Jamiah Manarul Hudha

Jamiah Manarul Hudha Islamic College of General Studies

🌟 அல்ஹம்துலில்லாஹ்  # #— எமது கல்லூரியின் மற்றுமொரு முக்கிய கல்வி மைல்கல்லாக 🌟📚 2026 ஆம் ஆண்டு G.C.E. Advanced Level (A/...
10/08/2026

🌟 அல்ஹம்துலில்லாஹ் # #— எமது கல்லூரியின் மற்றுமொரு முக்கிய கல்வி மைல்கல்லாக 🌟

📚 2026 ஆம் ஆண்டு G.C.E. Advanced Level (A/L) பரீட்சையில் எமது கல்லூரியில் 14 மாணவர்கள் பங்கேற்பு!

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வின் அருளாலும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பாலும், பெற்றோர்களின் ஒத்துழைப்பாலும், மாணவர்களின் விடா முயற்சியாலும் எமது ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக் கல்லூரி மற்றுமொரு முக்கியமான கல்வி முன்னேற்றத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

🕌 இஸ்லாமியக் கல்வியுடன் இணைந்த பொதுக் கல்வி

எமது கல்லூரியின் தனித்துவமான கல்வி அணுகுமுறையின் அடிப்படையில், மாணவர்களுக்கு இஸ்லாமியக் கல்வி, அரபுக் கல்வி மற்றும் பொதுக் கல்வி ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு (G.C.E. A/L) எமது கல்லூரி சார்பாக14 மாணவர்கள் தோற்றுகின்றனர்.

📖 மாணவர்கள் தோற்றும் முக்கியப் பாடங்கள்:

🔹 அரபு மொழி (Arabic)
🔹 இஸ்லாம் (Islam)
🔹 அரசியல் விஞ்ஞானம் (Political Science)

🎓 இது ஒரு பரீட்சை மாத்திரமல்ல…

எமது மாணவர்கள் மார்க்க அறிவில் சிறந்து விளங்குவதுடன், நவீன உலகின் கல்வி மற்றும் சமூகத் தேவைகளையும் எதிர்கொள்ளக்கூடியவர்களாக உருவாக வேண்டும் என்பதே எமது கல்விப் பயணத்தின் நோக்கமாகும்.

எமது 14 மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, உயர்கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கையில் வெற்றிகரமாக முன்னேறுவதற்காக எமது ஆசிரியர்கள் தொடர்ந்து வழிகாட்டி வருகின்றனர்.

🤲 துஆ செய்வோம்!

எமது அன்பிற்குரிய மாணவர்களின் பரீட்சை முயற்சிகள் வெற்றியடையவும், அவர்கள் எதிர்பார்க்கும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிடவும், அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

💚 JAMIA MANARUL HUDHA
Arabic College | Hifz | Islamic studies | General Education

📌 இஸ்லாமிய விழுமியங்களுடன் தரமான கல்வியை வழங்கி, எதிர்கால தலைமுறையை உருவாக்குவோம்.











30/07/2026

ஊழலற்ற மற்றும் மனிதநேயமிக்க பண்பாட்டுச் சமூகத்தை உருவாக்குவோம் -விழிப்புணர்வு நிகழ்ச்சி

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ், “ஊழலற்ற மற்றும் மனிதநேயமிக்க பண்பாட்டுச் சமூகத்தை உருவாக்குதல்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு எமது ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் தலைமை உரையையும், நிகழ்வின் முக்கியத்துவம் மற்றும் சாராம்சத்தையும் கல்லூரியின் அதிபர் எம். எச். அஹ்மத் மிஸ்பாஹி அவர்கள் வழங்கி, ஊழலற்ற, நேர்மையான, மனிதநேயமிக்க மற்றும் பொறுப்புணர்வுமிக்க சமூகத்தை உருவாக்குவதில் ஒவ்வொருவரினதும் பங்களிப்பின் அவசியத்தை விரிவாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, “ஊழலை ஒழிப்போம்” என்ற தலைப்பில் கல்லூரியின் விரிவுரையாளர் அல்ஆலிம் ஃபஜ்மி ஃபுர்கானி அவர்கள் சிறப்புரையாற்றினார். ஊழலின் தீமைகள், அதன் சமூகத் தாக்கங்கள் மற்றும் ஊழலைத் தடுப்பதில் தனிநபர் முதல் சமூக மட்டம் வரை மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் குறித்து தெளிவுபடுத்தினா.ர்.

மேலும், “சமாதானத்துடன், சமத்துவத்துடன் வாழ்வோம்” என்ற தலைப்பில் கல்லூரியின் பிரதி அதிபர் எம். ஜே. எம். புஹாரி உஸ்தாத் அவர்கள் உரையாற்றி, சமூகத்தில் சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இந்நிகழ்வின் நன்றியுரையை, மதிப்பிற்குரிய ஆசிரியரும் கல்விக்குழுத் தலைவருமான அல்ஆலிம் ஷாகிர் உஸ்தாத் அவர்கள் வழங்கினார்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சிறப்பான பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வு, ஊழலை ஒழித்து, மனிதநேயம், சமாதானம், சமத்துவம் மற்றும் நேர்மை நிறைந்த பண்பாட்டுச் சமூகத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்திய பயனுள்ள நிகழ்வாக அமைந்தது.

🎓🌹 உளமார்ந்த வாழ்த்துக்கள்! 🌹🎓South Eastern University of Sri Lanka இல் நடைபெற்ற 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் (25....
29/07/2026

🎓🌹 உளமார்ந்த வாழ்த்துக்கள்! 🌹🎓

South Eastern University of Sri Lanka இல் நடைபெற்ற 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் (25.07.2026) எமது கல்லூரியில் கல்வி ஆசிரியராகக் கடமையாற்றி வரும் *அல் ஆலிம் Jaws Muhamad Juman* அவர்கள் Bachelor of Arts (B.A) பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து பட்டம் பெற்றுள்ளமை எமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கின்றது.

அவரது இச்சிறப்பான சாதனைக்காக எமது கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் சார்பாக எமது உளமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது கல்விப் பயணம் மேலும் சிறக்கவும், எதிர்காலத்தில் பல்வேறு உயர்வுகளையும் வெற்றிகளையும் பெற்று, சமூகத்திற்கும் கல்வித் துறைக்கும் சிறந்த பங்களிப்புகளை வழங்கவும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக!

அன்பும் வாழ்த்துக்களும்! 🌹🎓

22/07/2026
எமது கல்லூரி பங்கேற்பு📢 *SIITE CAMPUS | Official Update* 🌟 "Empowering Students Through Technology, Science and Quranic ...
21/07/2026

எமது கல்லூரி பங்கேற்பு

📢 *SIITE CAMPUS | Official Update*

🌟 "Empowering Students Through Technology, Science and Quranic Wisdom" 🌟
A Successful One-Day Seminar & Training Session on Information Technology

Synergy Institute of Information Technology and English Campus (Pvt) Ltd — SIITE CAMPUS is proud to announce the successful completion of our One-Day Seminar and Training Session, themed "Empowering Students Through Technology, Science and Quranic Wisdom," held on 15th July 2026 at the Institute of Bankers of Sri Lanka (IBSL). 🏢📅

This seminar was proudly conducted as a milestone event alongside the ongoing journey of our flagship Professional Diploma in Information Technology Program at SIITE Campus, reflecting our continuous commitment to nurturing well-rounded, future-ready professionals. 🎓💻

The program was thoughtfully designed to combine spiritual guidance with technical and social awareness, covering:

📖 The Importance of Study in the Light of the Holy Quran
🕌 Islamic Research
🖥️ Introduction to Computer Science & Computer Fundamentals
📊 MS Office Applications
⌨️ Typing Skills
🌐 Web Design & Development
🚨 Cyber Crime Awareness
⚖️ ICT Law & Ethics
🎨 Content Creation
📲 Spreading Islamic Dawah Through Social Media

This impactful session welcomed enthusiastic student participants representing three respected institutions:

1️⃣ Jamiah Manarul Hudha Arabic College Divurmpola
2️⃣ Sabeelurrashadh Arabic College Pasyala
3️⃣ Imaniyya Arabic College- Thihariya

We extend our heartfelt gratitude to our Program Director, Mr. K N M Mifras (BSc in ITMS, PGDE), whose valuable guidance, time, and unwavering support laid the foundation for the success of this program. 🌟🙏

The training itself was delivered with great expertise by our esteemed Trainer & Motivational Speaker, Mr. Ahamed Zarook (BSc Honours in Software Engineering), whose confident and engaging delivery inspired every student present. Beyond technical skills, students were also guided on how to navigate the digital world responsibly — understanding cyber laws, protecting themselves from cyber crime, and most importantly, using content creation and social media as a powerful platform to spread Islamic Dawah in a meaningful and impactful way. 🎤✨

This program stands as a small step toward a larger vision — one where our Ulamas and students are not only strong in Islamic knowledge but are also equipped with the skills, awareness, and confidence to face the modern world through Information Technology, while using digital platforms responsibly and effectively to serve the message of Islam. 🌍💻 We believe that knowledge of Deen and knowledge of technology must walk hand in hand to truly empower our community, and our Professional Diploma in Information Technology Program continues to be the driving force behind this mission. 🚀

We sincerely thank our Program Director, our Trainer, the Principals and Vice Principals of the participating colleges, all student attendees, and our dedicated organizing team, whose combined efforts made this event a resounding success. We also extend our heartfelt thanks to our beloved Teachers of Annoor Arabic College, whose guidance and duas continue to inspire us. 🙏👏

At SIITE Campus, we remain committed to empowering the next generation with both knowledge and values. 🌱

🌟 "தொழிநுட்ப அறிவியல் மற்றும் குர்ஆனிய ஞானத்தின் மூலம் மாணவர்களை மேம்படுத்தல்" 🌟
தகவல் தொழிநுட்பம் தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கு மற்றும் பயிற்சி நிகழ்வு வெற்றிகரமாக நிறைவு.

Synergy Institute of Information Technology and English Campus (Pvt) Ltd — SIITE CAMPUS, "தொழிநுட்ப அறிவியல் மற்றும் குர்ஆனிய ஞானத்தின் மூலம் மாணவர்களை மேம்படுத்தல்" என்ற தலைப்பில் 2026 ஜுலை 15 ஆம் திகதி தி நடாத்தப்பட்ட ஒரு நாள் கருத்தரங்கு மற்றும் பயிற்சி, இலங்கை வங்கியாளர் நிறுவனத்தில் (IBSL) வெற்றிகரமாக நிறைவேறியதை பெருமையுடன் அறிவித்துக் கொள்கிறது. 🏢📅

இந்த கருத்தரங்கு, எங்கள் முதன்மையான Professional Diploma in Information Technology Program-இன் தொடர்ச்சியான பயணத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக நடாத்தப்பட்டது, இது SIITE Campus-இன் முழுமையான, எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் நிபுணர்களை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. 🎓💻

இந்நிகழ்ச்சி ஆன்மீக வழிகாட்டுதலையும் தொழிநுட்ப மற்றும் சமூக விழிப்புணர்வையும் இணைத்து பின்வரும் பாடங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டிருந்தது:

📖 திருக்குர்ஆனின் வெளிச்சத்தில் கல்வியின் முக்கியத்துவம்
🕌 இஸ்லாமிய ஆய்வு
🖥️ கணினி அறிவியல் மற்றும் அடிப்படை கருத்துக்கள் அறிமுகம்
📊 MS Office பயன்பாடுகள்
⌨️ தட்டச்சு திறன்கள்
🌐 வலைத்தள வடிவமைப்பு மற்றும் மேம்பாடு
🚨 சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு
⚖️ ICT சட்டம் மற்றும் நெறிமுறைகள்
🎨 உள்ளடக்க உருவாக்கம் (Content Creation)
📲 சமூக ஊடகங்கள் மூலம் இஸ்லாமிய தஃவா பரப்புதல்

இந்த பயனுள்ள நிகழ்ச்சியில் மூன்று மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்:

1️⃣ Jamiah Manarul Hudha Arabic College - Divurmpola
2️⃣ Sabeelurrashadh Arabic College - Pasyala
3️⃣ Imaniyya Arabic College - Thihariya

இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட எங்கள் நிகழ்ச்சி இயக்குநர் K N M Mifras அவர்களுக்கு (BSc in ITMS, PGDE) அவரது மதிப்புமிக்க வழிகாட்டுதலுக்கும், நேரத்திற்கும், ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 🌟🙏

இந்த பயிற்சியை மிகுந்த திறமையுடன் வழங்கிய எங்கள் பயிற்றுனர் மற்றும் பேச்சாளர் Mr. Ahamed Zarook (BSc Honours in Software Engineering) அவர்களின் நம்பிக்கை நிறைந்த மற்றும் கவர்ச்சிகரமான உரையாடல் ஒவ்வொரு மாணவரையும் ஊக்கப்படுத்தியது. தொழிநுட்ப திறன்களைத் தாண்டி, டிஜிட்டல் உலகை பொறுப்புடன் எதிர்கொள்வது எப்படி என்பதையும், சைபர் சட்டங்களை புரிந்துகொள்வதையும், சைபர் குற்றங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதையும், மேலும் முக்கியமாக உள்ளடக்க உருவாக்கம் மற்றும் சமூக ஊடகங்களை இஸ்லாமிய தஃவாவை அர்த்தமுள்ள மற்றும் தாக்கமான வழியில் பரப்புவதற்கான ஒரு சக்திவாய்ந்த தளமாக பயன்படுத்துவதையும் மாணவர்களுக்கு வழிகாட்டப்பட்டது. 🎤✨

இந்நிகழ்ச்சி, நமது உலமாக்களும் மாணவர்களும் இஸ்லாமிய அறிவில் மட்டுமல்லாமல், தகவல் தொழிநுட்பத்தின் மூலம் நவீன சமூகத்தை எதிர்கொள்ளும் திறனும், விழிப்புணர்வும், நம்பிக்கையும் பெறவேண்டும், மேலும் டிஜிட்டல் தளங்களை பொறுப்புடன் மற்றும் திறம்படப் பயன்படுத்தி இஸ்லாத்தின் செய்தியை பரப்ப வேண்டும் என்ற பெரிய இலக்கின் ஒரு சிறிய படியாகும். 🌍💻 மார்க்க அறிவும் தொழிநுட்ப அறிவும் ஒன்றாகச் சேர்ந்தே சமூகத்தை உண்மையிலேயே மேம்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் எங்கள் Professional Diploma in Information Technology Program இந்த நோக்கத்தின் முதன்மை உந்துசக்தியாக தொடர்கிறது. 🚀

இந்த நிகழ்ச்சியை வெற்றியடையச் செய்த எங்கள் நிகழ்ச்சி இயக்குநர், பயிற்றுனர், பங்கேற்ற கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள், அனைத்து மாணவர்கள், மற்றும் எங்கள் அர்ப்பணிப்புள்ள ஏற்பாட்டுக் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள். மேலும் எங்கள் அன்பான அந்நூர் அரபுக் கல்லூரியின் ஆசிரியர்களுக்கும் — அவர்களது வழிகாட்டுதலுக்கும் துஆக்களுக்கும் — எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 🙏👏

SIITE Campus-இல், அறிவையும் விழுமியங்களையும் இணைத்து அடுத்த தலைமுறையை மேம்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். 🌱

Yours Sincerely,
I A M Abrar
Director & Chairman — SIITE Campus,

கல்விசார் அனுபவப் பரிமாற்ற விஜயம்2925/07/16அல்ஹம்துலில்லாஹ்!முஹம்மதிய்யா இஸ்லாமிய கல்லூரி, கல்பிட்டிய வீதி, திகழி, ஏத்தா...
16/07/2026

கல்விசார் அனுபவப் பரிமாற்ற விஜயம்
2925/07/16

அல்ஹம்துலில்லாஹ்!

முஹம்மதிய்யா இஸ்லாமிய கல்லூரி, கல்பிட்டிய வீதி, திகழி, ஏத்தாலை ஆசிரியர் குழுவினர், எமது ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக் கல்லூரிக்கு கல்விசார் அனுபவப் பரிமாற்ற விஜயமொன்றை மேற்கொண்டனர்.

இவ்விஜயத்தின் பிரதான நோக்கம், இரு கல்வி நிறுவனங்களுக்கும் இடையில் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதுடன், கல்லூரி வளர்ச்சி, கல்வித் தர மேம்பாடு, மாணவர் ஒழுக்கம், ஆசிரியர் வழிகாட்டல் மற்றும் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான பயனுள்ள கலந்துரையாடல்களை முன்னெடுப்பதாக அமைந்தது.

இதன்போது, எமது கல்லூரியில் நடைமுறையில் உள்ள பல்வேறு கல்விசார் நடவடிக்கைகள், மாணவர் முன்னேற்றத் திட்டங்கள், ஆசிரியர் செயற்பாடுகள் மற்றும் நிறுவன வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகள் குறித்து விரிவாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அதேபோல், அவற்றைத் தமது கல்லூரியிலும் மேலும் மேம்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன.

இவ்வாறான பரஸ்பர கல்விசார் விஜயங்கள், கல்வி நிறுவனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும், அனுபவப் பகிர்வையும், தரமான கல்வி வளர்ச்சியையும் மேலும் வலுப்படுத்தும் என்பதில் நம்பிக்கை கொள்கின்றோம்.

எமது கல்லூரிக்கு வருகை தந்து பயனுள்ள கலந்துரையாடல்களில் பங்கேற்ற ஆசிரியர் குழுவினருக்கு எமது மனமார்ந்த நன்றிகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அல்லாஹுதஆலா இவ்வாறான கல்விசார் ஒத்துழைப்புகளுக்கு பரக்கத்தை வழங்கி, இரு கல்வி நிறுவனங்களுக்கும் தொடர்ந்த முன்னேற்றத்தை அருள்வானாக. ஆமீன்.

தொடர்புகளுக்கு அழையுங்கள்0773738142
13/07/2026

தொடர்புகளுக்கு அழையுங்கள்
0773738142

02/07/2026

Address

Divurumpola, Ethungahakotuwa
Kuliyapitiya
60266

Telephone

+94322241474

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamiah Manarul Hudha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share