Mcai campus

Mcai campus குறைக்கப்பட்ட கட்டணங்களில் கற்கலாம் MS Office / DTP-Rs.5,800 AutoCAD/MAYA/3D MAX/Revit-14,500 Smart Phone repairing 7,500 Organ1,000

* Good student Care
* All courses will be conducted by Experienced Lecturer Panel Who Proved Their Talent Professional in Related Field.
* We will issue Certificates in end of the course period after exam.
* Course Medium: English/Tamil.
* IT AND SKILL DEVELOPMENT

படத்தில் நீங்கள் காணும் இந்த மனிதருக்கு நானும் நீங்களும் உட்பட முழு உலகமும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். ஆம், நீங்கள் ...
22/12/2024

படத்தில் நீங்கள் காணும் இந்த மனிதருக்கு நானும் நீங்களும் உட்பட முழு உலகமும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

ஆம், நீங்கள் எந்த ஒன்றையும் தேடிப் படிக்க ஆர்வம் கொள்ளும் போதெல்லாம் கூகுளில் நுழைந்து ஒரு பட்டனைத் தட்டினால் புத்தக இறாக்கை(Book rack) அப்படியே உங்கள் தலையில் வந்து விழுவது போல மொத்த அறிவுக் களஞ்சியமும் வந்து உங்கள் கண் முன் அடுக்கடுக்காக நிற்குமோ, அந்த இலவச கலைக்களஞ்சியமான (Wikipedia) வை நமக்காக வடிவமைத்தவர் இவர்தான்.

ஆம் "Wikipedia"வின் நிறுவனர் ஜிம்மி வேல்ஸ்(Jimmy Wales) நினைத்திருந்தால் இந்த களஞ்சிய தளத்தை வைத்து பில்லியன் கணக்கான பணத்தை சம்பாதிருக்க முடியும். அவருக்கு வந்த விளம்பர ஆஃபர்களை பயன்படுத்தி
பேஸ்புக் நிறுவனர் மார்க் போன்றவர்கள் போல இந்த உலகையே ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய பணக்காரர்களின் வரிசையில்
நின்றிருக்கலாம்.

ஆனால் தனக்கு வந்த அனைத்து விளம்பரங்களையும் ஏற்க மறுத்தார், முழு உலகுமே பயன் பெரும் இந்த மாபெரும் கலைக்களஞ்சியம் என்றென்றும் இலாப நோக்கற்ற தளமாகவே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்த மண்ணில் வாழும் முன்மாதிரிமிக்க மனிதர்கள் தர வரிசையில் தானும் ஒருவராகவே இருக்க வேண்டும் என்பதிலும் விடாப்பிடியாக இருந்தார்.

கல்விக்கும் தேடலுக்குமான முதல் தர தளமாக விளங்கும் விக்கிபீடியாவை (Wikipedia) பணம் பார்க்கும் நிறுவனங்கள் மற்றும் விளம்பர ஏஜென்சிகளுக்கும் தாரை வார்க்க மறுத்தே வந்தார்.

சமீபத்தில் "Wikipedia Zero" என்ற விஷேச கலைக்களஞ்சியத்தை வடிவமைத்து ஆரம்பித்து வைத்த அவர், உலக மூலை முடுக்குகளிலெல்லாம் இன்டர்நெட் பேக்கேஜுக்கு பணம் செலுத்த முடியாத,
வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் சுமார் 400 மில்லியனுக்கும் அதிகமான உலக மக்களின் அறிவுப் பசியை போக்கவும் கலைத் தாகத்தை தீர்க்கவும் வசதியை ஏற்படுத்தி வைத்தார்.

இதன் மூலம் அவர்கள் உலகெங்கிலும் உள்ள மொபைல் நிறுவனங்களிடமிருந்து விக்கிபீடியாவிற்கான இலவச (access) களை பெற்றுக்கொள்ளலாம்.

இன்னும் இந்த பூமிக் கிரகத்தில் நன்மையை மாத்திரம் நாடும் நல்லுள்ளம் கொண்ட மனிதர்கள் வாழுகிறார்கள் என்பதை ஜிம்மி வேல்ஸ் நிரூபித்துள்ளார்.

ஒரு பட்டனை தட்டுவதன் மூலம் அறிவியல் பொக்கிஷங்கள் அனைத்தையும் நம் கண் முன்னே கொண்டு வந்து வைத்த இவருக்கு எங்கே நீங்களும் ஒரு வாழ்த்தைத் தெரிவிக்கலாமே.

ஏற்கனவே விஸ்வநாதன் ஆனந்த் கார்ல்சன் மோதி கையிலிருந்து போன பட்டம்.. இன்று குகேஷ் மூலம் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருது.. இ...
13/12/2024

ஏற்கனவே விஸ்வநாதன் ஆனந்த் கார்ல்சன் மோதி கையிலிருந்து போன பட்டம்.. இன்று குகேஷ் மூலம் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருது.. இரண்டரை மில்லியன் டாலர் பரிசுத்தொகையோடு.. கிட்டத்தட்ட இந்திய ரூபாய் மதிப்பில் இருபது கோடி ரூபாய் இருக்கலாம்.. பணம் இரண்டாம்பட்சம்.. ஒரு தமிழராக நாமும்.. இந்தியராக மொத்த நாடும் கொண்டாடித்தீர்க்க வேண்டிய விஷயம்... அறிவு மற்றும் கணித்தலின் பெரும் அளவுகோலாக கருதப்படும் சதுரங்க விளையாட்டில் வெற்றிகளை குவிப்பதின் மூலம் ஆனந்த் மற்றும் குகேஷ் போன்ற வீரர்கள் தமிழர்களையும் இந்தியர்களையும் பிறர் தலைநிமிர்ந்து பார்க்க வைக்கின்றனர்.. இச்சாதனையை பெற்ற உலகின் 18 வயதே நிரம்பிய இளம் வீரர் என்கிற சாதனையையும் நிகழ்த்திய தம்பிக்கு இதயம் கனிந்த பாராட்டு.

26/04/2024
பலவீனங்களும்  சிலவேளைகளில் வெற்றிக்கு வித்திடலாம்!!!ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்ட...
26/04/2024

பலவீனங்களும் சிலவேளைகளில் வெற்றிக்கு வித்திடலாம்!!!

ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான் ?

பல மாஸ்டர்களிடம் போனான். எல்லோரும் அவனை பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக் கொண்டார். பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து போனான் "குருவே.. ஜூடோ சேம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?” என்றான். “இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்” என்றார் குரு. குரு சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது ? பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான்.

சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது ... முதல் போட்டி. சர்வமும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பமானது. எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக பையன் வெற்றி பெற்றான்.

இரண்டாவது போட்டி. அதிலும் அவனுக்கே வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி வரை வந்தான். அதிலும் கொஞ்சம் போராடி ஜெயித்து விட்டான்.கடைசிப் போட்டி. எதிரே இருப்பவன் பலமுறை சேம்பியன் பட்டம் பெற்றவன். ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும். பையன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது. முதல் சுற்றில் பையனை அடித்து வீழ்த்தினான். பையனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்திவிடலாமா என்கின்றனர், போட்டி நடத்துபவர்கள். “வேண்டாம்., பையன் சண்டையிடட்டும்” என்கிறார் குரு. இந்தப் பையனோடு போரிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய் வந்திறங்கினான்.பையன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். பையன் சாம்பியனானான். பார்வையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள், போட்டியாளர்களுக்கு ஆச்சரியம். அந்தப் பையனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை.

அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான், "குருவே , நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன் ? ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே “ என்றான். புன்னகைத்தபடியே குரு சொன்னார் “உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய். இரண்டாவது இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். உனக்குத் தான் இடது கை கிடையாதே ! உன்னுடைய அந்த பலவீனம் தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது !”குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான். தனது பலவீனமே பலமாய் மாறிய அதிசயத்தை நினைத்து நினைத்து ஆனந்தித்தான். நமது மனம் திறமைகளின் கடல். அதில் முத்தெடுப்பதும் நத்தையெடுப்பதும் மூச்சடக்கி நாம் மூழ்குவதைப் பொறுத்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை தனித் தனித் திறமைகளைக் கொடுத்திருக்கிறது...

அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது..!1. நீண்ட நேரம் ஜன்னல்களைத்  திறந்து வைக்காதீர்கள்....
21/04/2024

அதிக வெப்பநிலை காரணமாக
பாம்புகள் குளிர்ந்த இடங்களை
தேடும் காலம் இது..!

1. நீண்ட நேரம் ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில பாம்புகள் மிக உயர்ந்த உயரத்தை எட்டும்.

2. மாலை வேளைகளில் வீட்டு முன், பின் கதவுகளை திறந்து வைப்பதை தவிர்க்கவும். இந்த ஊர்வன முற்றிலும் அமைதியாகவே நடமாடுவதால் அதன் ஓசை நமக்கு கேட்காமலே வீட்டிற்குள் நுழையலாம்.

3 குளிர்ச்சியான நிழல் கொண்டிருக்கும் மரத்தின் கீழ் உட்கார்ந்திருப்பதற்கு முன்னர், கிளைகள் மீது பாம்புகள் உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

4.படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு கட்டிலை சுற்றி பரிசோதித்துக்கொள்ளுங்கள். போர்வைகளுக்குள் பாம்புகள் பதுங்கியிருக்க வாய்ப்பு அதிகம்.

5. வீட்டுக்கு வெளியே மாலை நேரங்களில் பாய்கள் மற்றும் கட்டில்களைப் போட்டு தூங்கும் பழங்காலத்து பழக்கத்தை தவிர்க்கவும். மாலையானதுமே கொடிய விஷம் கொண்ட பாம்புகள் வேட்டையாட வெளியேறுகின்றன.

6. பாம்புகள் மட்டுமல்ல பூரான், தேள், நட்டுவக்காலி போன்ற விஷ ஜந்துக்களும் இரவிலேயே நடமாடும்.

7. உங்கள் வீட்டை சுற்றியுள்ள புதர்களை அகற்றிச் சுத்தப்படுத்துங்கள். கொடிய பாம்புகள் விரும்பி உண்ணக்கூடிய எலி போன்றவை புதர்களில் பதுங்கிக் கிடக்கின்றன.

8. பாம்பு விரட்டும் தூள் வாங்கி அதை உங்கள் வீட்டை சுற்றியுள்ள முற்றத்தில் தூவிவிடுங்கள். அது உங்கள் வீட்டிற்குள் பாம்புகள் நுழைவதனை 90% குறைத்துவிடும்.

உங்கள் வீடுகளில் நுழைந்த பாம்புகளை கொல்லும் போது (சில பாம்புகள் எளிதில் கொல்லப்படலாம்) சில பாம்புகளைக் கொல்ல முயற்சிக்கும் போது மிகவும் கவனமாக இருங்கள். ஏனெனில் அதிக வெப்பத்தின் காரணமாக பதுங்க இடம் தேடும் பாம்புகள் அதிக கோபம் கொண்டிருக்கும். நம்மைத் தாக்க முற்படும்.

நீங்கள் இதனை பகிர்வதன் மூலம் அதிகமானனவர்களை இந்த ஆபத்தில் இருந்து காத்துக்கொள்ள உதவும். கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு அதிகம் பலனளிக்கக்கூடும்.

🔥♥️அண்ணன் தங்கை இரண்டு பேரும் போட்டி போட்டு கிராண்ட் மாஸ்டர் பட்டங்களை வென்று பிறகு சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ...
19/04/2024

🔥♥️அண்ணன் தங்கை இரண்டு பேரும் போட்டி போட்டு கிராண்ட் மாஸ்டர் பட்டங்களை வென்று பிறகு சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வாழ்த்தலாமே.... 🙏

18/04/2024
03/01/2024

இன்றைய தினம் ஆரம்பமாக உள்ள (க.பொ.த) உயர் தர பரீட்சையில் தோற்ற உள்ள மாணவர்கள் தங்களது இத்தனை வருட கல்வி அறிவு மற்றும் பாடத்துறை சார்ந்து தாங்கள் வளர்த்துக் கொண்டுள்ள திறன்களை பரீட்சை நேரத்தில் மிகச்சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் சிறந்த பெறுபேறுகளை பெற்று தங்களது எதிர் கால கனவுகளை இலகுவாக அடைந்திட எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

கேட்பவர்களுக்கு கொடுங்கள். இறைவன் உங்களுக்கு கொடுப்பவராக இருப்பார்.அன்பும் கருணையும் புவனியை ஆளட்டும்!!அனைவருக்கும் நத்த...
24/12/2023

கேட்பவர்களுக்கு கொடுங்கள். இறைவன் உங்களுக்கு கொடுப்பவராக இருப்பார்.

அன்பும் கருணையும் புவனியை ஆளட்டும்!!

அனைவருக்கும் நத்தார் தின வாழ்த்துக்கள்!!

https://youtu.be/tAngTJCGaKE?si=ENpLyqi0a3QRYVws
16/11/2023

https://youtu.be/tAngTJCGaKE?si=ENpLyqi0a3QRYVws

Akkuddiyum pichumaniyum ஆதரவு தருகின்ற அனைவருக்கும் அன்பான நன்றிகள் . Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் Whatsapp - +94776524455 #...

நீரிழிவு நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டநிலையில்  எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரிய...
25/09/2023

நீரிழிவு நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டநிலையில் எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்ற நிலை
உடல் முகம் உயிர் நிலை கால்கள் எல்லாம் வீங்கிய நிலையில் சொந்த ஊருக்கு கொண்டு வந்து உறவுகளை இறுதியாக பார்க்க அழைக்கின்றனர்.

ஊரே அழுகிறது. அந்த ஊரைச்சேர்ந்த உறவினர் ஒருவர் தன் மகனை அழைத்துக் கொண்டு அவரை பார்க்க சென்றார்... கண்ணீர் விட்டு அழுதுவிட்டு ஆறுதல் கூறி ஆயிரம் ரூபாயை அவரிடம் அளித்தார். அப்போது அவர் மகன் (தான் படித்த...நம் முன்னோர்களின் அற்புத ஆய்வு தந்த அறிவை மற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்)ஒரு வார்த்தை தந்தையிடம் ஒப்புதல் பெற்று பேசினார்...

"மூக்கிரட்டை இலைகளை" அரைத்து சாறெடுத்து பழைய கஞ்சியில் (சோற்றை பிழிந்து எடுத்து விட்டு) மூக்கிரட்டை சாறு கலந்து" 1 வாரம் குடித்து வரச்சொன்ன அந்த இளைஞர்... உங்கள் குலதெய்வத்தை வணங்கி நம்பிக்கையோடு மேற்கண்ட மருந்தை உட்கொள்ளுங்கள் பரிபூரண குணமாவீர்கள் என்றார்.

மூன்று நாளில் ... எழுந்து அவராக நடந்து சிறுநீர் கழித்ததாகவும் ...2 நாளில் முகம் உடல் வீக்கம் குறைந்ததாகவும், நேற்று தோசை உணவுகள் சாப்பிட்டு நன்றாக உள்ளார் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தார்... இன்று பரிபூரண குணம் அடைந்து விட்டார்.

"உணவே மருந்தென்று" வாழ்ந்த தமிழனின் பெருமையை சொல்வேனா? அதிசயம் அற்புதம் ஆச்சரியம் ஆனால் உண்மை சிறுநீரகம் பாதித்தோர் பல கோடி செலவழிக்க வேண்டாம். மூக்கிரட்டை இலைச் சாறு பழைய கஞ்சி போதும்.

மூக்கிரட்டை இலையின் படம் கீழே காண்க...

செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் வீரரும்,  5 முறை உலகச் சாம்பியனுமான Magnus Carl...
25/08/2023

செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் வீரரும், 5 முறை உலகச் சாம்பியனுமான Magnus Carlsen - ஐ எதிர்கொண்டு இந்தியாவிற்காகக் களமிறங்கிய தமிழக வீரர் Praggnanandhaa R. இறுதிவரை தீரத்துடன் போராடினார். வெற்றிவாய்ப்பினை நூலிழையில் தவறவிட்டாலும் பல கோடி மனங்களை ஈர்த்த பிரக்ஞானந்தா நம் பெருமிதம். அவருக்கு என் வாழ்த்துகள்.

Address

Adiyapatham Road, Near Kalviyankadu Junction, Church Lane, Valai Amman Kovilady, , Jaffna. Northern. Srilanka
Jaffna
40000

Opening Hours

Monday 08:30 - 18:00
Tuesday 08:30 - 18:00
Wednesday 08:30 - 18:00
Thursday 08:30 - 18:00
Friday 08:30 - 18:00
Saturday 08:30 - 18:00
Sunday 08:30 - 18:00

Telephone

0094775001244

Alerts

Be the first to know and let us send you an email when Mcai campus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share