Puttalam Zahira

Puttalam Zahira Official Zahira College Page

12/02/2024
09/04/2021
20/03/2021
19/12/2020

இன்னொரு அழகிய மாலைப்பொழுது அதிலும் விசேடமாக கத்தாரின் தேசிய தினம் புத்தளம் சாஹிராவிம் வசமானது.

ஆம் இன்று புத்தளம் சாஹிரா கத்தார் மண்ணில் சாதனைப்படைத்தது.

Zahira College Colombo OBA Qatar கொழும்பு சாஹிரா பழைய மாணவர் அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்ட அணிக்கு 7வர் கொண்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் கடந்த வாரம் நடந்த முதல் சுற்றுப்போட்டியில் குழுவில் முதல் அணியாக வெற்றிபெற்று அரையிறுதி போட்டிக்கு தெரிவானது.

இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் கம்பளை சாஹிரா அணிக்கு எதிராக 9 க்கு 4 என்ற கோல் அடிப்படியில் சிறப்பான வெற்றிபெற்று இறுதிப்போட்டியில் மாவனல்லை சாஹிராவிடம் மோதி 4க்கு 3 என்ற வெற்றிக்கோல்களை பெற்று எந்த போடியிலும் தோல்வியடையாது செம்பியன் பட்டத்தை கட்டார் மண்ணில் சாதனையைப் பதிந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

இந்த வெற்றி புத்தளத்துகான வெற்றி. கட்டார் வாழ் புத்தளம் மக்களின் வெற்றி. நாங்கள் ஒவ்வொருவரும் இவ்வெற்றியின் உரிமையாளர்கள்.

களத்தில் அனல் பறந்த வீரர்களின் போராட்டம், தலைமைப்பயிற்றுவிப்பாளரின் ஒவ்வொறு நொடிக்குமான அறிவுறுத்தல்கள், சாஹிரா கால்பந்தாட்ட அணியின் நிர்வாக குழுவினரின் ஒன்றிணைந்த கள ஏற்பாடுகள், புத்தளம் சகோதரர்களின் வின்னைப்பிளந்த ‘GO ZAHIRA GO’ ஆதரவு கோசங்கள் அனைத்தும் ஒறுமித்து இந்த வெற்றிக்கிண்ணத்தை எமதாக்கியது.

நீண்ட நாட்களுக்கு பின்னர் புத்தளம் சாஹிராவின் பாடசாலைக் கீதம் ஒலித்து எம்மை மீண்டும் பாடசாலை உணர்வில் 100% கட்டிப்போட்டது, இங்கு எமக்கு கிடைத்தது இறைவனின் அருட்கொடையின்றி வேறில்லை.

மீண்டும் மீண்டும் அல்லாஹ்விற்கு நன்றிகூரி புத்தளம் சாஹிராவின் வெற்றியை கொண்டாடுவோம். GO ZAHIRA GO!

02/10/2020
02/10/2020

புத்தளம் சாஹிரா கல்லூரியில் சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டங்கள் அனுஷ்டிக்கப்பட்டன. எமது நாடு எமது கைகளில் என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வில் பகுதி ரீதியாக பல்வேறு கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டிருந்தன. மேலும் எமது பழைய மாணவர்களில் துறைசார்ந்தோரை அறிமுகம் செய்து அவர்களது Motivation பகிர்விற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. சகல பகுதி தலைவர்கள் , வகுப்பு, ஆசிரியர்கள் மிகவும் ஆர்வத்தோடு உற்சாகத்துடன் அழகுற செய்து முடித்தனர். மாணவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் அன்பளிப்பு பொருட்கள் வழங்கி அவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஜஸாக்கல்லாஹ் அல்லாஹ் உங்களுடைய சேவைகளை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் உங்களுடைய வாழ்வில் அல்லாஹ் பரக்கத்து செய்ய பிரார்த்திக்கின்றோம்.💐💐💐

29/09/2020

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் மாணவர் தேசிய படையணி (cadate) மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி 'கோப்ரல்' பதக்கத்தினை 2019 ல் சுவீகரித்த மாணவன் M.F.M.FAADHIL என்பவருக்கு கல்லூரி அதிபர் H.ABDUL JABBAR அவர்களால் சான்றிதழ் வழங்கப்படும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த மாணவர் தற்பொழுது ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியில் கல்வி கற்று வருகிறார். இப்பயிற்சிகள் ரந்தனிகலையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவரை பயிற்றுவித்து அழைத்து சென்ற திரு பிரேமானந்தன் அவர்களுக்கு பாடசாலை சார்பாக மனமார்ந்த நன்றிகள் , அவரை மனமுவந்து வாழ்த்துகின்றோம். 💐💐💐

Address

Mannar Road
Puttalam
61300

Alerts

Be the first to know and let us send you an email when Puttalam Zahira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Puttalam Zahira:

Share