14/07/2024
ஸதகா ஜாரியாவாக இரண்டு கணணி திரை, மவுஸ், கீ போர்டு ஆகியன வழங்கி வைப்பு
அல் ஹம்துலில்லாஹ்!
நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் வரலாற்றில் முதன் முதலாக கணணி பாடநெறி NVQ Level 3 ஆரம்பிக்கப்பட்டு அது சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் செயற்பாட்டு ரீதியான கற்பித்தலுக்கு தேவையான கணனி வசதிகள் இன்மையால் இங்கு கல்வி பயிலும் எதிர்கால உலமாக்களான ஆலிம்கள் அவதியுறும் நிலைமையினை அவதானிக்க முடிந்தது.
அந்த வகையில் இதற்கு தேவையான கணினி வசதியை பெற்றுத் தருமாறு வேண்டிக் கொண்டதற்கிணங்க,
கணணிக்குரிய இரண்டு கணணி திரை, மவுஸ், கீ போர்டு ஆகியனவற்றை இலங்கை இறைவரி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எம் முஸ்ஸம்மில் ஸதகா ஜாரியாவாக பெற்றுத் தந்துள்ளார்
வல்ல அல்லாஹ் இதற்காக உதவிய சகோதர உள்ளங்களின் செல்வத்தில் மென்மேலும் பBறக்கத் செய்வதோடு, ஸதகா ஜாரியா என்ற நிரப்பமான கூலியினை ஈருலகிலும் வழங்க வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.
ஆமீன்
இதுபோன்று சதகா ஜாரியாவாக நீங்களும் தர்மம் செய்ய விரும்பினால் இறை வேதத்தை சுமக்கும் உலமாக்களை உருவாக்குகின்ற பொறுப்பு வாய்ந்த சமய ஸ்தாபனமாகிய நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியுடன் தொடர்பு கொள்ளுங்கள்:
076 010 4489
075 161 4808
Account number:
Kashiful Uloom Arabic College
0010117513002
Amana bank
Ninthavur branch
Message kashiful uloom Arabic college on WhatsApp. https://wa.me/94723171171