17/03/2023
IDM City Campus, Nelliadyன் மாதாந்த பரிசில் தின வைபவம் மாசி மாதம் 26ம் திகதி கல்லூரி வளாகத்தில் சிறப்புற அரங்கேறியிருந்தது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக, நெல்லியடி மத்திய கல்லூரியின் அதிபர் திரு. க. கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
சிறப்பு விருந்தினராக தொழிலதிபரும், NBCM Foundationன் தலைவருமான திரு. சி. தயாபரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை அலங்கரித்திருந்தார்.
IDM சிறார்களிற்கான மாதாந்த அறிக்கையும், IDM level 03, Level 04 Diploma மாணவர்களிற்கான சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தது.
பெற்றோர்களும், நலன்விரும்பிகளும், மாணவர்களும் பங்கு கொண்டிருந்த இந்நிகழ்வில் கணணி மற்றும் ஆங்கிலக் கல்வியின் அவசியத்தையும், IDM கடந்த ஐந்து வருடங்களாக பிரதேசத்தில் ஆற்றிவரும் சேவைகளையும், மதிப்பிற்குரிய பிரதம விருந்தினர் அவர்கள் பாராட்டி சிறப்புரை ஆற்றி இருந்தார்.
IDM மாணவர்களது நிகழ்வுகளும் அழகேற்ற, 2023 மாசி மாதத்தின் பரிசில் தினம் சிறப்பாக நடந்தேறியது.
கலந்து சிறப்பித்த பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரிற்கும் நன்றிகள்.
Part 2 of 2.