22/09/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ.
*வளரும் ஒரு எழுத்தாளராக இலங்கை தினச்சுடர் தேசிய விருது பெற்றமைக்கு மிக முக்கிய காரணங்களில் ஆயிஷா தாயகமும் ஒன்று.*
பெண்ணாளுமைகளை உருவாக்கி சாதனை வழிகளில் பயணிக்க வைக்கும் ஆயிஷா கல்லூரியில் இணைந்த பிறகு தான் எனது எழுத்தாற்றல் இன்னும் இன்னும் வளர ஆரம்பித்தது அல்ஹம்துலில்லாஹ்.
எழுத்தாற்றல் தரமானதாக அமைய வேண்டும் என்றால் அதற்குரிய அத்திவாரம் வாசிப்பு தான் அந்த வகையில் ஆயிஷாவின் நூலகம் என் எழுத்தாற்றலை வலுப்படுத்தியதில் எவ்வித ஐயமும் இல்லை.
அடுத்து ஆயிஷா கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக அமைப்பின் சிறந்த வழிகாட்டல்கள் எனக்கு கிடைத்தமையால் இன்று என்னால் சாதிக்க முடிந்தது அல்ஹம்துலில்லாஹ். அந்த வகையில் ஆயிஷா தாயகத்திற்கும் எனக்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் என்னை ஊக்குவித்த நூல்களுக்கும் மற்றும் தோழமைகளுக்கும் பிரார்த்தனைகளுடனான என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.
✍🏻அகீலா ஜெளபர்
ஏத்தாளை புத்தளம்
#கற்பிட்டி ஏத்தாளை அகீலா ஜௌபர் வளரும் ஆக்க எழுத்தாளராக தினச்சுடர் தேசிய விருது விழாவில் கௌரவிப்பு.
https://www.madurankulimedia.lk/2026/09/blog-post_281.html