An Nahjathul Islamiyya Arabic College -Valaichchenai

An Nahjathul Islamiyya Arabic College -Valaichchenai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from An Nahjathul Islamiyya Arabic College -Valaichchenai, College & University, Jamiyya Road, Valaichchenai.

அல்ஹம்துலில்லாஹ் !25/07/2026ம் திகதி சனிக்கிழமை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில்  கல...
26/07/2026

அல்ஹம்துலில்லாஹ் !

25/07/2026ம் திகதி சனிக்கிழமை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலைமாணி(BA) பட்டம் பெற்று வெளியாகிய எமது நஹ்ஜாவின் பழைய மாணவர் அஷ்ஷெய்க் SM. றசீம்(நஹ்ஜி) அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவர்கள் தனது பட்டப்படிப்பில் "அரசியல் விஞ்ஞானம்(Political Science) , Information Technology மற்றும் ஆங்கிலம் (English) உட்பட பல பாடங்களை பயின்றுள்ளார். மேலதிகமாக Higher National Diploma in Information Technology(IT)மற்றும் Diploma in Human Resources Management பயின்றுள்ளார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களது அறிவிலும் வாழ்விலும் பரக்கத் செய்ய வேண்டும் என்ற துஆவுடன் நஹ்ஜாவின் அதிபர், ஆசிரியர்கள் ,நிர்வாகிகள், பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட அனைவரும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

19/06/2026

I got over 3,500 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

14/06/2026
14/06/2026

2026.06.06ம் திகதி எமது வாழைச்சேனை அந் நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபுக் கல்லூரியில் நடைபெற்ற ஏழாவது பட்டமளிப்பு விழாவின் போது வெளியிடப்பட்ட “அந்நஹ்ஜா” எனும் சிறப்பு மலர் பற்றிய சுருக்கமான கானொளி

வாழ்த்துச் செய்திஎமது வாழைச்சேனை அந் நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபுக்கல்லூரியில் 2007 ஆம் ஆண்டு மௌலவி பட்டம் பெற்று வெளியேறிய க...
09/06/2026

வாழ்த்துச் செய்தி

எமது வாழைச்சேனை அந் நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபுக்கல்லூரியில் 2007 ஆம் ஆண்டு மௌலவி பட்டம் பெற்று வெளியேறிய கல்லளைப் பகுதியைச் சேர்ந்த அஷ் ஷேக் B.M. ரபீக் (நஹ்ஜி) அவர்கள், 2026.06.06 ஆம் திகதி BMICH இல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் Higher Diploma in Psychology and Counseling பட்டத்தை வெற்றிகரமாகப் பெற்று கல்விப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.

மார்க்கக் கல்வியுடன் நவீன அறிவுத் துறைகளிலும் தன்னை மேம்படுத்திக் கொண்டு சமூகத்திற்கு பயனுள்ள சேவையாற்றும் நோக்கில் தொடர்ந்து முன்னேறி வரும் தங்களின் இந்த சாதனை பாராட்டத்தக்கதாகும். உங்களது அர்ப்பணிப்பு, முயற்சி மற்றும் கல்வி மீதான ஆர்வம் பலருக்கும் முன்மாதிரியாக அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

அல்லாஹ் தஆலா தங்களது அறிவையும் ஆற்றலையும் மேலும் அதிகரித்து, உங்களது கல்வி மற்றும் சமூகப் பணிகளை ஏற்று அருள்வானாக. மேலும் பல உயரிய கல்வித் தகுதிகளையும் சிறப்பான சேவைகளையும் பெற்றிட அருள் புரிவானாக.

வாழைச்சேனை அந் நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபுக்கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் பழைய மாணவர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் துஆக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

بارك الله فيكم ووفقكم الله لما يحب ويرضى
அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்து, அவன் விரும்பும் நற்செயல்களில் தொடர்ந்து வெற்றியடையச் செய்வானாக.

آمين

With Thehotlinelk – I just got recognized as one of their top fans! 🎉
08/06/2026

With Thehotlinelk – I just got recognized as one of their top fans! 🎉

08/06/2026
08/06/2026

🎓✨ மனமார்ந்த வாழ்த்துக்கள்! ✨🎓

கல்விப் பயணத்தில் மேலும் ஒரு பெருமைமிகு அத்தியாயத்தை பதிவு செய்த
மெளலவி. BM. ரபீக் (நஹ்ஜீ) அவர்களுக்கு
எங்கள் இதயம் கனிந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

அறிவாலும், மனிதநேய சேவையாலும் சமூகத்திற்கு ஒளிவிளக்காக திகழ்ந்து,
இன்னும் பல சாதனைகள் புரிய இறைவனின் அருளும் நலனும் என்றும் தொடரட்டும். 🤲

📚 “அறிவு மனிதனை உயர்த்தும்;
அதை பகிர்வது சமூகத்தை உயர்த்தும்.”

#மனமார்ந்த_வாழ்த்துகள்









GNM VOICE Gallella • Nelsonpura • Majidpura

08/06/2026

🎓வாழைச்சேனை அந்நஹ்ஜதுல் இஸ்லாமிய்யாஹ் அரபுக்கல்லூரியின்
ஏழாவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (06.06.2026) வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

2018ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை எட்டு வருடங்கள் கல்வி பயின்று மௌலவி பட்டம் பெற்ற மாணவர்களுக்கு “அல் ஆலிம் நஹ்ஜி” பட்டமும், அல் குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கு “அல் ஹாபிழ்” பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதில் எமது ஊரைச் சேர்ந்த,
🌿 AH. சஹான் (நஹ்ஜி)
🌿 S. அகீல் (நஹ்ஜி)
ஆகிய சகோதரர்கள்
“அல் ஆலிம் நஹ்ஜி”
பட்டம் பெற்று கொண்டனர்.

💐 இரு சகோதரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

#அல்_ஆலிம்_நஹ்ஜி
#பட்டமளிப்பு_விழா
#வாழைச்சேனை
#மனமார்ந்த_வாழ்த்துக்கள்


GNM VOICE Gallella • Nelsonpura • Majidpura

07/06/2026

Address

Jamiyya Road
Valaichchenai
30400

Website

Alerts

Be the first to know and let us send you an email when An Nahjathul Islamiyya Arabic College -Valaichchenai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share