு மேலும் ஒரு பெருமை! 🎓⚖️அல்மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் 2018 உயர்த...
29/06/2026

அல்மின்ஹாஜ் தேசிய பாடசாலை - ஹப்புகஸ்தலாவை
எமது பாடசாலைக்கு மேலும் ஒரு பெருமை! 🎓⚖️
அல்மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் 2018 உயர்தர கலைப் பிரிவு பழைய மாணவியும், கொழும்பு பல்கலைக்கழக சட்டப் பீட பட்டதாரியுமான திருமதி ருஷைதா நாளிர் அவர்கள், கடந்த வாரம் இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஹப்புகஸ்தலாவை ரொக்கில் பகுதியைச் சேர்ந்த திரு. நாளிர் மற்றும் திருமதி பவ்ஸுல் கரீமா ஆகியோரின் இளைய மகளான இவர், தனது கல்வி அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் இவ்வுயரிய சாதனையைப் பெற்றுள்ளார்.

எமது பாடசாலையின் பெயரை உயர்த்தி, சமூகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள அன்பு பழைய மாணவி திருமதி ருஷைதா நாளிர் அவர்களுக்கு பாடசாலை சமூகம், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அல்லாஹ் அவர்களுக்கு மேலும் சிறந்த வெற்றிகளையும், நற்சேவைகளையும் அருள்வானாக. ஆமீன். 🌹

🎓⚖️ எமது பாடசாலையின் பெருமைமிகு பழைய மாணவி சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்! ⚖️🎓அல் மின்ஹாஜ் தேசியப் பாடசாலை, ஹபுகஸ்தலாவை...
26/06/2026

🎓⚖️ எமது பாடசாலையின் பெருமைமிகு பழைய மாணவி சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்! ⚖️🎓

அல் மின்ஹாஜ் தேசியப் பாடசாலை, ஹபுகஸ்தலாவையின் 2018 உயர்தரப் பிரிவு பழைய மாணவியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டப் பீட பட்டதாரியுமான சகோதரி அப்ஸா அலாவுதீன் அவர்கள், அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதை மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் அறியத் தருகின்றோம்.
மாண்புமிகு நீதியரசர் A.H.D. Nawaz அவர்களின் தலைமையிலான நீதிபதிகள் முன்னிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வு, எமது பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
ஹபுகஸ்தலாவையைச் சேர்ந்த திரு. அலாவுதீன் மற்றும் திருமதி பெரோஸா (ஆசிரியை) அவர்களின் மூத்த புதல்வியான அப்ஸா அவர்கள், கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கி இவ்வுயரிய நிலையை அடைந்துள்ளார்.
அவரது எதிர்கால சட்டப் பணிகள் அனைத்திலும் மேலும் பல வெற்றிகளைப் பெற்று சமூகத்திற்கு சிறந்த சேவையாற்ற இறைவனைப் பிரார்த்தித்து, எமது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Address

Hapugastalawa
20668

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:00 - 11:00

Telephone

+94542240564

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Minhaj National School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share