Hatalea Tamil Vidyaalayam

Hatalea Tamil Vidyaalayam பன்விலை கோட்டத்தின் சிறந்த சிறுவர் ந

20/08/2026
20/08/2026
சிகரங்களைத் தொடுவது சாத்தியமே என்பதைத் தனது உழைப்பால் நிரூபித்துக் காட்டிய எமது பாடசாலையின் பெருமைமிகு தருணம் இது..."கல்...
20/08/2026

சிகரங்களைத் தொடுவது சாத்தியமே என்பதைத் தனது உழைப்பால் நிரூபித்துக் காட்டிய எமது பாடசாலையின் பெருமைமிகு தருணம் இது..."
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய எமது ஐந்து மாணவர்களும் 100% முழுமையான சித்தியைப் பெற்று, வத்தேகம வலயத்தில் முதலாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர் என்பதைப் பெருமிதத்தோடு அறிவிக்கின்றோம்.

CHIEF GUEST
Mrs. W. M. T. N. Gunarathne
Director of Zonal Education
Zonal Education Office, Wattegama

GUESTS OF HONOUR
Mr. P. Vigneswaran
Deputy Director of Education – Tamil Medium
Central Province

Mr. A. Raheem
Divisional Director of Education
Panwila

Mr. I. Sathiyamoorthi
Director – Administration
Kelun Lifesciences (Pvt) Ltd
Celogen Lanka (Pvt) Ltd

ஆகியோர் தமது பங்கேற்பால் நிகழ்வை மேலும் சிறப்பித்தனர்.

SPECIAL GUESTS
Mr. S. Rajkumar
President – Leads Foundation Lanka
Mr. S. Sureshkumar
Vice Secretary – Leads Foundation Lanka
Mr. D. Prabagaran
President – Sri Varalaxmi Welfare Foundation
President – Vidivelli
President – Sindhanai Foundation
Mr. R. Ravikumar
Mr. T. Ramesh
Mr. T. Saravanakumar
Mr. S. Gobi
Mrs. S. Kalaimagal
Mr. S. Sekar

வரலாற்றுச் சாதனை படைத்த எமது ஹாத்தலை தமிழ் வித்தியாலயத்தின் இந்த ஒப்பற்ற வெற்றி, எமது மாபெரும் சாதனைகளின் ஆரம்பப்புள்ளி மட்டுமே! 'விதைகள் என்றுமே உறங்கிப்போவதில்லை' என்பதற்கு ஏற்ப, எமது மாணவர்களின் திறமைகளும் ஆசிரியர்களின் தளராத அர்ப்பணிப்பும் இணைந்து படைத்த இந்த சாதனைச் சுடர், இனிவரும் காலங்களிலும் இன்னும் பிரகாசமாக ஒளிரும். எமது பாடசாலையின் புகழும் பெருமையும் புதிய சிகரங்களை நோக்கித் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதைப் பெருமிதத்துடன் அறியத்தருகின்றோம்."

25/07/2026

கற்பித்தலை தாண்டிய ஒரு உலகம் இருக்கிறது எல்லா நட்சத்திரங்களும் ஒரே ஜதியில் மின்னுவதில்லை அத்தனையும் ஓர் கோர்வையாய் கோர்க்க வேண்டி இருக்கிறது .

சில பொழுதுகளை கடக்க முடியாமல் கடந்திருக்கிறேன்.
மிகக் கொடூரமாக யாரோ தாக்கப்படுவதை சில நள்ளிரவுகளில் உணர்ந்திருக்கிறேன்.
சிறு சறுக்கல்களில் இயல்புகளை தொலைத்திருக்கிறேன்.

இப் பிள்ளைகளின் பால்யத்தில் ஒரு மெல்லிய எச்சரிக்கை உணர்வு இருக்கின்றது.
இந்த கண்களின் பின்னால் ஏராளமான கதைகள் விரியும்.
அவை அனைத்தையும் கடந்து சென்றாக வேண்டும்.
அன்பு செய்யவும் நேசிக்கவும் இங்கு யாருக்கும் நேரமில்லை. சில விசும்பல்களுக்கான பதில்களை நானாக தேர்ந்தெடுக்கிறேன்.
தினம்தோறும் நான் சிரிப்பதற்கான மந்திரம் அறிந்தவர்கள் இவர்கள்.
இப் பிள்ளைகளின் உணர்வுகளில் ஆழத்தில் புரையோடிக் கொண்டிருக்கும் எண்ணற்ற வலிகளை பல பொழுதுகளில் என்னால் சுமக்க முடிந்திருக்கிறது. இதைவிட பெரிதாக என்ன சாதித்து விடப் போகிறேன். இதைவிட என்ன திருப்தி மிச்சம் இருக்கப் போகிறது

கைவிடப்படுதலுக்கும் புறக்கணிக்கப்படுதலுக்கும் அச்சமுறுகிறேன்.இந்த சின்ன உலகத்தில் எனக்கு எதிரே
இருக்கும் மான் விழி கண்களில் புதைந்து கிடக்க ஏதோ ஒன்று இருக்கிறது.

மிஸ்ரா ஜப்பார்🍃

ஆத்தலை தமிழ் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவர் G. ஸ்ரீதரன், வலய மட்ட மாணவர் பாராளுமன்றத் தேர்தலில் பெரும...
10/07/2026

ஆத்தலை தமிழ் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவர் G. ஸ்ரீதரன், வலய மட்ட மாணவர் பாராளுமன்றத் தேர்தலில் பெரும் வாக்கெடுப்புகளின் மூலம் சூழல் மற்றும் விவசாய அபிவிருத்தி அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டு, எமது பாடசாலை வரலாற்றுப் பக்கங்களில் ஒரு புதிய முத்திரையைப் பதித்துள்ளார்.
அரசியல், ஆளுமை மற்றும் தலைமைத்துவத்தின் தொடக்கப் புள்ளியாகக் கருதப்படும் வலய மட்ட மாணவர் பாராளுமன்றத்தில், இத்தகையதொரு மிக முக்கியமான பொறுப்புக்கு எமது பாடசாலை மாணவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளது மட்டற்ற மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.
வாழ்த்துக்கள் ஸ்ரீதரன்

"தலைமைத்துவப் பாதையில் உமது பயணம் தொடரட்டும்; ஆத்தலையின் நாமம் எங்கும் ஒலிக்கட்டும்!"

Address

Kandy

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hatalea Tamil Vidyaalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share