Kashiful Uloom Arabic College - Nintavur

Kashiful Uloom Arabic College - Nintavur - official page -
KASHIFI MEDIA DIVISION

 #புதிய_அதிபர்  #மற்றும்  ிபர்கள்  #நியமனம்நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் புதிய அதிபராக அஷ்ஷெய்க் முஹம்மட் ...
09/06/2026

#புதிய_அதிபர் #மற்றும் ிபர்கள் #நியமனம்

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் புதிய அதிபராக அஷ்ஷெய்க் முஹம்மட் முஹம்மட் அஸ்லம் பலாஹி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

20 வருடங்களுக்கு மேற்பட்ட ஆசிரியர் மற்றும் அதிபர் சேவை அனுபவம் கொண்ட இவர், கல்வி, நிர்வாகம் மற்றும் மாணவர் வழிகாட்டல் துறைகளில் சிறந்த அனுபவத்தையும் திறமையையும் கொண்டவராக அறியப்படுகிறார். இவரது நியமனம் கல்லூரியின் கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அதிபர் மற்றும் உப அதிபர்கள் நியமனம் மற்றும் அறிமுக நிகழ்வு கல்லூரியின் கூட்ட மண்டபத்தில், கல்லூரியின் தலைவர் அல்-ஹாஜ் ஏ.எம்.எம். ரஸீன் அவர்களின் தலைமையில், நிர்வாக அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில் 2026.06.07ம் திகதி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ நீதிபதி அல்-ஹாபிழ் அப்துல்லாஹ் அவர்கள் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.

மேலும், கல்லூரியின் பொருளாளர் அல்-ஹாஜ் ஏ. ஆதம் பாவா (பொறியியலாளர்), செயலாளர், நிர்வாக சபை உறுப்பினர்கள், புதிய அதிபர், உப அதிபர்கள், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது புதிய அதிபர் மற்றும் உப அதிபர்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், கல்லூரியின் கல்வி மேம்பாடு, ஒழுக்கக் கட்டமைப்பு, நிர்வாக வலுவூட்டல் மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

அத்துடன், உப அதிபர்களுக்கான கடமைப் பட்டியல்களும் கையளிக்கப்பட்டன. புதிய நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கல்லூரியின் கல்வி மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளை மேலும் திறம்பட முன்னெடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

கலந்துகொண்ட அனைவரும் புதிய அதிபர் அஷ்ஷெய்க் முஹம்மட் முஹம்மட் அஸ்லம் பலாஹி அவர்களையும் உப அதிபர்களையும் அன்புடன் வரவேற்று, அவர்களது பணிகள் வெற்றிகரமாக அமையவும், கல்லூரி கல்வி மற்றும் ஆன்மீகத் துறைகளில் மேலும் முன்னேற்றம் காணவும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

ஊடகப் பிரிவு
காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி
நிந்தவூர்

 #ஹஜ்_பெருநாள்_வாழ்த்துக்கள்நபியுல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தையும் அல்லாஹ்வுக்கான முழுமையான கீழ்ப்படிதலையும...
28/05/2026

#ஹஜ்_பெருநாள்_வாழ்த்துக்கள்

நபியுல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தையும் அல்லாஹ்வுக்கான முழுமையான கீழ்ப்படிதலையும் நினைவுகூரும் புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு, காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி சார்பாக அனைவருக்கும் இதயம் கனிந்த ஈத் முபாரக் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

“அல்லாஹ் தஆலா எமது நற்கிரியைகளையும் குர்பானிகளையும் ஏற்றுக்கொண்டு, அனைவருக்கும் சமாதானத்தையும் பரக்கத்தையும் வழங்குவானாக.”
“தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்”

ஊடகப் பிரிவு
காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி, நிந்தவூர்

 #தர்பியா_அமர்வு_12நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் மாணவர் திறன் விருத்தி மையம் ஏற்பாடு செய்த “தர்பியா அமர்வு...
24/05/2026

#தர்பியா_அமர்வு_12

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் மாணவர் திறன் விருத்தி மையம் ஏற்பாடு செய்த “தர்பியா அமர்வு – 12” 21.05.2026 அன்று கல்லூரி பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் என்.எம். பாரிஸ் தப்லீகி அவர்கள் கலந்து கொண்டு, துல் ஹஜ் மாதத்தின் சிறப்புகள் மற்றும் மாணவர்களின் ஒழுக்க மேம்பாடு குறித்து பயனுள்ள உரையாற்றினார்.

இவ்வமர்வு மாணவர்களின் ஆன்மிக மற்றும் நற்பண்பு வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதாக அமைந்தது.

ஊடகப் பிரிவு
காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி – நிந்தவூர்

#தர்பியா_அமர்வு #காஷிபுல்உலூம் #நிந்தவூர்

 #நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி மாணவர்கள், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கல்முனையில் நடைபெற்ற விசேட  #போதை_ஒ...
23/05/2026

#நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி மாணவர்கள், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கல்முனையில் நடைபெற்ற விசேட #போதை_ஒழிப்பு_பேரணியில்_பங்கேற்றனர்.

“ #போதைப்பொருளுக்கு_எதிராய்_எம்_தேசத்திற்காய்”என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஊடகப் பிரிவு
காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி
நிந்தவூர்

 #இலங்கை  #ஜனாதிபதி_செயலகத்தை  #பார்வையிட்ட_காஷிபுல்  #உலூம்_அரபுக்  #கல்லூரி_மாணவர்கள்.(2026.05.06)நிந்தவூர் காஷிபுல் உ...
10/05/2026

#இலங்கை #ஜனாதிபதி_செயலகத்தை #பார்வையிட்ட_காஷிபுல் #உலூம்_அரபுக் #கல்லூரி_மாணவர்கள்.

(2026.05.06)

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் வருடாந்த கல்விச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக, கல்லூரி மாணவர்கள் இலங்கை ஜனாதிபதி செயலகத்தை பார்வையிட்டனர்.

இந்த விஜயத்தின் போது, அரசின் நிர்வாக செயற்பாடுகள், ஜனாதிபதி நிதியம் தொடர்பான பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அரச சேவைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும், சமூக நலத்திட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் சேவை அமைப்புகள் பற்றிய தெளிவான அறிவையும் மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.

விஜயத்தின் நிறைவாக, ஜனாதிபதி செயலகத்தின் சார்பில் மாணவர்களுக்கு நினைவுப் பரிசாக மரக்கன்றுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இந்த பயனுள்ள விஜயம் மாணவர்களுக்கு அரசின் செயற்பாடுகளை நேரடியாக அறிந்து கொள்ளும் சிறந்த அனுபவமாக அமைந்தது.

அல்ஹம்துலில்லாஹ்...

ஊடகப் பிரிவு
காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி
நிந்தவூர்

 #கல்விச்_சுற்றுலா  #நாள் 03(2026.05.08ம் திகதி) எமது நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் வருடாந்த கல்விச் சுற்ற...
10/05/2026

#கல்விச்_சுற்றுலா #நாள் 03
(2026.05.08ம் திகதி)


எமது நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் வருடாந்த கல்விச் சுற்றுலாவின் மூன்றாம் நாள், அல்லாஹ்வின் பேரருளால் இனிதும் பயனுள்ள வகையிலும் வெற்றிகரமாக நிறைவுற்றது.

அன்றைய தினம் எமது மாணவர்கள் பின்வரும் முக்கிய இடங்களை பார்வையிட்டனர்:

📍 கில்ரிய்யா அரபுக் கல்லூரி – வெலிகம
📍 வரலாற்று சிறப்பு மிக்க வெலிகம கப்பல் பள்ளிவாசல்
📍 ஸ்டில்ட் மீனவர்கள் (Stilt Fishermen)
📍 காலி தால்பா கடற்கரை 🏝️
📍 கின்தோட்ட புகாரி அரபுக் கல்லூரி
📍 காலி கோட்டை
📍 அர்-ரஷாதிய்யா அரபுக் கல்லூரி – பொத்துவில்

இந்நாள் பயணம் மாணவர்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை நேரடியாக பார்வையிடும் வாய்ப்பையும், சமூக மற்றும் பண்பாட்டு அனுபவங்களையும் பெற்றுத் தரும் அரிய கல்வி வாய்ப்பாக அமைந்தது.

அல்ஹம்துலில்லாஹ்…! 🤲🏻

இந்த கல்விச் சுற்றுலா முழுவதும் மாணவர்களின் அறிவு வளர்ச்சி, அனுபவ விரிவு மற்றும் சமூகப் புரிதலை மேம்படுத்தும் ஒரு சிறந்த கல்வி வாய்ப்பாக அமைந்தது.

இச்சிறப்பான பயணத்தை சிறப்பாக வழிநடாத்திய ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், பொதுக் கல்வி ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கும், மேலும் முழுப் பயணத்திலும் ஒத்துழைப்பு வழங்கிய மாணவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜஸாகுமுல்லாஹு கைரன் 🤍

ஊடகப் பிரிவு
காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி
நிந்தவூர்

 #கல்விச்_சுற்றுலா  #நாள் 02(2026.05.06ம் திகதி) எமது நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் வருடாந்த கல்விச் சுற்ற...
09/05/2026

#கல்விச்_சுற்றுலா #நாள் 02
(2026.05.06ம் திகதி)


எமது நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் வருடாந்த கல்விச் சுற்றுலாவின் இரண்டாம் நாள், அல்லாஹ்வின் பேரருளால் இனிதும் பயனுள்ள வகையிலும் வெற்றிகரமாக நிறைவுற்றது.

அன்றைய தினம் எமது மாணவர்கள் பின்வரும் முக்கிய இடங்களை பார்வையிட்டனர்:

📍 ரஷாதியா அரபுக் கல்லூரி – கொழும்பு
📍 இலங்கை ஜனாதிபதி செயலகம்
📍 இலங்கை ஜனாதிபதி மாளிகை

📍 தீனியா அரபுக் கல்லூரி
📍 இப்னு உமர் இஸ்லாமிய உயர் கற்கைப் நிலையம்
📍 கொச்சி மலை பள்ளிவாசல் - Beruwala
📍 பாரி அரபுக் கல்லூரி – வெலிகம

இந்நாள் பயணம் மாணவர்களுக்கு தேசிய நிர்வாக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக சூழல்களை நேரடியாக அறிந்து கொள்ளும் அரிய அனுபவமாக அமைந்தது.

அல்ஹம்துலில்லாஹ்…! 🤲🏻

இந்த கல்விச் சுற்றுலா தொடர்ச்சியாக மாணவர்களின் அறிவு வளர்ச்சி, அனுபவ விரிவு மற்றும் சமூகப் புரிதலை மேம்படுத்தும் ஒரு சிறந்த கல்வி வாய்ப்பாக அமைந்து வருகிறது.

எமக்கு அன்புடன் வரவேற்பளித்து, உணவு, தங்குமிடம் மற்றும் அனைத்து வகையிலும் சிறந்த ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஜஸாகுமுல்லாஹு கைரன் 🤍

ஊடகப் பிரிவு
காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி
நிந்தவூர்

 #கல்விச்_சுற்றுலா  #நாள் 01 (2026.05.05ம் திகதி) எமது நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் வருடாந்த கல்விச் சுற்...
09/05/2026

#கல்விச்_சுற்றுலா #நாள் 01

(2026.05.05ம் திகதி)


எமது நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் வருடாந்த கல்விச் சுற்றுலாவின் முதல் நாள் இனிதும் பயனுள்ள வகையிலும் நிறைவுற்றது.

அன்றைய தினம் எமது மாணவர்கள் கீழ்க்காணும் முக்கிய இடங்களை பார்வையிட்டனர்:

📍 மதீனது இல்ம் அரபுக் கல்லூரி
📍 இலங்கை நாடாளுமன்றம்
📍 மவாஹிபுல் உலூம் அரபுக் கல்லூரி
📍 கொழும்பு நூதனசாலை
📍 இலங்கை துறைமுக நகரம் – கொழும்பு
📍 இலங்கை தாமரை கோபுரம்

இப்பயணம் மாணவர்களின் கல்வி அறிவு, சமூக அனுபவம் மற்றும் தேசிய விழிப்புணர்வை மேம்படுத்தும் அருமையான கல்வி வாய்ப்பாக அமைந்தது.

அல்ஹம்துலில்லாஹ்…!

இந்த கல்விச் சுற்றுலா எமது மாணவர்களுக்கு புதிய அறிவும் அனுபவமும் கிடைக்கச் செய்ததோடு, பல கல்வி மற்றும் சமூக நிறுவனங்களுடனான உறவுகளை வலுப்படுத்திய ஒரு சிறந்த நிகழ்வாகவும் அமைந்தது.

எமக்கு அன்புடன் வரவேற்பளித்து, உதவியும் ஒத்துழைப்பும் வழங்கி, சிறந்த விருந்தோம்பலுடன் நடந்து கொண்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஜஸாகுமுல்லாஹு கைரன் 🤍

ஊடகப் பிரிவு
காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி
நிந்தவூர்

 #இவ்வருடத்தின்_கல்விச்  #சுற்றுலா_இனிதே  #ஆரம்பமானது.  #அல்ஹம்துலில்லாஹ் 🤲🏻 #அனைவரும்_தங்களது தூஆக்களில் இணைத்துக் கொள்...
05/05/2026

#இவ்வருடத்தின்_கல்விச் #சுற்றுலா_இனிதே #ஆரம்பமானது.
#அல்ஹம்துலில்லாஹ் 🤲🏻
#அனைவரும்_தங்களது தூஆக்களில் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஊடகப் பிரிவு

Address

Hospital Road
Nintavur
32340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kashiful Uloom Arabic College - Nintavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share