11/03/2026
38 வருடங்கள் கல்விப் புலத்தில் பணியாற்றி இன்றுடன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் என்றும் எமது அன்புக்குரிய
ஹில்மி சேர்
*******************************
எமது நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலையில் அர்ப்பணிப்புடன் ஆசிரியர், அதிபர் பணியாற்றிய A.Mohamed Hilmy அவர்கள் 38 வருட அரச சேவையின் பின்னர் இன்று 2026 பங்குனி மாதம் 11ம் திகதி புதன்கிழமையுடன் தமது அரச சேவையை பூர்த்தி செய்து ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளார்
நிந்தவூரின் புகழ்பூத்த, பிரபல்யமான, ஒழுக்க விழுமியங்களை தன்னகத்தே கொண்ட பாவா மாஸ்டர் குடும்பத்தில் ஓய்வு பெற்ற அதிபர் ஆதம்பாவா மற்றும் உம்மு சக்கினா ஆகியோருக்கு 6வது பிள்ளையாக
2 சகோதரர்களுடனும் 3 சகோதரிகளுடனும் பிறந்த இவர் தமது ஆரம்பகல்வி தொடக்கம் உயர்தர விஞ்ஞான கல்வி வரை எமது அல் அஷ்றக் தேசிய பாடசாலையிலேயே கற்று பல்கலைகழகத்தில் விவசாய விஞ்ஞான பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டவராவார் பாடசாலைக் காலத்தில் கல்வி, விளையாட்டு என்பவற்றில் சிறந்து விளங்கிய இவர் பாடசாலையிலுள்ள பல கழகங்களிலும் இணைந்து செயற்பட்டதோடு இறுதி இரண்டு வருடங்கள் எமது பாடசாலையில் Senior Prefect ஆகவும் கடமையாற்றியுள்ளார்
இவர் 1988ம் ஆண்டு ஆசிரியர் போட்டி பரீட்சைக்கு தோற்றி தெரிவாகி ஆசிரியராக முதல் நியமனம் பெற்று எமது பாடசாலையிலேயே தமது கல்விப் பணியை ஆரம்பித்து ஆசிரியர் பணியாற்றியதோடு அதிபர் போட்டி பரீட்சைக்கு தோற்றி தெரிவாகி 2012இல் அதிபர் சேவையில் இணைந்து கொண்டார்
அதிபர் சேவை தரம் 1 ஐச் சேர்ந்த கல்விமாணி பட்டதாரியான இவர் தமது 38 வருட சேவைக்லத்தில் எமது பாடசாலையில் ஆசிரியராக 24 வருடங்களும் உதவி அதிபராக, பிரதி அதிபராக 07 வருடங்களுமாக மொத்தம் 31 வருடங்களும்
நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராக, அதிபராக மொத்தம்
07 வருடங்களுமாக சேவையாற்றி ஆசிரியர் சேவையில் 24 வருடங்களையும் அதிபர் சேவையில் 14 வருடங்களையும் பூர்த்தி செய்து மொத்தம்
38 வருடங்கள் கல்வி புலத்தில் சேவையாற்றியுள்ளார்
எமது பாசாலையில் விஞ்ஞான பாட ஆசிரியராக இருந்து எமதூரின் அனேக மாணவர்களின் விஞ்ஞான கல்விக்கு வித்திட்ட ஹில்மி சேர் தொடர்ந்து உதவி அதிபராக, நிர்வாகத்துக்கு பொறுப்பான பிரதி அதிபராக கடமையாற்றி பாடவிதானைத்திலும் இணைப்பாடவிதானத்திலும் மாணவர்கள் சாதனை படைக்க தனது முழுப் பங்களிப்பையும் வழங்கியதோடு நிர்வாகத்துக்கு பொறுப்பான பிரதி அதிபராக இருந்த காலத்தில் பாடசாலையின் நிர்வாக கட்டமைப்பை ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பாக மாற்றி அதை சிறப்பாக செயற்படுத்திய ஒருவராவர்
அதிபருக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராக இருந்து அவருடன் நெருக்கமான உறவை பேணி ஆசிரியர்கள் ஏனைய ஆளணியினர்களின் மனங்களை அன்பால் வென்று பாடசாலையின் வளர்ச்சிக்காக ஆர்பணிப்புடன் செயற்பட்ட அந்த
நல்லுள்ளம் ஓய்வுபெற்றுச் செல்வது எமது பாடசாலைக்கு ஈடு செய்யப்பட முடியாத ஓர் பாரிய இழப்பாகும்
ஹில்மி சேர் ஓய்வு பெற்றுச் செல்லும் 11.03.2026 இன்றைய நாள் புனித நோன்பு காலமாக இருந்ததனால் அவருக்கான சேவை நலன் பாராட்டு வைபவம் சென்ற 11.02.2026 அன்று புதன்கிழமை எமது கல்லூரி முதல்வர் Mr.A.Abdul Gafoor sir அவர்களின் தலைமையில் காசிமி கேட்போர் கூடத்தில் ASWA நலன் புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது
இந் நிகழ்வில் தமது குடும்ப சகிதம் கலந்து கொண்ட ஹில்மி சேர் எமது பாடசாலை பேன்ட் வாத்திய குழுவினரால் பாடசாலை முன்றலிலிருந்து காசிமி கேட்போர் கூடத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு வாழ்த்துரைகள் வழங்கப்பட்டு வாழ்த்துபா வாசிக்கப்பட்டு பொன்னாடைகள் போர்த்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டதோடு நினைவுச் சின்னமும் பொற்கிளியும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன் மதிய போச நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது
இவரது ஓய்வு நிலையை கௌரவிக்கும் வண்ணம் ASWA நலன்புரி அமைப்பு ஒழுங்கு செய்த வைபம் தவிர பாடசாலையில் நிர்வாக பிரிவு, பெண்கள் பிரிவு, உயர்தர விஞ்ஞான பிரிவு, உயர்தர கலை வர்த்தக பிரிவு, உயர்தர தொழிநுட்ப பிரிவு, சாதாரண தர பிரிவு, முகாமைத்துவ குழு, கல்விசாரா ஆளணியினர் குழு என பல்வேறு தரத்தினராலும் பாடசாலை இறுதி வாரம் முழுவதும் இவருக்கான பலதரப்பட்ட பிரியாவிடை வைபவங்கள் நடைபெற்றிருந்தன
மிகவும் அமைதியான சுபாவம் கொண்ட நிர்வாக திறன் மிக்க
ஹில்மி சேர் ஆசிரியராக, அதிபராக தமது பணியை திருப்திகரமாக நிறைவேற்றிய ஒருவராவார் என்பதில் எந்தவித ஐயமுமில்லை
இன்றுடன் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள ஹில்மி சேரை வாழ்த்தி பாராட்டி வழியனுப்புவதில் அஷ்றக் சமூகம் பெரு மகிழ்வடைகிது
அல்லாஹ் அவர்களின் இத்தூய பணிகளை பொருந்திக் கொள்வானாக
ஆமீன்
ஹில்மி சேரின் ஓய்வு காலம் சிறப்பானதாகவும், அமைதியானதாகவும், இறைவனின் பொருத்தம் பெற்றதாகவும் அமைவதுடன் சிறந்த தேகாரோக்கியத்துடனும் வாழ அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றோம்