05/04/2026
2008 ஆம் ஆண்டு முதல் வணிகக் கல்விப் பாடத்தினை கற்பிக்கும் எனக்கு இது 18 ஆவது ஆண்டாகும் 2025 ஆம் ஆண்டு பெறுபேறுகளில் வணிகக் கல்விப் பாடத்தில் 51 A தரச்சித்திகள் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை உருவாக்குவதற்கு உறுதுணையாய் அமைந்த அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.
என்னை வணிகக் கல்விப் பாடத்தில் ஓர் தேசிய அளவிலான விரிவுரையாளராக்குவதற்கு பல்வேறு வழிகளிலும் உதவிய, கிழக்கிலங்கையில் வணிகக் கல்விப் பாடத்தை கற்பிப்பதற்கு வாய்ப்பளித்த கணக்கீட்டுப் பாடத்தின் ஈடுஇணையற்ற ஆசிரிய பெருந்தகை ஐ.எல்.ஏ.சலாம் அவர்களுக்கும் இத்தருணத்தில் சிரந்தாழ்த்தி நன்றி நவில்கின்றேன்.
மேலும், எனது இந்த பயணத்தில் தொடர்ச்சியாக என்னை நம்பிய அனைத்து மாணவர்களுக்கும் என் அணுகு முறைகளை பின்பற்றிய அனைத்து மாணவர்களுக்கும் என்னுடைய கற்பித்தல் பயணத்தில் பல்வேறு வழிகளிலும் உதவிய என்னுடைய சக ஆசிரிய பெருந்தகைகளான திரு. ஆனந்தகுமார், திரு. கிரிதரன், திரு. புகனேஸ்வரன் ஆகியோருக்கும் சிரந்தாழ்த்தி நன்றி நவில்கின்றேன்.
குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு சவால்களிலும் என்னுடன் துணையாக நின்ற கணக்கீட்டுப் பாடத்தின் ஈடுஇணையற்ற ஆசிரிய பெருந்தகை ஐ.எல்.ஏ.சலாம் அவர்களுக்கு திரு. புகனேஸ்வரன் அவர்களுக்கு
என்னுடைய நண்பராகிய சட்டத்தரணி நேரு கருணாகரன் அவர்களுக்கும் மற்றும் ஏனைய நண்பர்கள் குறிப்பாக என்னுடைய குடும்பத்தினருக்கும் சிரந்தாழ்த்தி நன்றி நவில்கின்றேன்.
கடந்த மூன்று ஆண்டுகளாக என்னுடைய வணிகக் கல்வி கையேடுகளை முறையாக தட்டச்சு செய்து நேர்த்தியாக வழங்கி வருகின்ற வை.எம்.முஸாகிர் அவர்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இவ்வருடப்பெறுபேறுகள் பல்வேறு வழிகளிலும் சிறப்பு வாய்ந்ததாக காணப்பட்ட அதேவேளை அதற்கு மகுடம் சூட்டும் வண்ணம் அகில இலங்கை ரீதியில் வர்த்தகப் பிரிவில் முதலாம் இடம்பெற்ற மாணவனுக்கு எனது கருத்தரங்கினை நடாத்துவதற்கு வாய்ப்பளித்த கணக்கீட்டுப் பாடத்தின் ஈடுஇணையற்ற ஆசிரிய பெருந்தகை ஐ.எல்.ஏ.சலாம் அவர்களுக்கும், வணிகக் கல்விப்பாட பெருந்தகை எஸ்.எல்.நசீர் அவர்களுக்கும், காத்தான்குடி அல்-மனார் கல்வி நிறுவனத்திற்கும் சிரந்தாழ்த்தி நன்றி நவில்கின்றேன்.
இறுதியாக என்னை உருவாக்கிய என் சமூகத்திற்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியினை சமர்ப்பிப்பதோடு 51 மாணவர்கள் A தரச்சித்தியினையும் 96 வீதமான மாணவர்கள் இப்பாடத்தில் சித்தி எய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பணி இனியும் தொடரும் உங்கள் ஆதரவோடு…..
என்னுடைய முயற்சி யாரையும் தோற்கடிப்பதல்ல எம் சமூகம் வெல்வதே…
வணிகக் கல்வி ஆசான்
திரு.பா.பானுச்சந்தர்.