22/12/2014
க/ ப/ பாரதி தமிழ் மகா வித்தியாலம்...
பசுமையும் செழிப்பும் எழிலும் நிறைந்த மலையக தலை நகராம் கண்டி மாநகரில், வத்தேகம நகரில் தமிழ் மக்களின் கல்விக்கு விளக்கம் தந்து சமத்துவமும், தோழமையும், ஒற்றுமையும் ஒன்றுபட பாடிய பாவேந்தன் பாரதியின் பெயரிலே தலை எடுத்தது ஓங்கி நிற்கும் பாடசாலை க/ ப/ பாரதி தமிழ் மகா வித்தியாலம்.
1889 ஆம் வருடம் திரு. எட்வேர்ட் வைட் ஹோலோவே என்பவரால் இப் பகுதி தமிழ் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும் இது தொடர்பான ஆவணங்கள் 1910 ஆம் ஆண்டின் பின் எழுதப்பட்டதே தற்போது காணமுடிகின்றது.
அக்கால கட்டத்தில் எங்கள் பாடசாலையின் வளர்சிக்காக இப் பிரதேச மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார்கள் இதற்கு எதுவாக, ஆரம்ப காலங்களில் அரசாங்கத்தின் போதிய அளவு வளங்கள் மற்றும் உதவிகள் கிட்டாமையால் இந்து, கிறிஸ்தவ, பெளத்த, இஸ்லாமிய மாணவர்களின் பெற்றோர்கள் பேரு முயற்சியால் பணம் சேர்ப்பின் மூலம் பாடசாலைக்கு தேவையான கட்டிட வசதிகளை ஏற்படுத்தி உள்ளனர்.
ஆரம்ப கால கட்டத்தில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் இயங்கிய பாடசாலையில் தமிழ் பிரிவை வெளியேற்ற ஏற்படுத்த முயற்சி பெற்றோர்களின் முயற்சியால் நிறுத்தப்பட்டு தற்போதும் தமிழ் சமுயததின் தேவையை பூர்த்தி செய்து கொண்டு உள்ளது.
ஆரம்ப காலத்தில் தரம் 1 - 5 வரையான 6 - 10 வரையான வகுப்புகளே நடாத்த பட்டன பின்பு அது தரம் 11 வரை விஸ்தரிக்க பட்டு தற்போது உயர் தரம் வரை வியாபித்து உள்ளது இதற்கு காரணம் நம் பிரதேச மக்களின் கடின உழைப்பும் ஆசிரிய பெருந்தகைகளின் விடா முயற்சியும் அன்றி வேறு ஒன்றும் இல்லை. தற்போது உயர் தரம் கலை மற்றும் வர்த்தக பிரிவுகளை உள்ளடக்கி தனது கல்வி சேவையை தொடர்கிறது.
- தொடரும்-