16/07/2026
The students of the **National Diploma in Aquaculture and Aquatic Resource Managemen(NVQ L- 05)t** **Aquaculture Technician (NVQ Level 04)** programmes at the **Ocean University of Sri Lanka, Regional Centre – Jaffna**, visited **Taprobane Seafood (Pvt) Ltd., Crab Processing Plant, Pesalai, and its Erukkalampiddy vannamei shrimp farm as part of their academic programme.
During the visit, the students observed crab processing operations, including grading, cleaning, cooking, meat extraction, packaging, and quality control procedures. They also gained practical knowledge of hygienic handling practices, seafood processing standards followed in the export industry, vannamei shrimp nursery and grow-out farming practices, and marine shellfish culture.
The field visit provided valuable industry exposure and enhanced the students' understanding of commercial seafood processing and aquaculture practices by connecting classroom learning with practical experience.
We sincerely thank the management and staff of **Taprobane Seafood (Pvt) Ltd.** for their warm hospitality, valuable guidance, and support throughout the visit.
:
இலங்கை சமத்திர பல்கலைக்கழகம் – யாழ்ப்பாண பிராந்திய நிலையத்தில் நடைபெறும் நீரியல் வளர்ப்பு மற்றும் நீரியல் வள முகாமைத்துவ தேசிய டிப்ளோமா (NVQ மட்டம் - 05) மற்றும் நீரியல் வளர்ப்பு தொழில்நுட்பவியலாளர் (NVQ மட்டம் - 04) கற்கைநெறிகளில் பயிலும் மாணவர்கள், தங்களது கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக Taprobane Seafood (Pvt) Ltd. நிறுவனத்தின் பேசாலை நண்டு பதனிடும் தொழிற்சாலை மற்றும் எருக்கலம்பிட்டி வன்னாமை இறால் பண்ணை ஆகியவற்றிற்கு களப்பயணத்தை மேற்கொண்டனர்.
இந்தக் களப்பயணத்தின் போது, மாணவர்கள் நண்டு பதனிடும் செயல்முறைகளான தரப்படுத்தல், சுத்திகரித்தல், சமைத்தல், நண்டு இறைச்சி பிரித்தெடுத்தல், பொதியிடல் மற்றும் தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை நேரடியாகக் கற்றறிந்தனர். மேலும், ஏற்றுமதி தரநிலைகளுக்கு ஏற்ப கடைப்பிடிக்கப்படும் சுகாதாரமான கையாளும் முறைகள், கடலுணவு பதனிடும் தரநிலைகள், வன்னாமை இறால் நாற்றங்கால் மற்றும் வளர்ப்பு பண்ணை மேலாண்மை முறைகள், அத்துடன் கடல் சிப்பி இனங்கள் வளர்ப்பு தொடர்பான நடைமுறை அறிவையும் பெற்றனர்.
இக் களப்பயணம், மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த பெறுமதியான அனுபவத்தை வழங்கியதுடன், வகுப்பறையில் கற்றுக்கொண்ட கோட்பாட்டு அறிவை நடைமுறை அனுபவத்துடன் இணைத்து, வணிக ரீதியிலான கடலுணவு பதனிடல் மற்றும் நீர்வளர்ப்பு நடைமுறைகள் குறித்த அவர்களின் புரிதலை மேலும் விரிவுபடுத்தியது.
இக் களப்பயணத்தின் முழு காலத்திலும் மாணவர்களுக்கு அன்பான வரவேற்பு, பயனுள்ள வழிகாட்டல் மற்றும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய Taprobane Seafood (Pvt) Ltd. நிறுவனத்தின் நிர்வாகத்தினருக்கும் பணியாளர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.